உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு திருப்பலி, செப,தவ,தான தர்மம்,பரிகாரம் செய்து உதவி செய்பவர்களை, உற்றார் உறவினர்கள் கைவிட்டாலும் செப உதவிப்பெற்ற உத்தரிக்கும் ஆன்மாக்கள் கைவிடுவதில்லை. உத்தரிக்கும் ஸ்தலம் -16 : உத்தரிக்கும் ஸ்தல புதுமை..( நீண்ட புதுமையாக இருந்தாலும் சுவாரசியமாக இருக்கும் படியுங்கள்) பிரான்சு தேசத்தில் ஒரு ஏழை ஊழியக்காரி பெண் உத்தரிக்கிற ஆன்மாக்களைப் பற்றிய பிரசங்கம் கேட்டதிலிருந்து இவர்களைப் பற்றி நீங்காத நினைவுடனே இருந்தாள். அநித்திய கொடிய வாதைகளில் இவ்வான்மாக்கள் படும் அகோர துன்பத்தையும், உலகில் இவர்களது நண்பர்களால் எளிதில் மறக்கப்பட்டு, புறக்கணிக்கப்படுவதையும் கேள்வியுற்று பெரிதும் மன்ம் நொந்தாள். பிரசங்கம் செய்தவர் மற்ற காரியங்களைவிட உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுதலைபெறும் தருவாயில் இருக்கும் பல ஆன்மாக்கள் ஒரு பலி பூசை ஒப்புக்கொடுத்தால் உத்தரிப்பு கடன் முடிந்து விடுதலைபெறும் நிலையில் இருப்பதாகவும், ஆனால் அந்த ஒரு திருப்பலி ஒப்புக்கொடுக்க மறுக்கப்பட்டோ, நிறுத்தி வைக்கப்பட்டோ, புறக்கணிக்கப்பட்டோ இருப்பதால் பல வருடங்களாக அகோர நெருப்பில் இவ்வான்மாக்கள் துன்பப்படு...