ஏழு தலையான பாவங்கள் -1
ஏழு தலையான பாவங்கள்
1.ஆங்காரம்
2. உலோபித்தனம்(பேராசை)
3.மோகம்
4.கோபம்
5.போசனப்பிரியம்
6.காய்மகாரம்(பொறாமை)
7.சோம்பல்
ஏழு தலையான பாவங்களாகிய இந்த ஏழு வேர்களிலேயே நம் எல்லாப் பாவங்களையும் நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.பாவத்தின் இந்த ஏழு ஆதாரங்களும்,சரீரத்தைப் பாதிக்கிற நோய்களோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றன.ஆங்காரம் ஞானம் புற்றுநோயாகும்.அது நம் உயிர்த்துடிப்பைத் தின்று அழித்துவிடுகிறது.உலோபித்தனம் ஞான எலும்புருக்கி நோய்/காசநோய் போன்றது இது ஆத்துமத்தின் உள்ளார்ந்த வல்லமைகளை பாழாக்கி விடுகிறது.மோகம் ஞானத் தொழுநோயாகும்.கோபம் ஒரு விஷக் காய்ச்சலாகும்.பொறாமையோ இரத்த நச்சுத்தன்மை ஆகும்.போசனப்பிரியம் மரணத்தில் முடியக்கூடிய ஒரு வகை உறக்க நோய் ஆகும்.சோம்பல் என்பது ஆத்தமத்தின் பக்கவாதம் ஆகும் இது அந்த ஆத்துமத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து.ஆன்ம வரப்பிரசாத வழிகளை அலட்சியம் செய்யச் செய்கிறது.ஆன்ம இரட்சணியத்தில் கவலையற்றவர்களாக இருக்கச்செய்து,மரண வேளையிலும் நாம் மனந்திரும்பாதபடி தடுத்து விடுகிறது.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment