Posts

Showing posts from February, 2021

உலகின் இறுதிக்காலங்கள் -7

Image
  ஓ என் இறுதிக்கால அரச்சிஷ்டவர்கள்! அஞ்ஞானத்தின் கலாபனைகளைக்கு மத்தியில் தொடக்க கால அரச்சிஷ்டவர்களின் வாழ்வு வீரத்துவமிக்கதாக இருந்த்து என்றால்,என் கடைசி கால அர்ச்சிஷ்டவர்கள் வாழ்வு அதைவிட மூன்று மடங்கு,ஏழு மடங்கு,ஏழுக்கு ஏழு மடங்கு வீரத்துவமுள்ளதாக இருக்கும்.இருளானது எல்லாப் பக்கங்களிலிருந்தும் தங்களை மூழ்கடிக்கும்போதும்,பொய்மையானது தன்னை வழிபடும் படியும்,விசுவசிக்கும்படியும் தங்களை கட்டாயப்படுத்த முயலும் போதும் விசுவாசத்தின் மஜ்ஜையினால் போஷிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த வாதைகளை எதிர்க்கொள்வதற்கு சிங்கங்களின் இருதயங்களையும்,சூரியனாகிய என்னை காண்பதற்கும்,சத்தியமாகிய என்னிடம் பறந்து வருவதற்கும் கழுகுகளின் கண்களையும்,இறக்கைகளையும் கொண்டிருப்பார்கள். உலகின் இறுதிக்காலங்கள் இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் - 13

Image
  ஏழு தலையான பாவங்கள் உலோபித்தனம் அல்லது பேராசை ஒழுங்கற்ற நமது நேசம் வெறும் பணத்தைப் பற்றியதாக மட்டுமில்லாமல், புத்தகங்கள், படங்கள், நகைகள்,வாகனங்கள்,வீடுகள், நிலங்கள் போன்ற எந்த உலகப் பொருட்களை சார்ந்ததாகவும் இருக்கலாம்.நாம் ஏழை,பணக்காரராக இருந்தாலும் நம்மிடம் உலோபித்தனம் என்ற இந்த பாவம் இருக்கக்கூடும்.நம் இருதயத்தின் கடினத் தன்மையைக் கொண்டு பண உதவிகள் செய்வதற்கு நமக்குள்ள தயக்கத்தைக் கொண்டு,இந்த உலோபித்தனம் நம்மில் இருப்பதை நாமே கண்டுபிடித்துக்கொள்ளலாம். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -12

Image
  ஏழு தலையான பாவங்கள் உலோபித்தனம் அல்லது பேராசை பணத்தாசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணி வேராக இருக்கிறது(1 திமோ 6-10). நம் சொந்த செல்வத்தை பெருக்கிக் கொள்ள எத்தகைய அநீதியையும் செய்து முடிக்க நாம் தயாராக இருக்கிறோம், செய்தே முடிக்கிறோம்.நம்மையும்,நம் ஆத்துமத்தையும் நம்மால் நேசிக்க முடிவதில்லை நேசிக்கவும் முடியாது.ஏனெனில் நாம் நம் உடைமைகளை பரலோக நிலையான புண்ணிய செல்வத்தை அடைவதற்க்காக  பயன்படுத்தாமல் அழிந்து போகும் உலக செல்வங்களை அடைவதற்க்காக  பிசாசின் கண்ணிகளில் சிக்கிக்கொள்கிறோம். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் - 11

Image
  ஏழு தலையான பாவங்கள் உலோபித்தனம் அல்லது பேராசை உலகப்பொருட்கள் மீதுள்ள ஒழுங்கற்ற பற்று.உலகப்பொருட்களை குவித்து வைக்க வேண்டும் அவற்றை சொந்தாமாக்கிக்கொள்ள வேண்டுமென்கிற ஆசை.இவற்றை சேர்ப்பதற்கு நியாயமான அல்லது நியாயமற்ற எல்லா வழிகளையும் பயன்படுத்தும்படி நம்மைத்தூண்டுகிறது. உண்மையில் இறைவனிடத்திலும் அவருடைய பராமரிப்பிலும் நமக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதன் அடையாளமாக இருக்கிறது.ஏனெனில் செல்வத்தையும் ஆடம்பரத்தை மட்டுமே அதிகமாக விரும்புவோம்.நம்மையோ,அயலாரையோ,இறைவனையோ நேசிக்காமல் பணத்தையே அதிகமாக நேசிப்போம். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -10

Image
  ஏழ தலையானபாவங்கள் *ஆங்காரத்திற்கு எதிரான தீர்வுகள் ஆஙகாரத்தை வெல்ல ஒரே வழி தாழ்ச்சியைக் கடைப்பிடிப்பதே.தாழ்ச்சியுள்ள மனிதன் மட்டுமே தான் ஆங்காரமுள்ளவன் என்று கண்டுபிடிக்கிறான்.உண்மையான ஆர்வத்தோடு தன் வாழ்வில் ஆங்காரத்தின் வெளிப்பாடுகளின் மீது வெற்றிப்பெற பாடுபடுகிறான்.தாழ்ச்சியை அடைய நம் ஆண்டவரையே முன்மாதிரிகையாக கொண்டிருக்க வேண்டும்.ஆங்காரமுள்ளவர்களை பழிவாங்காமல் ,காயப்படுத்தாமல் இறைவனுக்கு விருப்பாமான மன்னிப்பை ,தாழ்ச்சியினால் மட்டுமே மனதில் உணர்ந்து ஆங்காரமுள்ளவர்களுக்கு வழங்கமுடியும்.தானும் ஆங்காரத்திலுருந்து விடுபட முடியும். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -9

Image
  ஏழு தலையான பாவங்கள் ஆங்காரம் நம் புண்ணியங்கள் அனைத்தையும் நாசமாக்கி,எல்லாவிதமான ஒழுங்கீனங்களுக்குள்ளும் நம்மை இழுத்துச்செல்லும்.ஆங்காரமுள்ள மனிதன் எத்தகைய பாவத்தையும் செய்பவனாயிருக்கிறான்.எந்த வேடத்தில் நம்மிடம் ஆங்காரம் வெளிபட்டாலும்.இறைவனின் துணையோடு எதிர்த்து போராடுவது மிக அவசியாமாகிறது.நம் இருதயத்தினுள் நுழைய அனுமதித்தால் அதனோடு சேரந்து மற்ற எல்லாத் தீச் செயல்களும் உள்ளே நுழையும்.மனந்திரும்ப விரும்பாதவனாகிய பாவியின் முடிவு,இறைவன் வெளிப்படுத்தினபடி பிசாசுக்களோடு நித்திய நரக நெருப்பில் தள்ளப்படுவதே. இயேசுவுக்கே புகழ் ! அன்னைமரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -8

Image
  ஏழு தலையான பாவங்கள் ஆங்காரம் சுய சித்தமும்,பிடிவாத குணமுமே இறைவனின் சித்தத்தை எதிர்ப்பவர்களாக நம்மை ஆக்கிவிடுகின்றன.அவை நம் அயலானை எதிர்த்து நின்று,சுயநலத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் யாருக்கும் அசைந்து கொடுக்காதவர்களாக நம்மை மாற்றிவிடுகிறது. கோபம்,வெறுப்பு,கர்வம்,முரண்படுகிற மனநிலை,திமிர் ஆகியவை இந்த வகை ஆங்காரத்தின் குழந்தைகளாகும். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -7

Image
  ஏழு தலையான பாவங்கள் *ஆங்காரம் நாம் செயலூக்கமில்லாத மனப்பாங்கை கொண்டிருந்தால்,சுய திருப்தியையும்,ஆடம்பரத்தையும் தேடுமாறு நம் ஆங்காரம் நம்மை உந்தித் தள்ளுகிறது.மற்றவர்களுடைய குறைகள் நமக்கு அதிர்ச்சியளிக்கின்றன.ஆனால் நம்மைப் பற்றியோ நாம் முழுத்திருப்தியுள்ளவர்களாக இருக்கிறோம்.ஆதிக்க உணர்வின் ஆங்காரம் மற்றவர்களின் வாழ்வை நம் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் என்ற வெறியை நம்மில் தூண்டுகிறது.நம் விருப்பங்களை அவர்கள் மேல் சுமத்தவும் அவர்களை ஆதிக்கம் செலுத்தவும் விரும்புகிறது. இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாங்கள் -6

