இறைவனின் இறைவார்த்தைகள் 13/06/2019
மத்தேயு 5(22-24)
தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; `அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.உங்கள் சகோதர/சகோதரிகளிடம் முதலில் சமாதானம் செய்து கொள்ளுங்கள் மனதிலே மன்னிப்பு இல்லாமல் பகையோடு இறைவனை தேடாதீர்கள் உறவுகளிடையே பகைமையை விதைப்பாதால் வரும் நன்மை என்ன? உறவுகளிடையே அமைதியை விதையுங்கள் சமாதானத்தை அறுவடை செய்யுங்கள்.
Comments
Post a Comment