இறைவனின் இறைவார்த்தைகள்
பொல்லாதவர்கள் பின்வருமாறு எண்ணி ஏமாந்து போயினர்.ஏனெனில் அவர்களின் தீய எண்ணமே அவர்களை குருடராகிவிட்டது.கடவுளின் மறைபொருட்களை அவர்கள் அறியார்கள்.தூய வாழவிற்கு கைம்மாறு உண்டு என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை.மாசற்ற ஆன்மாக்களுக்கு பரிசு கிடைக்கும் என அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.ஏனெனில் அழியாமைக்கென்றே கடவுள் மனிதனைப் படைத்தார்.தமது காலங்கடந்த தன்மையின் சாயலாகவே அவனை உண்டாக்கினார்.
ஞான ஆகமம் 2(21-23)
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment