உத்தரிக்கும் ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்



செசிலியா என்கிற கன்னிகை சேசுநாதர் சிலுவையிலே அனுபவித்த தாகத்திற்கு பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் தண்ணீர்அருந்தாமலிருந்தது கடினமாக ஒறுத்தல் செய்ததால்உத்தரிக்கிற ஸ்தலத்திலே காவல் தூதரின் உதவி


இத்தாலியில் செற்செசு என்கிற நகரில் அர்ச், மர்கரீத்தம்மாளுடைய மடத்திலுள்ள கன்னியர்களில் செசிலியா என்கிற கன்னிகை கடின தபசு செய்து கொண்டிருந்தாள். அவள் எவ்வளவுதான் தாகமாய் இருந்தாலும் சேசுநாதர் சிலுவையிலே அனுபவித்த தாகத்திற்கு பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் தண்ணீர் அருந்தாமலிருந்தாள்.இப்படிப்பட்ட புண்ணியத்தை அநேக வருடங்கள் செய்து கொண்டு வந்த இவள் கடைசியிலே அவஸ்தையாய் இருந்து மரணமடைந்தாள். பின்பு அவளுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் போய்

தன்னுடைய அறப் பாவங்களுக்காக நெருப்புக்குள் வெகு வேதனை அனுபவித்தது. அவளுடைய காவல்

தூதர் அந்த கன்னிகை உயிரோடு இருக்கும் போது அவளுடைய ஆத்தும சரீரத்திற்கு கணக்கற்ற

உபகாரங்களை செய்ததும் தவிர. அவள் உத்தரிக்கிற ஸ்தலத்திலே படுகிற வேதனை சீக்கிரமாய்

முடியத்தக்கதாக அதிசயமான சகாயத்தைச் செய்தார்.


அதாவது: அந்த காவல் தூதர் சேசுநாதருடைய சமுகத்திலே நின்று. என் கர்த்தரே. தேவரீர்

சிலுவையில் அறையுண்டு அனுபவித்த தாகத்தின் துன்பங்களைக் குறித்து, உத்தரிக்கிற ஸ்தலத்தில்

இப்போது வேகிற செசிலியா என்கிற கன்னிகை உயிரோடு இருந்தபோது வெள்ளிக்கிழமைகளில்

எவ்வளவு தாகமாயிருந்தாலும் தண்ணீர் அருந்தாமல் இருந்தாள். அந்தப் புண்ணியத்தை முன்னிட்டு

தேவரீர் அவள் பேரிலே இரக்கமாயிருந்து அவள் அனுபவிக்கிற வேதனையை சீக்கிரமாய் முடித்து அவள்

மோட்சத்திற்கு வர கட்டளையிட்ட வேண்டும் என்று மன்றாடினார்.

அந்த மன்றாட்டிற்கு ஆண்டவர் சம்மதித்ததினாலே காவல் தூதர் உத்தரிக்கிற ஸ்தலத்திலே போய்

தான் கர்த்தரிடம் மன்றாடினதை நெருப்புக்குள் புதைபட்டிருக்கிற செசிலியா என்ற கன்னிகைக்கு அறிவித்தார்.

அதுமட்டுமன்றி அவளைச் சுற்றிச் சுடுகிற நெருப்பின் மேலே காவல் தூதர் கொண்டுவந்த தண்ணீரைத்

தெளித்து அத்தீயை அணைத்து அந்த ஆத்துமத்தை மோட்சத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். இச்செய்தியை

அந்த ஆத்துமமே தான் முன்பு இருந்த மடத்தின் தலைவியான முத்திப்பேறு பெற்ற எமிலியா என்கிற

கன்னிகைக்குத் தோன்றி அறிவித்தது.


சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!