ஆட்டுக்குட்டியும் ஓநாயும் ஒன்றுசேர்வதா ?
சங்கைக்குரிய ஆயர்களே / குருக்களே...
ஆட்டுக்குட்டியும் ஓநாயும் ஒன்றுசேர்வதா?
பரிசுத்தக்கற்புள்ள குருத்துவத்தையே ஏற்றுக்கொள்ளாத பாஸ்டர்களோடு ஒன்றிப்பு செபமா?
கத்தோலிக்க திருச்சபையும்
போலிச்சபைகளும் ஒன்றிப்பதா?
பிரிவினை, பிறமத சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழவேண்டும். ஆனால் அவர்களுடன் ஒன்றுக்கூடி எப்படி செபிக்கமுடியும் .
ஒன்றாக வழிபடலாம்! எப்போது? நமது திருச்சபையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் ஒன்றுப்படடு வழிபடலாம்.
ஆனால்
திவ்விய நற்கருணை, திருவருட்சாதனங்களை
ஏற்காதவர்கள்,தேவ மாதாவை பழிப்பவர்கள்,புனிதர்களை மதிக்காதவர்கள்,திருத்தந்தைக்கு கீழ்படியாதவர்களோடு கத்தோலிக்க திருச்பைக்கு எதிரான கொள்கை கொண்டவர்களோடு ஒன்றிப்பு செபம் அவசியமா?
திருச்சபைக்கு செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.
மத்தேயு 18-17 என ஆண்டவர் திருச்சபைக்கு செவிசாய்ககாதவர்களை எச்சரித்தார். இவர்களோ அதற்கும் மேலாக திருச்சபையை எதிரப்பவர்கள் அதன் கொள்கைகளை எதிர்ப்பவர்கள்,பகிரங்கமாக விமர்சிப்பவர்கள் இவர்களோடு ஒன்றிப்பு செபம் செய்வது நமது ஆண்டவருககு கீழ்படியும் செயலா?
வீடு தேடி வந்து சிலைவழிபாடு செய்கிறாய் மாதாவை கும்பிடக்கூடாது என மனப்பாடம் செய்து வைத்த ஒரு சில வசனங்களை தவறாக அர்த்தம் சொல்லி தங்கள் சபைக்கும் இழுக்கும் ஒநாய்களோடு ஒற்றுமையா?
இன்று அனைத்து சபையினரும் ஒன்றினைந்து செபிப்பதை பார்க்கும் புதிய தலைமுறைகள் எல்லா சபைகளும் ஒன்றுதான் போல என்று தவறாக நினைப்பதற்கும், அவர்கள் செபகூட்டத்திற்கு செல்வதற்கும், அவர்கள் சபையில் இணைவதற்கும் வழி ஏற்படுத்திவிடாதா?
உங்களிடம் வருவோர் இப்போதனையை ஏற்காதிருப்பின், அவர்களை உங்கள் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அவர்களுக்கு வாழ்த்தும் கூற வேண்டாம்.
அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோர் அவர்களுடைய தீச்செயல்களிலும் பங்கு கொள்கிறார்கள்.
2 யோவான்1(10-11)
இல்லத்தில் ஏற்கவேண்டாம் என ஆண்டவரே எச்சித்தவர்களை புண்ணிய பூமியில் ஒன்றுசேர்க்கவும் ,வாழத்துக்கூட கூற வேண்டாம் என்று ஆண்டவரே எச்சரித்தவர்களுடன், ஒன்றுக்கூட்டி செபிக்கும் முடிவு எடுப்பதற்கு நீங்கள் யார் ?ஆண்டவருடை வார்த்தைக்கு எதிராக செயல்பட தங்களுக்கு அனுமதியும் அதிகாரமும் கொடுத்தது யார் ?
நாங்கள்(இறைமக்கள்) இறைவார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டுமா? இறைவார்த்தைக்கு எதிரான உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வேண்டுமா?
ஆத்தும இழப்பிற்கு காரணமாகிவிடாதீர்கள்
எச்சரிக்கையாக இருங்கள்!.
சின்னமலை கத்தோலிக்க பங்குமக்களை A.G சபைக்கு ஏற்றுமதிச்செய்ய துடிக்கும் Rev Fr.ஜோ பாலா அவர்களுக்கும்
Rev Fr.வின்சென்ட சின்னதுரை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment