இறைவனின் இறைவார்த்தைகள் 11/06/2019
சீராக்29
இரக்கம் காட்டுவோர் தமக்கு
அடுத்திருப்பவருக்குக்கடன் கொடுக்கின்றனர்;பிறருக்கு உதவி செய்வோர்கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
அடுத்திருப்பவருக்கு அவருடைய
தேவைகளில் கடன் கொடு;உரிய காலத்தில் பிறருடையகடனைத் திருப்பிக்கொடு.சொல் தவறாதே;
அடுத்தவர் மீது நம்பிக்கை வை;
வாங்கின கடனைக்கண்டெடுத்த பொருள்போலப்பலர் கருதுகின்றனர்;தங்களுக்கு உதவியோருக்குத்தொல்லை கொடுக்கின்றனர்.கடன்வாங்கும்வரைகடன் கொடுப்பவரின்
கையை முத்தமிடுவர்;
அடுத்திருப்பவரின் செல்வத்தைப்
பற்றித் தாழ்ந்த குரலில் பேசுவர்;
திருப்பிக் கொடுக்கவேண்டிய
போது காலம் தாழ்த்துவர்;
பொறுப்பற்ற சொற்களைக் கூறுவர்;காலத்தின்மேல் குறை காண்பர்.அவர்கள் கடனைத் திருப்பிக்கொடுக்க முடிந்தாலும்
பாதியைக் கொடுப்பதே அரிது.
அதையும் கண்டெடுத்த பொருள்
என்றே எண்ணிக்கொள்வர்;
இல்லையேல்,கடனைத் திருப்பித் தராமல்ஏமாற்றிவிடுவர்;
இவ்வாறு தாமாகவே
எதிரியை உண்டாக்கிக் கொள்வர்;
சாபத்தையும் வசைமொழியையும்
திருப்பிக் கொடுப்பர்;
மாண்புக்குப் பதிலாக
இகழ்ச்சியைத் தருவர்.
நீங்கள் கொடுக்காமல் ஏமாற்றுவது கடனை மட்டும் அல்ல உங்கள் நம்பிக்கையையுமே.
Comments
Post a Comment