இறைவனின் இறைவார்த்தைகள்
" உன் வாழ்நாள் எல்லாம் கடவுளை உன் எண்ணத்தில் கொண்டிரு. ஒருகாலும் பாவத்துக்கு இணங்காதபடியும், நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை மீறாதபடியும் எச்சரிக்கையாய் இரு.
உன் உடைமையிலிருந்து தானம் செய். எந்த ஏழையைக் கண்டாலும் புறக்கணியாது அவனுக்குப் பரிவு காட்டு. அவ்வாறு செய்தால் கடவுளும் உன்னைப் புறக்கணியாமல் உனக்குப் பரிவு காட்டுவார்.
உன் நிலைமைக்கு ஏற்ப பிறர் மேல் இரக்கம் காட்டு.
உனக்கு மிகுதியான செல்வம் இருக்கும் போது ஏராளமாய்க் கொடு: குறைந்த செல்வம் இருக்கும் போது கொஞ்சமாய், ஆனால் நன்மனத்தோடு கொடுக்கும்படி கவனித்துக்கொள்.
இவ்வாறு நீ செய்தால், தேவைப்படும் நாளில் அதுவே உனக்குப் பேருதவியாய் இருக்கும்.
ஏனெனில் ஈகை எல்லாப் பாவங்களினின்றும் சாவினின்றும் ஒருவனை மீட்கிறது. அத்தோடு ஆன்மாவை இருளினின்று விடுவிக்கிறது.
தானம் கொடுப்போர் அனைவர்க்கும் அவர்களின் ஈகை உன்னத கடவுளின் திருமுன் ஆழ்ந்த நம்பிக்கையைத் தரும்."
தொபியாசு 4 : 6-12
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
.jpeg)
Comments
Post a Comment