நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது; சினத்தால் நிலை தடுமாறுவோர் வீழ்ச்சிஅடைவர். பொறுமையுள்ளோர் தக்க காலம்வரை அமைதி காப்பர்;பின்னர், மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும். அவர்கள் தக்க நேரம்வரை நாவினைக் காப்பார்கள்.பலருடைய வாய் அவர்களது அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும். சீராக்கின் ஞானம்1(22-24) கட்டுபடுத்த முடியாத கோபத்தின் வெளிபாடே ஆபாசமான வார்த்தைகள்,முறையற்ற செயல்கள்.கோபத்தினை அடக்கி ஆளமுடியாதோர் வாழ்வின் நிலையில் தடுமாறுவர்கள். உறவுகளை வளர்க்க முடியாதவர்கள். உட்ச்ச பட்ச்ச கோபம் அடைவேன் எனபதில் அல்ல பெருமை எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கடைபிடிப்பேன் என்பதே பெருமை. பொறுமை ....! பொறுமையாகவே மகிழ்ச்சியை தரும். நிரந்தரமான சமாதானம் குடும்பத்தில் நிலைக்கும். கோபம்....! உடனடியாக மனவருத்தம் தரும். மகிழ்ச்சியை சீர்குலைக்கும். வெறுப்பும், பகைமையும் குடும்பத்தை ஆளும். இயேசுவிற்கே புகழ்!தேவமாதாவே வாழ்க!புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.