Posts

Showing posts from August, 2022

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நீங்கள் எதையும் விரும்பவும் செயலாற்றவும் தம் திருவுளம் நிறைவேற, உங்களில் செயலாற்றுபவர் கடவுளே.செய்வதெல்லாம் முணுமுணுக்காமல் வாதாடாமல் செய்யுங்கள். அப்பொழுதுதான் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமின்றி மாசற்றவர்களாய்க் கடவுளின் குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; பிலிப்பியர் 2(13-15). சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் மறையுரைகளில் என் ஜெபமாலையைச் செபிக்கும்படி மக்களை வற்புறுத்தவும், செபமாலையால் உங்கள் வார்த்தைகள் ஆன்மாக்களுக்கு அதிகமான கனிகளை பெற்றுத்தரும்."  தேவ மாதா புனித.சாமிநாதருக்கு வெளிப்படுத்தியது. When you give a sermon, urge people to say my Rosary, and in this way your words will bear much fruit for souls."  - Our Lady to St. Dominic. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள

Image
  தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் ஆண்டவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும். உரோமையர் 2:8 சேசுவுக்கே புகழ் !  தேவமாதாவே வாழ்க !‌‌ அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளிடம் அன்புகூர்வதே மிகப்பெரிய காதல். கடவுளை  அறிவதே வாழ்க்கை. கடவுளுக்கு பணிசெய்வதே நம் சுதந்திரம். அவரை புகழ்வதே  ஆன்மாவின் மகிழ்ச்சி. கடவுளே உமது அருளால் எங்களைச் சூழ்ந்து காத்தருளும் இங்கும் எங்கும், இப்போதும் எப்போதும்! அர்ச்.அகுஸ்தினார். சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கவலை, பதட்டம் மற்றும் வேதனையை உருவாக்கும் விஷயங்களில் உங்கள் ஆற்றலையும், நேரத்தையும் செலவிடாதீர்கள். அவசியமானது ஒன்றே, ஆத்மார்த்தமாக கடவுளை நேசிக்கவும். அர்ச.பியோ. Don't spend your energies on things that generate worry,Anxiety and anguish.only one thing is necessary .lift up your spirit and love god. St.Pio. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.  மத்தேயு6(19-21) சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  பிரச்சனைகள் இல்லாத நிலையில் சமாதானம் கிடைத்துவிடுவதில்லை. கடவுளின் பிரசன்னத்தில் மட்டுமே சமாதானம் கிடைக்கிறது. Peace is not found in the absence of problems.Peace is found in the presence of god. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்;அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது; நம்மை பற்றிய அவர்களது இறையச்சம் வெறும் மனித கற்பனையே. ஏசாயா 29(13-14) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   அயலார் ஏற்படுத்திய காயங்களை ஒருவருக்கு மன்னிப்பது மிகவும் கடினமாக இருந்தால், அவர் சிலுவையைப் பார்த்து, கிறிஸ்து நமக்காகத் தம்முடைய இரத்தம் முழுவதையும் சிந்தியதை  நினைத்து பாரக்கவும், மேலும் எதிரிகளை அவர்  மன்னித்தது மட்டுமல்லாமல்,  பரலோகத் தந்தை அவர்களை மன்னிக்குமாறு பிரார்த்தனையும் செய்ததை நினைவில் கொள்ளவும். புனித பிலிப் நேரி. If a man finds it very hard to forgive injuries, let him look at a Crucifix, and think that Christ shed all His Blood for him, and not only forgave His enemies, but even prayed His Heavenly Father to forgive them also." St Philip Neri . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார். ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்திருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். 2 பேதுரு 3:9-10 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தீமையை வெறுப்பவர்கள் மீது ஆண்டவர் அன்பு கூருகின்றார்: தம் புனிதர்களின் ஆன்மாக்களைக் காக்கின்றார்; தீயவர்களின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.  நீதிமானுக்கு ஒளி எழுகின்றது: நேரிய உள்ளத்தவர்க்கு மகிழ்ச்சி பிறக்கின்றது. நீதிமான்களே, ஆண்டவரை நினைந்து அகமகிழுங்கள்: அவரது திருப்பெயரைப் புகழ்ந்தேத்துங்கள். சங்கீதம் 96(10-12) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  உண்மையான ஞானம் எல்லோரையும் மதிப்பிட்டு தீர்ப்பளிப்பது அல்ல, மாறாக அனைவரையும் நேசிப்பது. சைமன் ஆஃப் மவுண்ட்.அதோஸ். True wisdom is not judge everyone, but to love everyone. siemon of Mt.Athos. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அருள்நிறை மந்திரத்தின் வல்லமை

Image
  *செபமாலை வணக்க மாதம்* வத்திக்கானில், பேய்களை ஓட்டுவதில் புகழ்பெற்ற, அருட்தந்தை கபிரியேல் அமோர்த், ஒருநாள் அவரது சக குருவானவர் பேயினை விரட்டும் போது பேயானது, " ஒவ்வொரு அருள்நிறை மந்திரமும் எனது தலையில் இடியாக விழுகின்றது. கிறிஸ்தவர்கள் செபமாலையின் சக்தியை உணர்ந்து சரியாக பயன்படுத்தினால், அந்த நாள் எனது ஆட்சியின் முடிவு நாள் " என்று கூறியதாக சாட்சியமளித்துள்ளார்.  *நமது ஆன்ம சரீரப் பாதுகாப்பிற்காகவும், சாத்தானின் சூழ்ச்சிகளை வெற்றி கொள்ளவும், குடும்பங்களில் சமாதானத்தை ஏற்ப்படுத்தவும்  மாமரி தந்த செபமாலையை இனியாவது தினமும் செபிக்க ஆரம்பிப்போம். The famous Vatican exorcist Fr Gabriele Amorth once testified, 'One day a colleague of mine heard the Devil say during an exorcism, "Every Hail Mary is like a blow on my head. If Christians knew how powerful the Rosary was, it would be my end.' சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். திருப்பாடல் 145 ( 17-18). சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள

Image
  "நாம் படுகிற வேதனைகள் நாம் செய்துள்ள பாவங்களை விடக் குறைவு என்றும், கடவுள் தம் ஊழியர்களைத் தண்டிக்கிறது போல் நம்மைத் தண்டிப்பது நம்மை அழிப்பதற்கு அன்று நம்மைத் திருத்துவதற்கே என்றும் நம்புவோம்". யூதித் 8 : 25-27 சேசுவுக்கே புகழ்!    தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவரே! எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். ஆண்டவரே, உம் தீர்ப்புகள் நீதியானவை என அறிவேன்: நீர் என்னைத் துன்பத்துக் குள்ளாக்கியது நீதியே. திருப்பாடல் 119-71/75. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  நமது எண்ணமும் செயலும் இறைவனுக்கு உகந்ததாக இருக்குமாயின் இறைவனே தடைகளை தகர்த்தெரிவார்.வழிநடத்துவார். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது. 1 பேதுரு 3:4 சேசுவுக்கே புகழ்!  தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துன்பத்தை அறியாத அன்பு, அன்பே அல்ல.  - அர்ச் கிளேர். Love that does not know of suffering is not worthy of the name."  - St. Clare of Assisi. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஒருவன் எவ்வளவுக்கு அக்கினியை நெருங்கிப் போவானோ அவ்வளவுக்கு அதன் உஷ்ணத்தை உணருவான்.ஒருவன் கடவுளுக்கு எவ்வளவு அருகில் இருக்கிறானோ ,அவ்வளவு அவனுடைய பரிசுத்த தனம் பெரிதாயிருக்கும். சேசுவுக்கே புகழ் !  தேவ மாதாவே  வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  குழந்தைகளை இறை ஒழுக்கத்தோடு, இறைவனுக்கு கீழ்படிந்து வளர்த்தால், குழந்தைகள் தானாக பெற்றோர்களுக்கு கீழ்படிந்து வளர்வார்கள். சேசுவுக்கே புகழ்!   தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசு கிறிஸ்துவின் தாய் மீது பக்தி இல்லாதவன், உண்மையான கிறிஸ்தவனே அல்ல.  அர்ச். ஜான் யூட்ஸ். A man is no true Christian if he has no devotion to the Mother of Jesus Christ."  - St. John Eudes. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  எல்லாருடனும் சமாதானமாயிருக்க முயலுங்கள்; பரிசுத்தத்தை நாடுங்கள். பரிசுத்தம் இல்லாமல் ஆண்டவரை ஒருவனும் காணமாட்டான். எபிரேயர் 12:14 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே  வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  எந்த மிருகமும் தன் உயிருக்கு ஆபத்து வருவதை அறிந்து, அவசரமாகத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றது. மனிதன் மட்டும் தன் ஆத்துமத்துக்குக் கேடாயிருக்கிற பாவத்தைத் தள்ளவும், நன்மையாயிருக்கிற புண்ணியத்தைத் தேடவும், அறிந்தும் அறியாதவனாய்த் திரிகிறான். வீரமாமுனிவர். சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம்  அன்பு செய்யவே பிறந்தோம், நேசிப்பதற்காக வாழ்கிறோம், நாம் இன்னும் அதிகமாக நேசிப்பதற்காக இறப்போம்."  அர்ச்.ஜோசப் கஃபாசோ. We are born to love, we live to love, and we will die to love still more.” St. Joseph Cafasso. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எதிரிகள் இல்லாமல் இந்த பூமியில் யார் வாழ முடியும்? உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள். எந்த வகையிலும்  எதிரியின் வன்முறையால் உங்களை காயப்படுத்த முடியாது, ஆனால் உங்கள் எதிரிகளை  நேசிக்கவில்லை என்றால் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்வீர்கள்.  அர்ச். அகஸ்டின். You have enemies. For who can live on this earth without them? Take heed to yourselves: love them. In no way can your enemy so hurt you by his violence, as you hurt yourself if you love him not. Saint Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. யோவான்3-20. சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனிதர்களை அல்ல. இறைவனை முன்னிலைப்படுத்தி நற்செயல்களை செய்யுங்கள்

Image
  மனிதனை மகிமைபடுத்தி செய்யப்படும் நற்செயல்களை விட இறைவனை மகிமைப்படுத்துவதற்க்காகச் செய்யபடும் நற்செயல்கள் மேலானவை. தொண்டர்கள் தன் தலைவனை முதன்மைப்படுத்த செய்யபடும் நற்செயல்களை விட ரசிகன் தன் நடிகனை பெருமைப்படுத்த செய்யப்படும் நற்செயல்களை விட இறைவனை முன்னிலைப்படுத்தி பக்தன் செய்யும் நற்செயல்கள் மேலானவை. ஏனெனில், மனிதர்களை மையப்படுத்திச் செய்யப்படும் நற்செயல்களுக்கான பிரதிபலனை தலைவனிடமோ நடிகனிடமோ பெறலாம், பெறாமலும் போகலாம். ஆனால் இறைவனை மாட்சிப்படுத்துவதற்க்காக, இறைவனை மையப்படுத்தி பக்தன் செய்யப்படும் நற்செயல்கள் இறைவனிடமிருந்து ஒரு போதும் பிரதிபலன் பெறாமல் போகாது. ஒரு வேளை தலைவனிடமிருந்து ஆதாயமோ, உயர்ந்த பதவியோ நடிகனிடமிருந்து புகழோ பிரதிபலனாக பெற்றாலும் .இறைவனிடமிருந்து பெறப்போகும் பிரதிபலனுக்கு அவை ஈடு இணையாகாது. ஏனெனில் மனிதனிடமிருந்து நிலையற்ற கைமாறு பெருவதைவிட இறைவனிடமிருந்து பெரும் நிலையான கைமாறு மேலானது. இறைவன் பெயரில் பலருக்கு தெரியும் வகையில் சுயலாபத்திற்க்காக செய்யப்படும் தர்மங்கள், தானங்கள்,...நற்செயல்கள் என்ற போர்வையில் செய்யப்படும் விளம்பர,வியாபாரம்.இதை செய்வதால் இ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 *Mothermary ஆண்டவர் தனது அற்புதங்களை தேவமாதா வழியாக துவங்கினார், தொடர்ந்தார், தேவமாதா மூலமே அவர் காலத்தின் இறுதி வரை அற்புதங்களை நிகழ்த்துவார்.  புனித.லூயிஸ் மரிய மான்ட்ஃபோர்ட். He began and continued his miracles through Mary, and through Mary he will continue to do so until the end of times."  St. Louis-Marie de Montfort. பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். 23அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்  மத்தேயு 7: 22-23 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்; அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும். நீதிமொழிகள் 29-4. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மனம் மாறி, உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது. ஆண்டவருக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். எசேக்கியேல் 18(30-31). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  தூங்க செல்லும் முன்னதாக  குடும்பம் ஒன்றாய்ச் சேர்ந்து  கூடி ஜெபிக்கும் பழக்கம் வந்தால் தீமை எல்லாம் தீரும். சேசுவுக்கே  புகழ்!   தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மனிதனால் தாங்கக்கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை. கடவுளோ, நம்பத்தக்கவர்; வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி உங்களை விடமாட்டார். சோதனை வரும்பொழுது அதைத் தாங்கிக்கொள்ளும் திறனளித்து அதனின்று தப்பவும் வழி செய்வார்.  1 கொரி 6-13 சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் ஆன்மாவுக்கு ஈடாக எதைக் கொடுப்பார். மத்தேயு 16:26 சேசுவுக்கே புகழ்!   தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஒரு நல்ல பள்ளி  மனிதனுக்கு தேவையான  கல்வியை முழுவதுமாக வழங்குகிறது , இதற்கும் மேலாக ஒரு நல்ல கத்தோலிக்க பள்ளி, அதன் மாணவர்கள் அனைவரும் புனிதர்களாக மாற உதவ வேண்டும்.  திருத்தந்தை 16ம் பெனடிக்ட் A good school provides a rounded education for the whole person. And a good Catholic school, over and above this, should help all its students to become saints. - Pope Emeritus Benedict XVI சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  சகோதரர்களே, மகிழ்ச்சியோடு இருங்கள்; ஞான நிறைவடைய முயலுங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; ஒன்றுபட்டு வாழுங்கள்; சமாதானமாய் இருங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார். 2கொரி13-11. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்கள்

Image
  போலி பிரச்சார கூட்டங்கள் 😡 பொய் சொல்வது  தான் நற்செய்தியா? எப்படி பொய் சொன்னாலும் நம்பும் ஏமாளிகள் உள்ளவரை ஏமாற்றுபவர்களுக்கு என்னக்கவலை?  2019 புத்தாண்டு அன்று இவர் நடத்திய வாக்குத்தத்த கூட்டம் இது..  ஆண்டவர்  இயேசுவே வந்து இவரிடம் சொல்லி விட்டு சென்றார் என்று  இவர் சொன்ன எதுவும் நடக்க வில்லை.... ஆண்டவர் சொன்னார் என்று பொய்யை சொல்லியப் போலி போதகர் பின்னால் போகும் மக்கள் ஞான வெளிச்சம் பெறப்போவது எப்போது? போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது. நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் ஜெபிக்கும் போது நாம் கேட்ட  தேவ வரத்தை ஆண்டவர் கொடுக்காவிட்டாலும் அதைவிட அதிகப்பலனுள்ள தேவக்கொடையை நமக்கு அருள்வார்.சர்வேசுரன் ஒன்று நாம் கேட்பதை தருவார் அல்லது நமக்கு அதிக நன்மை பயக்கக் கூடியதை அருள்வார். அர்ச்.பெர்னார்டு. சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே   எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உண்மை நெறியை விட்டகன்று நாம் அலைந்து திரிந்தோம், நீதியின் ஒளி நம்மேல் ஒளிராமல் போயிற்று, அறிவுக் கதிரவன் நமக்கு உதயமாகவில்லை! அக்கிரமமும் அழிவும் நிறைந்த வழியில் மனமார நாம் நடந்தோம், பாதையில்லாப் பாலை நிலைங்களில் பயணம் செய்தலைந்தோம், ஆனால் *ஆண்டவரின் வழியை நாம் அறிந்தோமில்லை.* நமது இறுமாப்பினால் நமக்கு கிடைத்த பலனென்ன? செல்வப் பெருக்கினால் நமக்கு விளைந்த நன்மைதான் என்ன? ஞான ஆகமம் 5(6-8) சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க!‌‌ அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் வார்த்தைகள்

