இறைவனின் இறைவார்த்தைகள
பிள்ளைகளே, உங்கள் தந்தையின் அறிவுரைகளைக் கேட்டு, நீங்கள் மீட்பு அடையும் பொருட்டு அவைகளின்படி நடந்து வாருங்கள்.ஏனென்றால் ஆண்டவர், பிள்ளைகள் தந்தையை மதிக்க வேண்டும் என்றும், தாயின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் நியமித்திருக்கிறார்.
தன் தாயை மதிக்கிறவன் செல்வங்களைச் சேர்த்தவன் போல வாழ்வான்
தன் தந்தையை மதிக்கிறவன் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான். அவன் வேண்டுதலும் கேட்கப்படும்.
தன் தந்தையை மதிக்கிறவன் நெடுங்காலம் வாழ்வான். தன் தந்தைக்குக் கீழ்ப்படிகிறவன் தாய்க்கு உதவுவான்.
தெய்வ பயமுள்ளவன் தாய் தந்தையரை மதிக்கிறான்; தன்னைப் பெற்றவர்களுக்குத் தலைவர்களுக்குச் செய்வது போல் ஊழியம் செய்வான்.
செயலிலும் சொல்லிலும் பொறுமையிலும் உன் தந்தைக்கு மரியாதை செய்.
அதனால் உனக்கு அவனுடைய ஆசி கிடைக்கும். அவன் ஆசியும் உன் வாழ்நாள் வரை உன்னோடு இருக்கும்.
தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும். தாயின் சாபமோ பிள்ளைகளுடைய குடும்பங்களின் அடித்தளத்தைப் பிடுங்கி விடும்.
சீராக் 2(2-3 / 6-11)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment