இறைவனின் இறைவார்த்தைகள் 28/06/2019
எரேமியா 31-20
"உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்; உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது; திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்"
நண்பர்களே!
உங்களை படைத்த வரை விட்டு வெகுதூரம் சென்றவர்களே !பொன்,பணம் ஆசை,பெண் ஆசை,போதை பழக்கம்,அரசியல்,நடிகர்கள்,social media adict என ஒவ்வொரு ஆசைக்கும் அடிமைகளாகி இறைவனை பற்றி நினைக்க கூட நேரமில்லாமல் உலக ஆசைகளுக்காக ஒடி ஒடி உழைத்து மன நிம்மதி மட்டும் இல்லாமல் தவிப்போர்களே! நீங்கள் மறந்து போன,மதிக்காத,பயமில்லாத இறைவன் உங்களை மறக்காமல் உங்களையே நினைத்து கொண்டிருக்கிறார்.என் மகனே/ மகளே உன் பாவங்களால் என்னை நோகச்செய்தாலும் நீ மனம் திருந்தி வரும் நாளுக்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன் என்கிறார் உங்களை படைத்தவர்.என்று மனம் திருந்தி அவர் மடியில் அமரபோகிறீர்கள் ?
Comments
Post a Comment