Image
 ஏழு தலையான பாவங்கள் *ஆங்காரம்* நாம் நம்முடைய தவறுகளுக்கு நாமே நியாயம் கற்பித்துக் கொள்கிற மனப்பாங்கு உள்ளவர்களாக இருந்தால் நம் ஆங்காரம்,சுய இரக்கம்,மிகையான உணரச்சிவசப்படுதல் ஆகியவற்றின் திரைக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது.சீற்றம்,மனக்கசப்பு,காழ்ப்புணர்வு,சந்தேகம்,வெளித்தெரியாத பகைமையுணர்வு ஆகியன சுய இரக்கத்தோடு சேர்ந்த குணங்களாக இருக்கின்றன.இந்த ஆங்காரத்தை அடையாளம் காண்பது கடினம்.ஏனென்றால் அது தன்னைத்தானே மறைத்துக் கொள்கிறது.இதை ஆங்காரம் என நாம் ஒத்துக்கொள்வதில்லை. இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

தவத்தின் அவசியம்

Image
  தவத்தின் அவசியம். சகலருக்கும் தவம் அவசியந்தானா ? பிரியமான கிறீஸ்தவர்களே, அற்பமாசு அணுகாதவரும், அளவில்லாத பரிசுத்த சர்வேசுரனுமாகிய யேசு நாதர்சுவாமி தாமும் தவஞ்செய்யத் திருவுளமாயிருந்திருக்கையில், பாவிகளாகிய நமக்கு அது அவசியமில்லை என்று சொல்ல யார் துணிவார்?  இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் - 5

Image
ஏழு தலையான பாவங்கள் ஆங்காரம் தன்னாதிக்க மனப்பாங்காக இருக்குமானால்,நம் ஆங்காரம் ஒரு பலமான மனப்போக்கில் வெளிப்படுத்தப்படுகிறது. மற்றவர்களுக்குப் பணிந்து போகவோ,அவர்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவோ நமக்குக் கடினமாக இருக்கிறது.பெரும்பாலும் நாம் பிறரை அடக்கியாள விரும்புகிறவர்களாகவும்,விமர்சன நோக்குள்ளவர்களாகவும்,வீண் வாதத்தை விரும்புகிறவர்களாகவும் இருப்போம்.ஆதிக்க உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு பிறரின் உரிமைகளை பற்றியும் சிந்திக்கவே மாட்டோம். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -4

Image
  ஏழு தலையான பாவங்கள் *ஆங்காரம்* நம்முடையது தன்னார்வ மனப்பாங்காக இருக்குமானால்,நம் ஆங்காரம் தன்னைத்தானே சகலத்திலும் மையமாக்கி கொள்கிறது.மற்றவர்கள் நம்மை கவனிக்க வேண்டுமென விரும்புகிறோம். முன்கோபிகளாகவும் சிறு அவமானத்தைக் கூட தாங்க முடியாதவர்களாக இருக்கிறோம்.மேலும் புகழ்,ஸ்துதி,பாராட்டுக்களை தேடுபவர்களாக ஆக்குகிறது. இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -3

Image
  ஏழு தலையான பாவங்கள் *ஆங்காரம்* ஆங்காரத்தால் நாம் குருடாக்கப்படும்போது நம்முடைய திறமைகள் இறைவன் தந்த கொடைகள் என்று நினைக்கமாட்டோம்.அதற்கு பதிலாக அவை நம்மிடமிருந்தே வந்தவை என்றும்,அவற்றை விரும்புகிற விதத்தில் உபயோகிக்க நமக்கு உரிமையுண்டு என்றும் எண்ணுவோம்.ஆங்காரத்தால் பாதிக்கப்படாதவர்கள் யாருமில்லை.நம் தனிப்பட்ட ஆங்காரம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துக்கொள்ள தேடுவது மிக முக்கியமானது.அப்போது தான் நம்மைப்பற்றிய உண்மையான அறிவை நாம் அடையமுடியும்.  இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -2

