இறைவனின் இறைவார்த்தைகள்
மத்தேயு 6(14-15)
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
ஒவ்வொரு மனிதனுடைய இதயத்திலும் அன்பு செய்வோர்கென ஒரு இடம் இருப்பது போல வெறுப்பை வளர்க்கவும் வன்மையை பரப்பவும் பகைமையை மறக்காமல் முகம் பார்த்து பேச கூட தகுதி அற்றவர்களுக்கென விரோத இடமும் ஒன்று உண்டு.தலைமுறை தலைமுறையாய் பகைமையை வளர்ப்பதால் என்ன நன்மை அடைந்தோம்.உறவுகளுக்குள் adjustment இல்லாமல் அறுத்து விடுவது எளிது மீண்டும் இணைப்பது சிறமமே மன்னிப்போம்/ மறந்துவிடுவோம் கால இடைவெளி அனைத்தையும் மாற்றும் .ஆற்ற முடியாத மனகாயங்கள் என்பதே இல்லை. மன்னிப்பு என்ற மருந்தினால் நம் மனம் இறங்கினால் உறவுகள் புத்துயிர் பெறும்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment