உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்
உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள்.
*பலிப்பீடத்தின் முன்பு குறுக்கும் நெடுக்குமாக பலமுறை நடந்த போது நற்கருணை நாதருக்கு மரியாதை செலுத்த தவறியதற்க்காக இப்போது உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்.* என்று புனித பியோவிடம் உதவிக்கேட்ட உத்தரிகும் ஆன்மா.
ஒருமுறை புனித பியோ ஆலயத்தில் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார் துகில் அசையும் குரல் கேட்டுத் திரும்பிய போது. ஒரு இளவயது துறவி பலிப்பீடத்தில் நிற்பதைக் கண்டார் அந்தத் துறவி அங்கு மெழுகுத்திரிகளை ஒழுங்குப்படுத்தி பூச்செடிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார் பலிப்பீடத்தைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றிருந்த அருட்தந்தை லியோன் எனக் கருதி பியோ அவரருகில் சென்று அருட்தந்தை லியோன் அவர்களே இது உணவு வேளை போய் உணவருந்துங்கள் பலிப்பீடத்தைச் சுத்தம் செய்து ஒழுங்குப்படுத்தும் தருணம் அல்ல இது" என்று கூறிய போது,
"நான் தந்தை லியோன் அல்ல" என்ற குரல் கேட்டது. "அவ்வாறெனில் நீங்கள் யார்?" என பியோ கேட்ட கேள்விக்கு. இங்கு முதல்நிலை துறவறப் பயிற்சி மேற்கொண்டிருந்த குருமட மாணவன் நான் .இங்கு இருந்தபோதுப்பீடத்தைச் சுத்தம் செய்யும் பொறுப்பு எனக்கு கிடைத்தது துரதிர்ஷ்டவசமாக பலிப்பீடத்தின் முன்பு குறுக்கும் நெடுக்குமாக பலமுறை நடந்த போது நற்கருணை நாதருக்கு நான் மரியாதை செலுத்த தவறி விட்டேன் அங்ஙனம். நற்கருணைப் பேழையில் எழுந்தருளியிருக்கும் ஆண்டவரை நான் அவமதித்தேன் இந்த வெகுத்தன்மை கொண்ட கவனக்குறைவுக்காக நான் இப்போது உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கிறேன். நேரம் வந்து விட்டது ஆண்டவர் அவருடைய அளவற்ற அருளால் என்மீது அன்புகூர்ந்து பேரின்பப் பேற்றை அளிக்க திருவுளம் கொண்டுள்ளார். அதற்காக தங்களுடைய உதவியை நாட என்னை அனுமதித்துள்ளார். தயவு செய்து என்னை மறந்து விடாதீர் என்றது.
இந்த ஆன்மாவிடம் பரிவிரக்கம் கொண்ட புனித பியோ "நான் நாளை காலையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் போது. நீ பேரின்ப வீட்டில் நுழைவாய்" எனக் கூறினார் உடனே அந்த ஆன்மா கதறி அழத் தொடங்கியது: "மிகவும் கொடியது இது எனக்கூறிவிட்டு அந்த ஆன்மா மறைந்தது .
பியோ இங்கனம் கூறுகிறார் "இந்த குற்றச்சாட்டு மறக்க முடியாத மனக்காயத்தை என்னுள் தோற்றுவித்தது. உண்மையிலேயே அந்த ஆன்மாவை உடனடியாக திருப்பலி நிறைவேற்றி நான் விண்ணகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும் உத்தரிக்கும் நெருப்பில் ஒரு இரவைக் நுகர நான் தீர்ப்பளித்து விட்டேனே?"என மனம் வருந்தினார்.
நற்கருணை நாதருக்கு மரியாதை செலுத்தாததற்காக, நெடுங்காலமாக உத்தரித்துத்துக்கொண்டிருக்கும் இளங்குருவின் ஆன்மாவின் மூலம், நமது அன்றாட வாழ்வில் திவ்விய நற்கருணை ஆண்டவருக்கு உரிய மரியாதையை நாம் செலுத்துகின்றோமா? என்று சற்று சிந்திப்போம்.
நல்ல பாவசங்கீர்தனம் செய்து நற்கருணை ஆண்டவரை பெறுகின்றோமா ? உரிய மரியாதை வணக்கத்துடன் நற்கருணை ஆண்டவரை நாவில் பெறுகின்றோமா ? நற்கருணை ஆண்டவரை பெற்றவுடன் அவரோடு பேசுகின்றோமா ?
சிந்திப்போம் ..., தவறுகளை உடனடியாக சரிசெய்வோம்.
இடது கரத்தில் நற்கருணைஆண்டவரை பெறுவதை உடனடியாக நிறுத்துவோம்.இடது கையில் எந்த உணவையும் உண்ணமாட்டோம், எந்த பொருளையும் மற்றவர்களுக்கு வழங்க மாட்டோம் ஆனால் நற்கருணை ஆண்டவரை பெறுவதற்கு மட்டும் இடது கரமா ? எப்பேற்ப்பட்ட அவமரியாதையை நற்கருணை ஆண்டவருக்கு நாம் செய்து வருகின்றோம் !
வலது கரத்தில் நற்கருணைப் பெறுவதையும் தவிர்ப்போம்.கரங்களில் பெறுவதையே தவிர்ப்போம்.ஏன்?
கரங்களில் நற்கருணை பெறும்போது நமக்கு தெரியாமலையே சிறுதுகள்(ஆண்டவரின் உடல்) கீழே விழுந்து மற்றவர்களால் நம் ஆண்டவர் மிதிப்படும் வாய்ப்பு உள்ளது.
*நற்கருணை ஆண்டவரை கரங்களில் தொடுவதற்கு அருட்பொழிவுச் செய்யப்பட்ட குருக்களின் பரிசுத்த கரங்கள் மட்டுமே தகுதியானவை. பொதுநிலையினரின் கரங்களும் அபிஷேகம் செய்யப்பட்ட குருக்களின் கரங்களும் ஒன்றல்ல.*
எனவே மீண்டும் நாவிலே வாங்கும் பழக்கத்திற்கு திரும்புவோம்.நற்கருணை அவசங்களை தவிர்ப்போம்.உத்தரிக்கும் ஸ்தலத்தை மும் தவிர்ப்போம்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment