இறைவனின் இறைவார்த்தைகள் 18/06/2019
மத்தேயு 22-39
உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.
நண்பர்களே!அன்பு செய்யவே மனிதனாக இறைவன் இவ்வுலகில் நம்மை படைத்திருக்கிறார்.
உங்களை நீங்கள் அன்பு செய்வது போல் உங்கள் பெற்றோர்கள் நண்பர்கள் /சகோதரர்கள்/உறவினர்கள்/ஏழை எளியவர்கள் /கைவிடப்பட்டோர்/எதிரிகள்/விரும்பாதவர்கள் என யாரையும் ஒதுக்கி தள்ளாதீர்கள்.நீங்கள் பார்த்து பேசி பழகும் அனைவரையும் ஆழமாக நேசியுங்கள் சுயநலமில்லாமல் அன்பு செய்யுங்கள் . உங்களுக்கு வேண்டியவர்களை அரவணைத்தும் வேண்டாதவர்களை வெறுத்தும் உறவுகளை இழக்காதீர்கள். விட்டுக்கொடுத்து உறவுகளை இணையுங்கள் ,பாரபட்சம், தகுதி பார்க்காமல் அனைவருக்கும் அன்பை வாரி வழங்குங்கள் அன்பையே பெறுவீர்கள்.
இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!
Comments
Post a Comment