Image
உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?  மத்தேயு 5(43-45) நமது ஒற்றுமையில் தான் 75 வது ஆண்டு சுதந்திரதினத்தின் வெற்றி உள்ளது. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தீமையின் கவர்ச்சி நன்மையை இருளச்செய்கிறது, இச்சை என்னும் புயல் மாசற்ற மனத்தைக் கெடுத்து விடுகிறது ஞான ஆகமம் 4-12. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நீண்ட காலம் வாழ்வதால் முதுமைக்கு மதிப்பில்லை, ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று.ஆனால் அறிவுடைமையே மனிதனுக்கு நரை திரை, மாசற்ற வாழ்வே பழுத்த முதுமைப் பருவமாம்.  ஞான ஆகம்ம 4(8-9) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  " உன் வாழ்நாள் எல்லாம் கடவுளை உன் எண்ணத்தில் கொண்டிரு. ஒருகாலும் பாவத்துக்கு இணங்காதபடியும், நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை மீறாதபடியும் எச்சரிக்கையாய் இரு. உன் உடைமையிலிருந்து தானம் செய். எந்த ஏழையைக் கண்டாலும் புறக்கணியாது அவனுக்குப் பரிவு காட்டு. அவ்வாறு செய்தால் கடவுளும் உன்னைப் புறக்கணியாமல் உனக்குப் பரிவு காட்டுவார். உன் நிலைமைக்கு ஏற்ப பிறர் மேல் இரக்கம் காட்டு. உனக்கு மிகுதியான செல்வம் இருக்கும் போது ஏராளமாய்க் கொடு: குறைந்த செல்வம் இருக்கும் போது கொஞ்சமாய், ஆனால் நன்மனத்தோடு கொடுக்கும்படி கவனித்துக்கொள். இவ்வாறு நீ செய்தால், தேவைப்படும் நாளில் அதுவே உனக்குப் பேருதவியாய் இருக்கும். ஏனெனில் ஈகை எல்லாப் பாவங்களினின்றும் சாவினின்றும் ஒருவனை மீட்கிறது. அத்தோடு ஆன்மாவை இருளினின்று விடுவிக்கிறது. தானம் கொடுப்போர் அனைவர்க்கும் அவர்களின் ஈகை உன்னத கடவுளின் திருமுன் ஆழ்ந்த நம்பிக்கையைத் தரும்." தொபியாசு 4 : 6-12 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பொல்லாதவர்கள் பின்வருமாறு எண்ணி ஏமாந்து போயினர்.ஏனெனில் அவர்களின் தீய எண்ணமே அவர்களை குருடராகிவிட்டது.கடவுளின் மறைபொருட்களை அவர்கள் அறியார்கள்.தூய வாழவிற்கு கைம்மாறு உண்டு என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை.மாசற்ற ஆன்மாக்களுக்கு பரிசு கிடைக்கும் என அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.ஏனெனில் அழியாமைக்கென்றே கடவுள் மனிதனைப் படைத்தார்.தமது காலங்கடந்த தன்மையின் சாயலாகவே அவனை உண்டாக்கினார். ஞான ஆகமம் 2(21-23) சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  சிலுவை என்பது நடந்து முடிந்த ஒன்றல்ல; சிலுவையில் அறையப்படுவது என்பது நடக்கும் ஒன்று. இது மனித இனத்தில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் காணப்படலாம், ஏனென்றால் இது நன்மை மற்றும் தீய சக்திகளுக்கிடையேயான காவியப் போராட்டம்.  — பேராயர் ஃபுல்டன் ஷீன். The Cross is not something that has happened; the Crucifixion is something that is happening.  It can be found at any place and at any hour in the human race, for it is the epic struggle of the forces of good and evil.  — Archbishop Fulton Sheen. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 #lent மனநிறைவு என்பது பாவத்தையும்,பாவத்திற்கான சந்தர்ப்பங்களை தவிர்ப்பதில் தான் உள்ளது.  எனவே, விரதமே காமத்திற்கு சரியான மாற்று மருந்தாகும்;  பெருமை, பொறாமை, கோபம் மற்றும் சோம்பலுக்கு செபமே,மருந்து. பேராசைக்கு தர்மமே மருந்து.  புனித ரிச்சர்ட் Satisfaction consists in the cutting off of the causes of the sin. Thus, fasting is the proper antidote to lust; prayer to pride, to envy, anger and sloth; alms to covetousness” St. Richard of Chichester. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசு கிறிஸ்து மனுகுலத்தின் மீது  கொண்டுள்ள அன்பின்  பூரணமான வெளிப்பாடே திவ்விய நற்கருணை. ஆண்டவருடைய  மனிதவதார வாழ்கையில் திவ்விய நற்கருணையே அனைத்து இரகசியங்களிலும் உட்சபட்சமாகும். அர்ச்.பியர் ஜூலியன் ஐமார்ட் The Holy Eucharist is the perfect expression of the love of Jesus Christ for man, since It is the quintessence of all the mysteries of His Life. St Pierre Julian Eymard. சேசுவுக்கே புகழ்! தேமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் வார்த்தைகள்

Image
  ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள் நேர்மையற்றவருக்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைம்மாறாக அளிப்பார். கொலோசையர் 3:25 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.