உலகின் இறுதிக்காலங்கள் -5
கடவுள் தமது அத்தியந்த வல்லமையைக் கொண்டு உங்கள் இருதயத்தின் ஆழத்தை வாசிக்கிறார்.ஓ,தேவாலயத் திருப்பணியாளர்களே,ஓ,பூலோகத்தின் வலிமை படைத்தோரே,ஓ,பாவம் செய்கிற திருமணமான தம்பதியனரே,ஓ,நான்காம் கற்பனையை மீறுகிற குழந்தைகளே,ஓ,பொய் சொல்லுகிற தொழிலாளர்களே,ஓ,கொள்ளையடிக்கிற விநியோகஸ்தர்களே,ஓ,என் பத்துக் கற்பனைகளுக்குக் கீழ்படியாதிருக்கிற அனைவருமே!எத்தன்மையாய் உங்களை நீங்கள் மறைத்துக் கொண்டாலும்,அது பயனற்றது.நீங்கள் வெகுவாகப் பெருமையடித்துக் கொள்கிற X-Ray போல இன்னும் எவ்வளவோ அதிகமாக,*கடவுளின் கண் உங்களை ஆராய்கிறது*,உங்களுக்குள் ஊடுருவுகிறது,உங்களை ஆராய்கிறது,உங்களைத் துளைக்கிறது.உங்களை வாசிக்கிறது,உங்களை ஆணி வேறாகப் பிரித்து,நீங்கள் உண்மையிலேயே எப்படி இருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கிறது.என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உலகின் இறுதிக்காலங்கள்
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
Comments
Post a Comment