இறைவனின் இறைவார்த்தைகள் 8/06/2019
சீராக் 4
எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்;தருமம் செய்தல் பாவங்களைக் கழுவிப் போக்கும்.
குழந்தாய்!ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.பசித்திருப்போரை
வாட்டி வதைக்காதே;
வறுமையில் உழல்வோரை
எரிச்சலூட்டாதே. உன்னிடம் உதவி
வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே;உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே.ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால்,அவர்களைப் படைத்தவர்
அவர்களுடைய வேண்டுதலுக்குச்
செவிசாய்ப்பார்.✠ ஏழைகளுக்குச் செவிசாய்;அவர்களுக்கு அமைதியாக,கனிவோடு பதில் சொல். அப்போது நீ உன்னத
இறைவனின் பிள்ளைபோல்
இருப்பாய்; தாயைவிட
அவர் உன்மீது அன்புகூர்வார்.
Comments
Post a Comment