Image
  ஏழு தலையான பாவங்கள் *ஆங்காரம்* பாவங்களில் மிகப்பெரியது ஆங்காரம்.இது சுயநலத்தின் சிகரமாகவும்,சர்வேசுரனுக்கு பணிந்திருப்பதற்கு எதிரானதாகவும் இருக்கிறது.நமது புத்தியை குருடாக்கி ஏதாவது ஒரு காரியத்தில் உண்மையை புரிந்து கொள்ளுபடி நாம் தூண்டப்படாவிட்டால் நாளுக்குநாள் நம்முடைய தீர்மானங்களெல்லாமே சரி என்ற ஆணவப்போக்கில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்போம். நமது சில பழக்கங்கள் தீயதாக இருக்கும்போதும்,நம் செயல்கள் நல்லவையாகவும், புண்ணியங்களாகவும் இருப்பதாக தவறாக நினைத்துக் கொள்வோம். இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க !

மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? -2

Image
 மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? -2 உத்தமமான ஒவ்வொரு கொடையும்,ஒவ்வொரு வரப்பிரசாதமும்,அவற்றின் அடிப்படை மூலத்திலிருந்தே வருவது போல்,அவை புறப்படும் ஸ்தானமாகிய பிதாவாகிய *சர்வேசுரன் மரியாயிடம் தம் குமாரனை ஒப்படைத்தபோது*, வரப்பிரசாதங்கள் யாவற்றையும் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டார். அதெப்படியென்றால் அர்ச்.பெர்னார்ட் உரைப்பது போல் "தம் திருக்குமாரனோடும், அத்திருக்குமாரனிலும் கடவுள் தம் சித்தத்தையே மரியாயிடம் கொடுத்துவிட்டார். மரியாயின் மீது உண்மை பக்தி அர்ச்.லூயிஸ் மரிய மோண்ட்போர்ட் இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

ஏழு தலையான பாவங்கள் -1

Image
  ஏழு தலையான பாவங்கள் 1.ஆங்காரம் 2. உலோபித்தனம்(பேராசை) 3.மோகம் 4.கோபம் 5.போசனப்பிரியம் 6.காய்மகாரம்(பொறாமை) 7.சோம்பல் ஏழு தலையான பாவங்களாகிய இந்த ஏழு வேர்களிலேயே நம் எல்லாப் பாவங்களையும் நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.பாவத்தின் இந்த ஏழு ஆதாரங்களும்,சரீரத்தைப் பாதிக்கிற நோய்களோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றன.ஆங்காரம் ஞானம் புற்றுநோயாகும்.அது நம் உயிர்த்துடிப்பைத் தின்று அழித்துவிடுகிறது.உலோபித்தனம் ஞான எலும்புருக்கி நோய்/காசநோய் போன்றது இது ஆத்துமத்தின் உள்ளார்ந்த வல்லமைகளை பாழாக்கி விடுகிறது.மோகம் ஞானத் தொழுநோயாகும்.கோபம் ஒரு விஷக் காய்ச்சலாகும்.பொறாமையோ இரத்த நச்சுத்தன்மை ஆகும்.போசனப்பிரியம் மரணத்தில் முடியக்கூடிய ஒரு வகை உறக்க நோய் ஆகும்.சோம்பல் என்பது ஆத்தமத்தின் பக்கவாதம் ஆகும் இது அந்த ஆத்துமத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து.ஆன்ம  வரப்பிரசாத வழிகளை அலட்சியம் செய்யச் செய்கிறது.ஆன்ம இரட்சணியத்தில் கவலையற்றவர்களாக இருக்கச்செய்து,மரண வேளையிலும் நாம் மனந்திரும்பாதபடி  தடுத்து விடுகிறது. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? 1

Image
  மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்? மாமரி மட்டுமே கடவுளிடத்தில் தனக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வரப்பிரசாதத்தைக் கண்டடைந்திருந்தார்கள்.பிதாப்பிதாக்களும்,தீர்க்கதரிசிகளும் புனிதர்கள் யாரும் இந்த வரப்பிரசாதத்தை கண்டடைய வில்லை. எல்லா வரப்பிரசாதங்களுக்கும் காரண கர்த்தாவையே மாமரி  தன் உதரத்தில் கற்பந்தரித்து அவருக்கு உயிரளித்தார்கள் .ஆகவே வரப்பிரசாதத்தின் மாதா என்று அழைக்கப்படுகிறார்கள்.Mater gratiae மரியாயின் மீது உண்மை பக்தி அர்ச்.லூயிஸ் மரிய மோண்ட்போர்ட் இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகின் இறுதிகாலங்கள் -6

Image
  உல்லாசமாய் இருங்கள்,செல்வத்தை திரட்டுங்கள்,ஆங்காரமும்,திமிரும் உள்ளவர்களாகவும்,இதயமற்றவர்களாகவும் இருங்கள்,வெற்றி பெறுவதற்காக வெறுத்து ஒதுக்குங்கள்,பொய் சொல்லுங்கள்,ஆட்சி செய்வதற்க்காக கொடுமைகளை கையாளுங்கள் என்று உலகம் சொல்கிறது. நானோ உங்களுக்கு சொல்கிறேன்: சுயகட்டுப்பாடுள்ளவர்களாகவும், சரீர இன்பம்,பொன்,அதிகாரம் ஆகியவற்றின் மீது ஏக்கம் கொள்ளாதீர்கள்.வெளிப்படையாகவும்,நேர்மையாகவும், தாழ்ச்சியோடும்,நேசிக்கிறவர்களாகவும்,பொறுமையும்,சாந்தமும், இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.உங்களை நோகச்செய்கிறவர்களை மன்னியுங்கள்,வெறுப்பவர்களை நேசியுங்கள்,உங்களைவிட குறைவான மகிழ்ச்சியுள்ளவர்களுக்கு உதவுங்கள். நேசியுங்கள்..! நேசியுங்கள்..! நேசியுங்கள்..! உலகின் இறுதிக்காலங்கள் இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

உலகின் இறுதிக்காலங்கள் -5

Image
  கடவுள் தமது அத்தியந்த வல்லமையைக் கொண்டு உங்கள் இருதயத்தின் ஆழத்தை வாசிக்கிறார்.ஓ,தேவாலயத் திருப்பணியாளர்களே,ஓ,பூலோகத்தின் வலிமை படைத்தோரே,ஓ,பாவம் செய்கிற திருமணமான தம்பதியனரே,ஓ,நான்காம் கற்பனையை மீறுகிற குழந்தைகளே,ஓ,பொய் சொல்லுகிற தொழிலாளர்களே,ஓ,கொள்ளையடிக்கிற விநியோகஸ்தர்களே,ஓ,என் பத்துக் கற்பனைகளுக்குக் கீழ்படியாதிருக்கிற அனைவருமே!எத்தன்மையாய் உங்களை நீங்கள் மறைத்துக் கொண்டாலும்,அது பயனற்றது.நீங்கள் வெகுவாகப் பெருமையடித்துக் கொள்கிற X-Ray போல இன்னும் எவ்வளவோ அதிகமாக,*கடவுளின் கண் உங்களை ஆராய்கிறது*,உங்களுக்குள் ஊடுருவுகிறது,உங்களை ஆராய்கிறது,உங்களைத் துளைக்கிறது.உங்களை வாசிக்கிறது,உங்களை ஆணி வேறாகப் பிரித்து,நீங்கள் உண்மையிலேயே எப்படி இருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கிறது.என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உலகின் இறுதிக்காலங்கள் இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம்

Image
  இந்த பூமியின் மகிழ்ச்சிகள் கடந்து போகின்றன.அவை இருதயத்தினுள் நுழைய முடியாது.பாவியானவன் பட்டுப் பீதாம்பிர ஆடை அணிந்திருக்கலாம்,விலையுயர்ந்த வைரக்கல் மோதிரம் அணிந்திருக்கலாம்,தன் நாக்கு சுவையான விருந்துகளை உண்ணலாம்.ஆயினும் அவனுடைய பாவம் நிறைந்த இருதயம் முழுவதும் முட்களினால் சூழப்பட்டு கசப்பும் வேதனையும் நிறைந்திருக்கும் .எனவே எவ்வளவு செல்வம்,சொத்து,ஆனந்தம், வேடிக்கை வினோத விளையாட்டுகளின் மத்தியில் அவன் அமைதியற்றவனாய்,ஒரு அற்பமான சின்ன விசயத்துக்குக்கூட கோபப்பட்டு நாயைப் போல குரைப்பான். மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம்

Image
  ஒரு மனிதனை ஒரு இசைக் கச்சேரிக்கு,கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக்கொண்டு போய் அவனைக் கட்டி அங்கே தலை கீழாகத் தொங்கவிட்டால் அந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவன் மகிழ்ச்சியை அனுபவிப்பானா? அதுபோலவே ஆண்டவர் இல்லாமல் இவ்வுலக உல்லாச இன்பங்கள் மத்தியில் வாழ்கிறவனுடைய ஆத்துமம் பாவத்தினால் நிலை குலைந்து தலை கீழாய்த்தான் இருக்கின்றது.அவன் உண்டு குடித்து கூத்தாடுவான் ,கண்ணை பறிக்கும் ஆடை ஆபரணங்களை அணிந்திருப்பான்‌.எல்லோராலும் புகழ்ந்து வாழ்த்தப்படுவான்.உயர்ந்த பட்டம் பதவிகளைப் பெறுவான்.திரண்ட செல்வத்தினை சேர்த்துக் குடிப்பான்.ஆனால் அவனுக்கு சமாதானமிராது.ஏனெனில் சமாதானம் கடவுளிடமிருந்து வருகிறது‌.அதை அவர் தமக்கு பிரியமானவர்களுக்கு அளிப்பார்.,தீய வழியில் நடப்பவருக்கு அளிப்பதில்லை. மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம்

Image
  தொடரந்து பாவம் செய்பவர்கள் தங்கள் பாவங்களினால் மகிழ்ச்சியையும்,பாக்கியத்தையும் அடையலாம் என்று எண்ணுகிறார்கள்.ஆனால் மன கசப்பையும்,மனசாட்சியின் பெரும் உறுத்தலையுமே அனுபவிக்கிறார்கள்.செய்யும் ஒவ்வொரு பாவத்தின் பின்னும் இறைவன் கொண்டுள்ள கோபத்தை பற்றிய பயமும்,நடுக்கமும் பின் தொடர்ந்து வரும்.ஒரு மனிதனுடைய எதிரி பெரும் வலிமையுள்ள வராக இருந்தால் ,பயத்தினால் அந்த மனிதனால் உண்ணகூட முடியாது.அப்படியானால் பாவியானவனுக்கு கடவுளே எதிரியாகும் போது அவனால் உறங்கமுடியுமா? மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம்

Image
  ஒரு மனிதன் தன் அரசனுக்கு எதிரியானால் அவனுக்கு தூக்கமிராது,சமாதானமும் இராது.எந்த நிமிடத்தில் தான் அரசனிடம் பிடிபட்டு மரணத்துக்கு இரையாவோமோ என்று பயப்படுவதில் நியாயமுண்டு.அப்படியிருக்க பாவத்தினால் கடவுளுக்கு பகையாய் இருப்பவன் சமாதானமாய் வாழ்வது எப்படி? அரசனிடமிருந்து தப்பித்து வேறு நாட்டிற்க்கோ,காட்டிற்க்கோ ஓடி தலைமறைவாகலாம். ஆனால் இறைவனின் கரங்களிலிருந்து தப்புவது எப்படி? அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !