Posts

Showing posts from December, 2022

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  செபம் என்பது ஆன்மாவின் ஒளி, கடவுளைப் பற்றிய உண்மையான அறிவை நமக்கு அளிக்கிறது. இது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் இணைப்பு. Prayer is the light of the soul, giving us true knowledge of god.it is a link mediating between god and man. St.John chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தீமை செய்யும் எந்த மனிதனுக்குமே,வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.நன்மை செய்யும் அனைவருக்குமே மகிமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.ஏனெனில் ஆளுக்கொரு நீதி என்பது கடவுளிடம் இல்லை. உரோமையர் 2(9-11) சேசுவுக்கே புகழ் தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள

Image
  பிள்ளைகளே, உங்கள் தந்தையின் அறிவுரைகளைக் கேட்டு, நீங்கள் மீட்பு அடையும் பொருட்டு அவைகளின்படி நடந்து வாருங்கள்.ஏனென்றால் ஆண்டவர், பிள்ளைகள் தந்தையை மதிக்க வேண்டும் என்றும், தாயின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் நியமித்திருக்கிறார். தன் தாயை மதிக்கிறவன் செல்வங்களைச் சேர்த்தவன் போல வாழ்வான் தன் தந்தையை மதிக்கிறவன் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான். அவன் வேண்டுதலும் கேட்கப்படும்.  தன் தந்தையை மதிக்கிறவன் நெடுங்காலம் வாழ்வான். தன் தந்தைக்குக் கீழ்ப்படிகிறவன் தாய்க்கு உதவுவான். தெய்வ பயமுள்ளவன் தாய் தந்தையரை மதிக்கிறான்; தன்னைப் பெற்றவர்களுக்குத் தலைவர்களுக்குச் செய்வது போல் ஊழியம் செய்வான். செயலிலும் சொல்லிலும் பொறுமையிலும் உன் தந்தைக்கு மரியாதை செய். அதனால் உனக்கு அவனுடைய ஆசி கிடைக்கும். அவன் ஆசியும் உன் வாழ்நாள் வரை உன்னோடு இருக்கும். தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும். தாயின் சாபமோ பிள்ளைகளுடைய குடும்பங்களின் அடித்தளத்தைப் பிடுங்கி விடும். சீராக் 2(2-3 / 6-11) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  பிறர் என்ன நினைப்பார்களோ என்ற கவலையால், சரியான முடிவினை எடுக்காதபோது, தீமை அதன் சக்தியைப் பெறுகிறது.  திருத்தந்தை பெனடிக்ட் XVI, Evil draws its power from indecision and concern for what other people think.” ― Pope Benedict XVI, சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடலை போன்ற கவலையைக் காட்டிலும் ஒரு துளி பிரார்த்தனை மதிப்பு வாய்ந்தது.  புனித ஜஸ்டின் A drop of prayer is worth more than a sea of worry.  St. Justin. Today's society does not pray.  That is why it is falling apart. இன்றைய சமுதாயம் ஜெபிப்பதே இல்லை. அதனால்தான் அது வீழ்ச்சியடைகிறது. " சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  கர்த்தாவே, உமது பரிசுத்த நாமம் ஆசீர்வதிக்கப்படட்டும், எனக்கு எந்த மனித புகழ்ச்சியும் கொடுக்கப்படக்கூடாது. நீயே என் மகிமை. நீரே என் இதயத்தின் மகிழ்ச்சி. உம்மில் நான் நாள் முழுவதும் மகிமைப்படுவேன், மகிழ்ச்சியடைவேன், என் பலவீனங்களைத் தவிர வேறொன்றிலும் நான் மேன்மை பாராட்ட மாட்டேன். தாமஸ் கெம்பீஸ். Lord, let Your holy name be blessed, but let no human praise be given to me. You are my glory. You are the joy of my heart. In You I will glory and rejoice all the day, and for myself I will glory in nothing but my infirmities. Thomas kempis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  கடவுள் பரிவு காட்டுவது உன்னை மனந்திரும்ப தூண்டுவதற்கே என்பதை அறிந்தாயோ? உன் முரட்டுத் தனம் உன்னை மனந்திரும்ப விடவில்லை; ஆகையால் கடவுளின் சினமும் நீதித்தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உன்மேல் விழப்போகும் தண்டனையை நீ சேர்த்து வைக்கின்றாய்.அவர் ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்ப கைம்மாறு தருவார். உரோமையர் 2(4-6) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நம் உடலைக் குணப்படுத்த கசப்பான மற்றும் விரும்பாத மருந்துகளை நமக்குத் தரும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்துவர்களாக இருக்கிறோம், ஆனால் நாம் சந்திக்கும் அனைத்தும் நமது நன்மைக்காகவும் கடவுளுடைய கொள்கைகளுக்கு இணங்கவும் என்று புரிந்து கொள்ளாமல், கடுமையானதாகத் தோன்றியதற்காக கடவுளுக்கு நன்றியற்றவர்களாக இருப்பது அபத்தமானது. புனித அந்தோணியார். It is absurd to be grateful to doctors who give us bitter and unpleasant medicines to cure our bodies and yet to be ungrateful to God for what appears to us to be harsh, not grasping that all we encounter is for our benefit and in accordance with his providence.  St Anthony the Great. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  காதலிக்க இரண்டுபேர் மட்டும் அல்ல  மூன்று பேர் தேவை,  நீங்கள், உங்கள் மனைவி மற்றும் கடவுள். கடவுள் இல்லாமல் ஒருவர்  மற்றொருவரிடமுள்ள மோசமானவற்றை மட்டுமே வெளிக்கொண்டு வருவதில் வெற்றி பெறுகிறார்கள். ஒருவரையொருவர் நேசிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாத காதலர்கள் வேறு எதுவும் இல்லை என்று விரைவில் கண்டுபிடிப்பார்கள். கடவுள் என்ற மைய விசுவாசம் இல்லாமல் குடும்ப வாழ்க்கை முழுமையும் முடிவும்  அடையாது. பேராயர் புல்டன் ஷீன். It takes three to make love, not two: you, your spouse, and God. Without God people only succeed in bringing out the worst in one another. Lovers who have nothing else to do but love each other soon find there is nothing else. Without a central loyalty life is unfinished.” ― Fulton J. Sheen. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையபபரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை.நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்;  உண்மைக்கேற்ப வாழாதவராவோம்.மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம்.  1 யோவான்(5-7) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பாவிகளை மனமாற்றம் செய்து அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வருபவர்களுக்கு கடவுள் நித்திய ஜீவனை அளிப்பார் அர்ச்.மரியம் த்ரேசியா. “God will give eternal life to those who convert sinners and bring them to the right path.” St.Mariam Thresia. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
 என் மக்களே !தந்தையின் சொற்களை கேளுங்கள் ;உண்மை வழி நின்று ஆண்டவருக்கு ஊழியம் செய்யுங்கள்.அவருக்கு விருப்பமானதையே செய்ய முயலுங்கள் .உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை புகட்டி நீதிவழி நடந்து தானம் செய்யவும்,கடவுளை நினைத்து என்றென்றும் உண்மையோடும் முழு ஆற்றலோடும் அவரைப் போற்றவும் வேண்டும் என்று எச்சரித்து வையுங்கள். தொபியாசு 14(10-11) சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆண்டவர் எல்லா பாவிகளையும்  அழைக்கிறார், அவர்களில் மிக மோசமானவர்களுக்கு தனது கரங்களை அகலமாக திறக்கிறார். அவர்கள் வந்தால் மட்டுமே அவர் அனைவரையும் தனது கரங்களில் தாங்கிக்கொள்கிறார். அர்ச். ஜான் கிரிசோஸ்டம் The lord calls to himself all sinners,he opens his arms wide, even to the worst among them.he takes them all in his arms,if only they will come. st john chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளைப் பற்றிய அறியாமையாலும், தவாறான நம்பிக்கையாலும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளுதலே எல்லா தீமைகளுக்கும் காரணம்.  புனித அந்தோணியார். The cause of all evils is delusion, self-deception and ignorance of God. St. Anthony the Great. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மனிதர்களாகிய நம்மை, கடவுளின் பிள்ளைகளாக மாற்றுவதற்கு கடவுளின் மகன், மனிதரானார். The son of god became a man to enable men to become sons of god. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  Don't deceive people with the word "mercy". God forgives sins only if we repent of them."  -Cardinal Robert Sarah கருணை என்ற வார்த்தையால் மக்களை ஏமாற்றாதீர்கள்.  நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி மனந்திரும்பினால் மட்டுமே கடவுள் பாவங்களை மன்னிப்பார்.  -கார்டினல் ராபர்ட் சாரா. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  All of us are born to live, love and serve the Lord in this earth to love him in the next. Jesus Christ is the only man who was born in order to die. That’s a heavy burden to lay on a mother’s heart.  Bishop Fulton sheen. நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ்வதற்கும், இறைவனை நேசிப்பதற்கும் அவருக்கு சேவை செய்வதற்கும் பிறந்தவர்கள்.ஆனால்  இறப்பதற்காக பிறந்த ஒரே மனிதர் இயேசு கிறிஸ்து மட்டுமே. இது  தேவதாயின் மாசற்ற இருதயத்தில் சுமத்தப்பட்ட கனமான சுமை. பேராயர் புல்டன் ஷீன். சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  நாம் சலிப்படையவதன் காரணம், அன்பு செய்யாததால் தான். ஆயர்.புல்டன் ஷீன். The reason we’re bored is because we don’t love anything. Bishop Fulton sheen. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சமாதானமான கிறிஸ்துமஸை அமைதியற்ற உலகில் கண்டடைவது எப்படி?  நீங்கள் வெளியில் சாமாதனத்தை காண முடியாது, உங்கள் உள்ளத்திலே சமாதானத்தை உணரலாம். தேவமாதா  தன் உடலுக்கு என்ன செய்ய அனுமதித்தார்களோ அதையே கடவுள் உங்கள் ஆன்மாவிற்கு செய்ய அனுமதிப்பதன் மூலம், கிறிஸ்து உங்களிலும் உருவாகட்டும்.  ஆயர்.ஃபுல்டன் ஷீன்  How to find Christmas peace in a world of unrest? You cannot find peace on the outside but you can find peace on the inside, by letting God do to your soul what Mary let Him do to her body, namely, let Christ be formed in you.”  Fulton Sheen. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். எரேமியா29-13. சேசுவுக்கே புகழ்!தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளின் மகிமைக்காக உழைக்க நமது வாழ்க்கையில் குறுகிய தருணங்கள் மட்டுமே உள்ளன என்பது பசாசுக்கு 😈 நன்றாகவே தெரியும்,எனவே தேவையற்ற விஷயங்களில் நமது நேரத்தை வீணடிக்க முயற்சிக்கிறான்.  நம் நேரத்தை வீணாக்க வேண்டாம்! ஆன்மாக்களை காப்போம்! எண்ணற்ற ஆன்மாக்கள் ஒரு குளிர்காலங்களில் விழும் பனிப்பபோல நரகத்தில் விழுவதால்.., இயேசு அழுகிறார்! அவரை ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக, நம்முடைய சொந்த துக்கங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம்...'  அர்ச்.குழந்தை தெரசம்மாள். We have only short moments of this life to work for God's glory. The devil knows this and that is why he tries to make us waste time in useless things. O, let us not waste our time! Let us save souls! Souls are falling into hell innumerable as the flakes of snow on a winter day. Jesus weeps! Instead of consoling Him we are brooding over our own sorrows...' ~St. Therese of Lisieux~ சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்ததைகள்

Image
  கடின பாறைகளிலும் மனிதன் தன் கையை வைக்கிறான்.மலைகளையும் வேறோடு புரட்டி விடுகிறான்.பாறைகளில் சுரங்க வழிகளைக் குடைகின்றான்.விலையுயர்ந்த பொருள்களை அவன் கண் தேடுகிறது.ஆற்றின் ஊற்றுகளையும் ஆயந்து பரிசோதிக்கிறான்.மறைந்திருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறான்.ஆனால் ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்?அறிவின் இருப்பிடம் எங்கே உள்ளது?அதை அடையும் வழியை மனிதன் அறியான். ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானம்,தீமையை விட்டு விலகுவதே அறிவு.  யோபு 28(9-12/28) சேசுவுக்கே புகழ்!. தேவ மாதா வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  புனித்துவம் என்பது அசாதாரண செயல்களில் அல்ல, மாறாக கடவுளுக்கும், உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உங்கள் கடமைகளைச் நன்றாக செய்வதில் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். அர்ச். மாக்சிமிலியன் கோல்பே . Do not forget that holiness consists not in extraordinary actions, but in performing your duties towards God, yourself, and others well. St.Maximilian Kolbe. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மகிழ்ச்சியின் எல்லை நம்மால் மற்றவர்கள் மகிழ்ச்சியடைவது தான்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பசித்திருப்பவனுக்கு உன் உணவைப் பகிர்ந்து, துன்புற்றவன் விருப்பத்தை நிறைவு செய்தால், உன் வெளிச்சம் இருள் நடுவில் உதயமாகும், உன் காரிருள் பட்டப் பகல் போல் இருக்கும். ஏசாயா 58-10 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பழிவாங்க ஆசைப்படுகிறவனைக் கடவுள் தாமே பழிவாங்குவார்.அவன் பாவங்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்.உனக்குத் தீமை செய்யும் அயலானுக்கு மன்னிப்புக் கொடு;அப்போது தான் நீ மன்றாடும் போது உனக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும். சீராக் 28(1-2) சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் வலிமையைக் கொடுப்பதற்கு முன், நமது வெறுமையை உணர வைக்கிறார்.  பேராயர்.புலடன்ஷீன். Before He gives strength, He makes us feel our emptiness. Bishop Fulton sheen. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள். பிலிப்பியர் 2-3 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  எப்போதும் தீமையை செய்கிறவனும், தர்மம் செய்யாதவனும் நல்ல நிலையில் இருக்கப் போகிறதில்லை. சீராக் 12-3 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆட்டுக்குட்டியும் ஓநாயும் ஒன்றுசேர்வதா ?

Image
  சங்கைக்குரிய ஆயர்களே / குருக்களே... ஆட்டுக்குட்டியும் ஓநாயும் ஒன்றுசேர்வதா? பரிசுத்தக்கற்புள்ள குருத்துவத்தையே ஏற்றுக்கொள்ளாத பாஸ்டர்களோடு ஒன்றிப்பு செபமா? கத்தோலிக்க திருச்சபையும்  போலிச்சபைகளும் ஒன்றிப்பதா? பிரிவினை, பிறமத சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழவேண்டும். ஆனால் அவர்களுடன் ஒன்றுக்கூடி எப்படி செபிக்கமுடியும் .  ஒன்றாக வழிபடலாம்! எப்போது? நமது திருச்சபையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் ஒன்றுப்படடு வழிபடலாம். ஆனால் திவ்விய நற்கருணை, திருவருட்சாதனங்களை  ஏற்காதவர்கள்,தேவ மாதாவை பழிப்பவர்கள்,புனிதர்களை மதிக்காதவர்கள்,திருத்தந்தைக்கு கீழ்படியாதவர்களோடு கத்தோலிக்க திருச்பைக்கு எதிரான கொள்கை கொண்டவர்களோடு ஒன்றிப்பு செபம் அவசியமா?  திருச்சபைக்கு செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மத்தேயு 18-17 என ஆண்டவர் திருச்சபைக்கு செவிசாய்ககாதவர்களை எச்சரித்தார். இவர்களோ அதற்கும் மேலாக திருச்சபையை எதிரப்பவர்கள் அதன் கொள்கைகளை எதிர்ப்பவர்கள்,பகிரங்கமாக விமர்சிப்பவர்கள் இவர்களோடு ஒன்றிப்பு செபம் செய்வது ...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தீர்ப்பிடுமுன் முதலில் நீதியை கற்றுக்கொள்.பேசுவதற்கு முன் அறிந்து கொள்.தீர்மானத்திற்கு முன் உன்னையே ஆராய்ந்து பார்;கடவுள் முன்னிலையில் இரக்கத்தைக் காண்பாய். சீராக் 18-19 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டிவிடுகிறது. சீராக் 1-21 சேசுவுக்கே புகழ் ! தேவதாயே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்ததைகள்

Image
  நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.அவர்கள் நன்மை செய்து,நற்செயல்கள் என்னும் செல்வம் சேர்ப்பார்களாக, தங்களுக்குள்ளதை பிறரோடு தாராள மனத்துடன் பகிர்ந்து கொள்ள வேணடும். 1தீமோத்தேயு 6(17-18) சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  விசுவாசமும் அன்பும் பார்வையற்றவரின் வழிகாட்டிகளைப் போன்றது. உங்களுக்குத் தெரியாத பாதையில், கடவுள் மறைந்திருக்கும் இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது.     –அர்ச். சிலுவை அருளப்பர். Faith and love are like the blind man’s guides. They will lead you along a path unknown to you, to the place where God is hidden." –St. John of the Cross. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மரணம் என்பது எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் எதிரி அல்ல, மாறாக நம்மைக் கைப்பிடித்து நித்திய அன்பின் ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லும் நண்பன். Death is not an enemy who puts an end to everything, but the friend who takes us by the hand and leads us into the Kingdom of eternal love. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தூய உள்ளத்தோருக்கு எல்லாம் தூயவையே. மாசுள்ள மனத்தினருக்கும்,விசுவாசம் இல்லாதவர்களுக்கும் எதுவுமே தூயதாயிராது.அவர்களுடைய மனமும் மனசாட்சியும் கூட மாசுள்ளவையாக இருக்கின்றன. கடவுளை அறிந்திருப்தாக அவர்கள் வாயால் சொல்லுகின்றனர்.ஆனால் நடத்தையால் அவரை மறுக்கின்றனர்.அடங்காத இந்த மனிதர்கள் அருவருப்புக்குரியவர்கள் ;எந்த நற்செயலுக்கும் தகுதியற்றவர்கள். தீத்து 1(15-16) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணுடிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் பாவிக்கு நல்வழி கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;   தமது வழியைக் எளியோர்க்குத் கற்பித்து வழிநடத்துகின்றார்.  திருப்பாடல் 25(8-9) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உண்மை நெறியில் என்னை நடத்தியருளும்; ஏனெனில்,  என் மீட்பராம் கடவுள் நீரே.   திருப்பாடல் 25(4-5). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். .

பொன்மொழிகள்

Image
  நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்கான சிறந்த வழி, நமது பொறுமையைச் சோதிப்பவர்களிடம் அன்புடன் வாழ்வதே.  அருட்பணி.ஜான் ஹர்டன். The best way to expiate our sins is to live with people who test our patience."  - Fr. John Hardon. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது. எசாயா48(17-19). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு; உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. சீராக 35 - 7/9. சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  வாழ்நாட்களில் மகிழ்வதையும் நன்மை செய்வதையும் விட நலமானனது ஒன்றுமில்லை. சங்கத் திருவுரை 3-12 சேசவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  கடவுள்மேல் விசுவாசமுள்ளவர்கள் நற்செயல்களில் ஈடுபடக் கருத்தாயிருக்கும்படி நீர் வற்புறுத்தவேண்டும் என்பது என் விருப்பம். இவை நல்லவை, மக்களுக்குப் பயன்படுபவை.ஆனால், மூட ஆராய்ச்சிகள், தலைமுறைகளைப் பற்றிய ஆய்வுகள், சண்டை சச்சரவுகள், சட்டத்தைப்பற்றிய வாக்குவாதங்கள் இவற்றை விலக்கும். இவை பயனற்றவை; வீணானவை.கட்சி விளைவிப்பவனை இரு முறை எச்சரித்தபின் விட்டு விலகும்.அப்படிப்பட்டவன் நெறி பிறழ்ந்தவன்; தனக்குத் தானே தீர்ப்பைத் தேடிக்கொண்ட பாவி. தீத்து 3(8-11). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் செய்யும் நற்செயல்களை  கடவுளுக்காகவும் கடவுளின் மகிமைக்காவும் செய்யுங்கள். இந்த காரணத்திற்காக நீங்கள் நன்மைகள் செய்யும்போது அதன்  பிரதிபலனாக மக்களிடமிருந்து வரும் நன்றியின்மை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அர்ச்.அம்புரோஸ் If you do good, you must do it only for God. For this reason you must pay no attention to the ingratitude of people. - St. Ambrose. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்.  எசாயா 20(29-31). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உயிர் உண்டாகும் விதம் இன்னதென்றும்,கருவுற்ற வயிற்றிலே எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்று நீ அறியாதிருக்கிறது போலவே,எல்லாவற்றையும் உண்டாக்கின கடவுளின் செயல்களையும் நீ அறியாய். சங்கத்திருவுரை 11-5 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  குடும்பம் ..., கடவுளுடன் ஒன்றிப்பதற்க்கான இயற்கையான தயாரிப்பு, எனவே தான் பசாசு 😈 குடும்பங்களைத் தாக்குகிறது.  ராபர்ட் கார்டினல் சாரா The family is natural preparation for communion with God, this is why the devil attacks it. Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையபபரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Cardinal Robert Sara.

 Without faith in the real presence of Christ in the Eucharist the Catholic Church becomes a wholly horizontal phenomenon. 

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பெரியவனாக இருக்க விரும்ப வேண்டும்.  ஆனால் எதிலே? கடவுளை நேசிப்பதிலும் ! அயலாரை நேசிப்பதிலும். அர்ச்.மேகஸ்மில்லியன் கோல்பே. I want to be the greatest. But in what? In loving people and loving God! St.Maxmillian Kolbe. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். மத்தேயு 3(7-8/10) சேசுவுக்கே புகழ்!தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  திருத்தப்படுவதற்காகத்தான் நீங்கள் துன்புறுகிறீர்கள்.கடவுள் உங்களை தம் மக்கள் என நடத்துகிறார்.தகப்பன் கண்டித்துத் திருந்தாத மகன் உண்டோ? கண்டித்துத் திருத்தம் பெறுவது இப்பொழுது இன்பமாயிராமல் துன்பமாகத்தான் தோன்றும்.ஆனால் அவ்வாறு பயிற்றப் பட்டவர்கள் பின்னர் அமைதியையும் நீதி வாழ்வையும் பயனாக பெறுவர். எபிரேயர் 12-7/11 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.