மனிதர்களை அல்ல. இறைவனை முன்னிலைப்படுத்தி நற்செயல்களை செய்யுங்கள்

 



மனிதனை மகிமைபடுத்தி செய்யப்படும் நற்செயல்களை விட இறைவனை மகிமைப்படுத்துவதற்க்காகச் செய்யபடும் நற்செயல்கள் மேலானவை.

தொண்டர்கள் தன் தலைவனை முதன்மைப்படுத்த செய்யபடும் நற்செயல்களை விட

ரசிகன் தன் நடிகனை பெருமைப்படுத்த செய்யப்படும்

நற்செயல்களை விட

இறைவனை முன்னிலைப்படுத்தி பக்தன் செய்யும் நற்செயல்கள் மேலானவை.

ஏனெனில்,

மனிதர்களை மையப்படுத்திச் செய்யப்படும் நற்செயல்களுக்கான பிரதிபலனை தலைவனிடமோ நடிகனிடமோ பெறலாம், பெறாமலும் போகலாம்.

ஆனால் இறைவனை மாட்சிப்படுத்துவதற்க்காக, இறைவனை மையப்படுத்தி பக்தன் செய்யப்படும் நற்செயல்கள் இறைவனிடமிருந்து ஒரு போதும் பிரதிபலன் பெறாமல் போகாது.

ஒரு வேளை தலைவனிடமிருந்து ஆதாயமோ, உயர்ந்த பதவியோ நடிகனிடமிருந்து புகழோ பிரதிபலனாக பெற்றாலும் .இறைவனிடமிருந்து பெறப்போகும் பிரதிபலனுக்கு அவை ஈடு இணையாகாது.

ஏனெனில் மனிதனிடமிருந்து நிலையற்ற கைமாறு பெருவதைவிட இறைவனிடமிருந்து பெரும் நிலையான கைமாறு மேலானது.

இறைவன் பெயரில் பலருக்கு தெரியும் வகையில் சுயலாபத்திற்க்காக செய்யப்படும் தர்மங்கள், தானங்கள்,...நற்செயல்கள் என்ற போர்வையில் செய்யப்படும் விளம்பர,வியாபாரம்.இதை செய்வதால் இறைவனிடமிருந்து எந்த பலனையும் பெறமுடியாது.

இறைவனுக்கும் நமக்கும், உதவிப்பெறுவோருக்கு மட்டும் தெரியும் வகையில் செய்யப்படும் நற்செயல்களே இறைவனிடமிருந்து பிரதிபலனையும்,ஆன்ம சரீர நலன்களையும் பெற்றுத்தரும்.

இப்பேறப்பட்ட நற்செயல்கள், நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு நல்ல பரிகாரமாகவும் அமைகிறது.


இறைவனுக்கு பக்தனாக

இல்லறத்தில் பிரம்மாணிக்கமாக இருக்க வேண்டியவர்கள் பாதை மாறி முழுநேர

அரசியல் தொண்டர்களாவும்

நடிகனின் ரசிகனாகவும் செலவிடும் ஒவ்வொரு நிமிடங்களும், வீணாக்கும் உடல் உழைப்பு எல்லாமே நம்மை படைத்த இறைவனுக்கு சொந்தமானவை. 


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.





Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!