இறைவனின் இறைவார்த்தைகள் 25/06/2019
சீராக்கின் ஞானம் 34(18-19)
அநியாயமாய் ஈட்டியவற்றினின்று
பலியிடுவோரின் காணிக்கை
மாசுள்ளது;நெறிகெட்டோரின் நன்கொடைகள்
ஏற்புடையவை அல்ல.
இறைப்பற்றில்லாதோரின்
காணிக்கைகளை உன்னத
இறைவன் விரும்புவதில்லை;
ஏராளமான பலி செலுத்தியதற்காக
அவர் ஒருவருடைய பாவங்களை
மன்னிப்பதில்லை.
நண்பர்களே! நியாயமாக உழைக்காமல் சம்பாதித்தவற்றிலிருந்தும்,இறை நம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்தும்,நெறிகெட்டோர்களிடமிருந்தும் கொடுக்கப்படும் காணிக்கையை இறைவன் விரும்புவதில்லை ஏற்பதும் இல்லை.அதிகமாக காணிக்கை கொடுப்பதால் மட்டும் இறைவன் உங்கள் பாவங்களை மன்னிப்பதும் இல்லை.நியாமாக உழைத்து சிந்திய வியர்வையில் கிடைத்த ஊதியத்தை இறைநம்பிக்கையோடும் ,குடும்ப உறவு சமாதனத்தோடும் , தற்பெருமை இல்லாமல் ,தாழ்ச்சியோடு,மறைவாக, கொடுக்கப்படும் காணிக்கையை இறைவன் மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்கிறார்.
இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment