நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!

 


கிறிஸ்து ஸ்தாபித்த ஒரே திருச்சபையை கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன்? 

கிறிஸ்துவின் பெயரால் ஒருவர் சுயமாக ஆரம்பிக்கும் சபைகள் அது அவரது சொந்த சபை. கிறிஸ்துவினுடைய சபை ஆகாது என்பதை கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன் ?

எந்த வேத வசனத்தை அடிப்படை ஆதாரமாக வைத்து சொந்தமாக சபைகளை ஏற்படுத்துகின்றீர்கள் ? *சுயமாக ஆளுக்கொரு சபை ஆரம்பிக்க அதிகாரம் கொடுத்த வேத வசனம் எது ?*

தெருவுக்கு ஒரு சபையை தாங்களாகவே கிறிஸ்துவின் பெயரில் ஏற்படுத்தினாலும் அது கிறிஸ்து ஸ்தாபித்த கத்தோலிக்க திருச்சபை ஆகாது என்று கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன் ? 

கிறிஸ்துவின் பெயரால் மனிதர்கள் ஏற்படுத்திய சபைக்கும், கிறிஸ்துவே ஏற்படுத்திய திருச்சபைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறியாமல் வேதம் போதித்து என்ன பயன்?

இந்தியா வந்த புனித தோமையார், தோமையார் சபை என்றும், பிற இனத்தவர்க்கு நற்செய்தி அறிவித்த புனித பவுல், பவுல் சபை என்றும் தன் பெயரில் தனிச்சபை ஆரம்பித்தார்களா ? இல்லையே ! 

 12 அப்போஸ்தலர்களும், சீடர்களும் ஆளுக்கொரு சபைகளை அவர்கள் சொந்த பெயரில் ஆரம்பித்து பிரிவினை ஏற்படுத்தாதபோது, தெருவுக்கு ஒரு சபையை ஏற்படுத்தி கத்தோலிக்கத்தில் பிரிவினையை ஏற்படுத்துவது ஏன் ?

சுயமாக சபை ஆரம்பிக்கும் அதிகாரம் , ஆண்டவரோடு வாழ்ந்த அப்போஸ்தலர்களுக்கும், சீடர்களுக்குமே இல்லாத போது அதிகாரத்தை நீங்களாகவே எடுத்துக்கொண்டது ஏன்? நீங்கள் அப்போஸ்தலர்கள், சீடர்களை விட பெரியவர்களா ? அல்லது அவர்களை விட வேதம் நன்கு அறிந்தவர்களா?

பல இலட்சம் சபைகளில் கிறிஸ்து ஸ்தாபித்த சபை எது ?

மத்தேயு16-18. உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் *என்* திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.

புனித பேதுரு மேல் கட்டப்பட்டதே கிறிஸ்துவின் திருச்சபை .இன்று பல pastor-கள் ஏற்படுத்தியுள்ள சபைகள் கிறிஸ்துவின் சபை அல்ல. Pastorகளின் சபை. கிறிஸ்து ஸ்தாபித்த கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரானப் *போலிச் சபைகள்.*

கடவுளும் , வேதமும் , சத்தியமும், ஒன்றே 

அவர் ஸ்தாபித்தை திருச்சபையும் ஒன்றே!பல சபைகளை அவர் ஸ்தாபிக்கவும் வில்லை தனது அப்போஸ்தலர்களுக்கும் சீடர்களுக்கும் பல சபைகளை எற்படுத்த அதிகாரத்தையும் வழங்கவில்லை.அவரது அப்போஸ்தலர்கள், சீடர்கள் அவர் வார்த்தைக்கு கீழபடிவார்கள்.

*ஏன் சுயமாக சபைகள் ஆரம்பிக்க கூடாது?*

மத்தேயு16-18. உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். *பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா*

நகரத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை. இது நமது ஆண்டவரின் வார்த்தை என்றால் *மற்ற சபைகளை நரகத்தின் வாயில் நிச்சயம் ஒரு நாள் வெற்றிக்கொள்ளும்.*

கிறிஸ்து ஸ்தாபித்த நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத கத்தோலிக்க திருச்சபையில் இருப்பதே ஆன்ம பாதுகாப்பு. நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளப்போகும் மனிதர்கள் ஏற்படுத்திய போலிச் சபைகளில் இருப்பதே ஆன்ம ஆபத்து.


யோவான் 21(16-18)

*என் ஆடுகளை பேணி வளர் 

என் ஆடுகளை மேய் 

என் ஆடுகளை பேணி வளர்* என்ற 

அதிகாரத்தை புனித பேதுருவுக்கே அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். அவர் வழிவந்த திருதந்தை 14 ஆம் லியோவிடமே  அதிகராம் தற்போது இருக்கின்றது.

திருத்தூதர் பணிகள்20-28.*தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை* மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.

தமது இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் ஒரே திருச்சபை கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. மற்ற சபைகள் கடவுளுடையதும் அல்ல அந்த சபைகளை அவரது திருஇரத்தத்தால் தமதாக்கி கொள்ளவும் அல்ல.

யோவான்10-16.இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது *ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.* இந்த நிலை மண்ணுலகிலே வராத போது விண்ணுலகில் ஒரு போதும் வராது.

ஒரு புராட்டஸ்டன்ட் ஒருமுறை புனித ஜான் மரிய வியானியை அணுகி, 'பூமியில் நாம் ஒன்றாக இல்லாவிட்டாலும், பரலோகத்தில் ஒன்றாக இருப்போம்' என்று கூறினார். புனிதர் அந்த மனிதனின் கண்களைப் பார்த்து கூறியது.மரம் சாய்யும் திசையிலேயே விழுகிறது போல. நாம் பூமியில் ஒன்றாக வாழவில்லை என்றால், நாம் பரலோகத்தில் ஒன்றாக வாழ மாட்டோம், மரணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது". புனிதரின் இந்த மென்மையான வார்த்தைகளைக் கேட்ட புராட்டஸ்டன்ட் அவற்றைக் கருத்தில் கொண்டு, தனது தவறைத் துறந்து, கத்தோலிக்கரானார்.

ஒரே மந்தை ! ஒரே ஆயர் !

ஒரே திருச்சபை என்ற நிலை ஏறப்பட வேண்டுமானால் இக்கொட்டிலை சாரா வேறு ஆடுகளே! போலி போதகரின், தவறான, சுயபோதனைகளால் இனியும் ஏமாறாமல் ஆண்டவரின் குரலுக்கு செவிக்கொடுத்து ஒரே மந்தையில் ஒரே ஆயனின் கீழ் ஒன்றினைவோம்.

ஒரு திருச்சபை,திருப்பலி,நற்கருணை, மாதா,காவல்தூதர்கள்,திருவட்சாதனங்கள்,புனிதர்கள் என்ற பல்வேறு கத்தோலிக்க பொக்கிஷங்களை இழந்துவிடாதீர்கள்.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.






Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்