Posts

Showing posts from September, 2021

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள்-7

Image
 நான் மோட்சத்திலிருந்து வந்து உங்களிடம் கேட்க வந்த செபம்,செபமாலை. அதைக்கொண்டு நீங்கள் என் எதிரியின் சதித்திட்டங்களை திறந்துக்காட்ட முடியும்.அவனுடைய அநேக ஏமாற்றுகளிலிருந்து தப்ப முடியும்.உங்கள் பாதையில் பதிந்துள்ள ஆபத்துகளிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளமுடியும்.உங்களை அது தீமைகளிலிருந்து காக்கிறது.என்னிடம் அதிக நெருக்கமாய் கொண்டு வருகிறது.உங்கள் வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் என்னால் இருக்கமுடிகிறது. கடந்த காலத்திலும் இக்கட்டான சந்தரப்பங்களிலும் நடந்தது போலவே இன்றும் என் சிறு குழந்தைகளே அடிக்கடி செபமாலை சொல்வதினால் உங்களிடமிருந்து எனக்கு வரும் சக்தியைக் கொண்டு திருச்சபையானது வெற்றி சூடும் அன்னையால் தற்காக்கப்படும். -தேவமாதா அருள்நிறை மந்திரத்தின் பெருமை வெறுப்போர் வாழ்வில் ஆன்மீக வறுமை மூவொரு இறைவன் அருளிய வார்த்தை மாமரி அன்னைக்கு பலம் தரும் வார்த்தை செபமாலை என்பது ஏளனம் அல்ல ஜெயம் தரும் மாலை உலகை வெல்ல அன்னையில் துவக்கி ஏசுவில் முடிந்து அலகையின் தலையை அடித்தே நொருக்கு.  சேசுவுக்கே புகழ் ! தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள் -6

Image
 *அதிதூதர்களான அர்ச்.மிக்கேல்,கபரியேல்,ரஃபேல் விழா.* இறுதி காலத்தில் இருக்கும் என் அன்பார்ந்த அப்போஸ்தல பிள்ளைகளே போராடுங்கள்.இக்காலகட்டமே எனது போரின் காலமாகவும் எனது மகிப்பெரிய வெற்றியுமாயிருக்கிறது.இப்போரில் உங்களோடு தேவனின் வானத்தூதர்களும் நான் அவர்களுக்கு அளித்த கட்டளையின் படி போரிடத் தயாராயிருக்கிறார்கள்.என்றுமே இறைவனுக்கு எதிராகவும் இறை இராஜ்யத்திற்கு எதிராகவும் போரிட்டு வரும் தீயவனான அலகை வீசியுள்ள பயங்கரத்திற்குரிய வலையை மேன்மை தங்கியத் தமத்திரித்துவத்தின் ஒளியில் அவர்கள் துல்லியமாக காண்கிறார்கள்.நீதிக்கும்,அநீதிக்கும்,வானவர்களுக்கும் அலகைகளுக்கும் நடக்கும் போர்.நீங்கள் இந்த போரிலே உள்ளிடப்பட்டிருக்கிறீர்கள்.அதன் பொருட்டு வானவர்களின் பாதுகாப்பில் உங்களை கையளித்து உங்களின் செபத்தினால் அவர்களின் சக்தி வாய்ந்த உதவியை பெறுவதற்கு அடிக்கடி செபியுங்கள். விண்ணுலகில் இருக்கும் யாவரும் என் திட்டத்தை அறிவார்கள்.என் வெற்றியின் காலத்தையும் அறிவர்.நீங்கள் வாழும் இக்காலத்தில் அலகையின் எதிர்ப்பு பலம் வாயந்ததாகவும் தொடர்ச்சியாய் உலகம் முழுவதும் இருப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். உங்களை...

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள் -5

Image
    இயேசு மோட்சத்தில் எவ்வளவு உண்மையாக இருக்கிறாரோ அதே போல் உண்மையாக உலகத்தில் திவ்விய நற்கருணையில் தம் ஆத்துமத்தோடும்,சரீரத்தோடும்,இரத்தத்தோடும்,தேவ சுபாவத்தோடும் இருக்கிறார். அவருடைய மகிமையுள்ள வெற்றியானது,யாவற்றுக்கும் மேலாக அவர் திவ்விய நற்கருணை இயேசுவாக இருக்கிறதிலேயே விளங்கித் துலங்கும்.திருச்சபையின் முழு வாழ்க்கையின் இருதயமாகவும் நடுநாயகமாகவும் திவ்விய நற்கருணை மீண்டும் வரும். நற்கருணையில் என் குமாரன் இயேசுவைப் சுற்றிலும் ஏறப்பட்டுள்ள பெரிய வெறுமையை நானே நிரப்புவேன்.அவருடைய தெய்வீக பிரசன்னத்தைச் சுற்றிலும் நான் ஒரு அன்பினாலான அரண் அமைப்பேன்.என் அரும் மகன்களே,இது உங்கள் வழியாக நான் செய்வேன் உலகத்தில் சகல நற்கருணைப் பேழைகளை சுற்றிலும் ஒரு அன்புக்காப்பாக உங்களை ஏற்ப்படுத்த நான் விரும்புகிறேன். -தேவமாதா இயேசுவுக்கே புகழ் ! தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள்-4

Image
  இன்று பெரும் நன்றிக்கெட்டத்தன்மையும்,கைவிடப்பட்ட நிலையும், வெற்றிடமே நற்கருணை நாதர் இயேசுவின் திருப்பீடத்தைச் சூழ்ந்திருக்கிறது.இவ்வித சூழ்நிலைக்காகவே நான் அன்று பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்கு வானத்தூதர் வாயிலாக இச்சிறு செபத்தினைக் கற்பித்தேன்."மகா பரிசுத்த தமத்திரித்துவமே பிதாவே சுதனே பரிசுத்த ஆவியே உம்மை மிகவும் ஆராதிக்கிறேன்.உலகெங்கும் உள்ள திவ்விய நற்கருணை பேழையில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்க முடியாத திருச்சரீரத்தையும் இரத்தத்தையும் ஆத்துமத்தையும் தெய்வீகத்தையும் அவருக்கு எதிராகச் செய்யப்படும் சகல நிந்தை,துரோகம், அலட்சியங்களுக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.சேசுவின் திரு இருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற திருஇருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களை பார்த்து நிர்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன் "  இச்செபம் இக்காலத்திற்க்காக அன்று கறப்பிக்கப்பட்டது. -தேவமாதா இயேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா இருதயத்தின் செய்திகள்-3

Image
  என் அருமை மகன்களே இந்நாட்களில் திவ்விய நற்கருணை பேழையைக்கூட இருள் மறைத்துவிட்டதே,அதைச் சுற்றிலும் எத்தகைய வெறுமை,எவ்வளவு அலட்சியம்,எப்படிப்பட்ட கவலையீனம்!!சந்தேகங்களும் மறுதலிப்புகளும் தேவதுரோகங்களும் அன்றாடம் அதிகரிக்கின்றனவே.இயேசுவின் சற்பிராசத திருஇருதயம் அவருடையவர்களால் அவருடைய சொந்த வீட்டில்,உங்கள் நடுவில் அவர் கொண்டுள்ள தெய்வீக வாசஸ்தலத்தில் காயப்படுத்தப்படுகிறதே. வெள்ளமாய் வரும் தேவ துரோகங்களுக்கு அணையிடுங்கள்.இவ்வளவு காலத்திலும் இதுபோல் இத்தனை திவ்விய நற்கருணைகள் வாங்கப்பட்டதுமில்லை இவ்வளவு தகுதியற்ற தனமாய் அவரை உட்கொள்ளப்பட்டதுமில்லை.தேவதுரோகமாய் உட்க்கொள்ளப்படும் திவ்விய நற்கருணைகள் அதிகரிப்பதால் திருச்சபையானது ஆழமாய் காயப்பட்டுள்ளது.இதை நிறுத்துங்கள். விசுவாசிகளிடத்தில் பாவத்தைச் பற்றிய உணர்வை வளர்ப்பதாலும் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் திவ்விய நற்கருணை உடகொள்ள வரவேண்டும் என்று அவர்களை அழைப்பதாலும்,சாவான பாவத்திலிருப்பவர்களுக்கு திவ்விய நற்கருணை உட்கொள்ளுமுன் அவசியமாயிருக்கிற பாவசங்கீர்தனத்தை அடிக்கடி பெற்றுக்கொள்ளும்படி படிப்பபிப்பதாலும் இவ்விசுவாசிகள் அனைவரும் தகுந்த ஆ...

மறுதலிக்கப்படும் கத்தோலிக்க வேத சத்தியங்கள் நரகம் -3

Image
  கத்தோலிக்கத் திருச்சபை தவறாவரத்தோடு போதித்ததும்,அர்ச்சிஷ்டவர்களும் திருச்சபை தந்தையரும்,வேதபாரகர்களும் பலவிதமாக கூறியுள்ளதுமாகிய இந்த நரக சத்தியத்தை பற்றி மரியா வால்டோர்ட்டாவுக்கு நம் ஆண்டவரே நேரடியாக தந்தருளின விளக்கத்தைப் பார்ப்போம். மனிதர்கள் நரகம் இருப்பதை இப்போதெல்லாம் விசுவசிப்பதேயில்லை.தங்கள் விருப்பத்திற்க்கேற்ற ஒரு மறுவுலக வாழ்வைக் கண்டுப்பிடிக்கிறார்கள்.அந்த வாழ்வு பெரும் தண்டனைக்கு தகுதியுள்ளதாயிருக்கிற, மனச்சான்றுக்கு பயங்கரமுள்ளதாக இருக்கிறது. தீயவனுடைய ஆசைகளோடு எந்த அளவுக்கு தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் தாங்கள் யாருடைய ஊழியர்களாக அல்லது அடிமைகளாக இருக்கிறார்களோ,அந்த சாத்தானால் கற்ப்பிக்கப்படுகிற துர்புத்தி,தங்கள் துர்ச்செயல்களிலிருந்து விலகுவதையும் ,தங்கள் பரிசோதித்து அறிவதையும் விரும்புவதில்லை.இதனால் நரகம் நிஜமாகவே இருப்பதை விசுவசிக்க மறுத்து வேறொன்றை உருவாக்குகிறார்கள். நரகம் என்பது தீயவர்கள் தண்டிக்கப்படும் ஓர் இடமாகும் .அங்கு அவர்களுக்கு நித்தியத்திற்கும் கடவுளின் காட்சி மறுக்கப்படுகிறது.அங்கு அவர்கள் பயங்கரமான வாதைகளுக்கு உள்ளாகிறார்கள்.1908ல் த...

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா இருதயத்தின் செய்திகள் -2

Image
  திட்டமிட்டு உங்களுக்குத் தீங்கிழைக்க விரும்பும் எவனும் உங்களைத் தாக்க இயலாது.நல்லெண்ணத்துடன் அப்படி எவனும் செய்தால்,அத்தீங்கு உங்களைத்தாக்கும் முன் அவன் ஒளி பெறுவான். திருச்சபையில் அதிகமதிகமாய் வளர்ந்து வரும் நெருக்கடி,எல்லா இடத்திலும் விரிந்து பரவும் தப்பறை,உலகத்தில் பரப்பப்படும் நாஸ்திகம் பெரும் சூறாவளியின் அலைகளாகும்.இப்புயலில் நீங்கள் என்னுடைய சமாதானமாக இருக்க அழைக்கப்படுகிறீர்கள்.ஆகவே நீங்கள் தெளிவுடனும் அமைதியுடனும் நல்ல நம்பிக்கையுடனும் நடக்க வேண்டும். எவ்வளவுக்கு இருள் அதிகமாய் இறங்குகிறதோ அதற்கு அதிகமாய் நீங்கள் என்னுடைய வெளிச்சமாக இருப்பீர்கள்.ஒவ்வொரு நாளும் புயல் அதிகரிக்கும் போது நீங்கள் எப்போதும் என் சமாதானமாக இருப்பீர்கள்.எந்நேரத்திலும் எல்லாருக்கும் உங்கள் நடுவில் அன்னையாகிய என் பிரசன்ன அடையாளத்தை கொடுப்பீர்கள். -தேவமாதா இயேசுவுக்கே புகழ் ! தேவமாதுவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா இருதயத்தின் செய்திகள்

Image
    விசுவாசத்தின் சாட்சிகளாக இருங்கள் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள உண்மையான விசுவாசத்தில் பாதுகாப்பாக இரு.மிக பரந்து கிடக்கும் தவறில் விழ வைக்கும் ஆபத்திலிருந்து உன்னை காத்துக்கொள். எந்த தவற்றையும் ஏற்றுக்கொள்ளாதே உண்மையின் உருவின் கீழ் மறைந்து அவை வெளிப்பட்டால் அதன் முகத்திரையை கிழித்துவிடு.ஏனெனில் பிறகு அது ,அதை விட ஆபத்தாக மாறும்.இதற்க்காக உன்னை பழமையானவன் காலத்திற்கேற்ப வாழாதாவன் என்று தீர்ப்பிட்டால் அதற்காக அஞ்சாதே.ஏனெனில் இயேசுவைப் போன்று அவர் நற்செய்தியும் ஒன்றே நேற்றும் இன்றும் என்றென்றும். -தேவமாதா இயேசுவுக்கே புகழ் ! தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மறுதளிக்கப்படும் கத்தோலிக்க வேத சத்தியங்கள் நரகம் -2

Image
  பசாசு என்ற ஒருவன் இல்லை என்று உலகம் ஒப்புக்கொள்ளச் செய்துள்ளதுதான் பசாசினுடைய மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது.நரக சத்தியத்தையும் பசாசு இருப்பதையும் மறுதளிக்கிறவர்கள் சேசுநாதருடைய மனிதாவதாரத்தையே மறுதலிக்கிறார்கள் என்பதே உண்மை.நரகம் இல்லையெனில் கல்வாரி சிலுவை பலிக்கு அவசியம் இல்லையே !.எத்தனையோ முறை சாத்தானைப் பற்றி பேசுகிற பரிசுத்த வேதாகமத்தையும் அவர்கள் மறுதலிக்கிறார்கள்‌.எல்லாவற்றிற்கும் மேலாக தேவ வார்த்தையானவரின் ஜீவியமளிக்கும் வாரத்தைகளையும் மறுதளிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்த மனிதர்களுடன் சாத்தான் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்டிருக்கிறான் என்பது தான் உண்மை.யூதாஸிடம் நம் திவ்விய இரட்சகர் கூறும் வார்த்தைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன;(கடவுள் மனித காவியம்) "நீ எனக்கு அருவருப்பாக இருக்கிறாய்! சாத்தான் உன்னுடன் முழுவதும் ஒன்றாக இணைந்திருப்பதால்தான் அவனைக் காணவோ,பகுத்தறியவோ உன்னால் முடியவில்லை.அப்பாலே போ பசாசே!. நரகம் இல்லை என்ற தப்பறையை போதிப்பவர்களும் ,நரகத்தின் பயங்கரத்தை குறித்து விசிவாசிகளை எச்சரிக்காதவர்களும் அலகையுடன் தன்னை முழுவதும் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். இ...

மறுதளிக்கப்படும் கத்தோலிக்க வேத சத்தியங்கள் நரகம் -1

Image
 சுபாவத்திற்கு மேலான கத்தோலிக்க அடிப்படை சத்தியங்கள் மறுதலிக்கப்படுகிற ஒரு பயங்கரத்துக்குரிய வேத மறுதலிப்பின் காலத்தில் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம்.முக்கியமாக நரகம் என்னும் மறுக்கமுடியாத வேதசத்தியத்தைப் பற்றிய போதனைகள் ஏறக்குறைய மறைக்கப்பட்டுவிட்டன. ஞான மேயப்பர்களும் கூட நரகத்தைப் பற்றி குற்றமுள்ள முறையில் மௌனம் சாதிக்கிறார்கள்.அல்லது அதைப்பற்றி தங்களிடம் விவாதிப்பவர்களிடம் நரகமென்றும் சாத்தான் என்றும் எதுவும் இல்லை என்றும் ,மோட்சம்,நரகம் இந்த உலகில்தான் இருக்கின்றன என்றும் வாதிடுகிறார்கள்.இதனால் எளிய ஆத்துமங்களின் விசுவாசத்தை காப்பாற்ற வேண்டியவர்களே அதை அழித்து நித்தியத்திற்க்கும் இழக்கப்பட காரணமாயிருக்கிறார்கள்.இது யூதாஸின் மனநிலை அவன் நரகம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாதவனாகவே இருந்தான். நாட்டில் திருடர்களே இல்லை என மூடத்தனமாக நம்பி வீட்டை, பண நகை, அலமாரிகளை பூட்டாமல் விட்டுவிட்டால் திருடர்கள் திருட மிக எளிதாகிவிடும். அதுபோல பசாசும் இல்லை நரகமும் இல்லை என மூடத்தனமாக நம்பி,அடிப்படை கத்தோலிக்த விசுவாசத்தை ஏற்க்காமல் ஆன்மாவை அதன் போக்கில் பாவச்சுதந்திரமாக திரிபவர்களின் ஆன்...

தேவமாதாவின் செய்தி

Image
  பல வருடங்கள் விவாதத்தால் சாதிப்பதைவிட ஒரு நாளின் மிக உருக்கமான செபத்தால் அதிகம் சாதிக்கமுடியும். தேவ மாதா வெளிப்படுத்தியது. மரியாயின் அன்பு பிள்ளைகளாம் குருக்களுக்கு என்ற புத்தகத்திலிருந்து. இயேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய பலிப்பூசையில் ஆண்டவரின் பிறப்பு

Image
திவ்விய பலிப்பூசையில் நமது ஆண்டவரின் ஞான பிறப்பை பற்றி சிந்திப்பவர்கள்,அதிக ஆழ்ந்த தாழ்ச்சியின் பாதாளத்தை கண்டுக்கொள்வார்கள்.ஏனெனில் தமது இவ்வுலக பிறப்பில் ஆண்டவர் தம்மையே மனிதன் போல் ஆக்கிக் கொண்டார்.ஆனால் தமது பரம இரகசிய திவ்விய பலிப்பூசை பிறப்பில் அவர் அப்பத்தின் வடிவத்தை எடுத்துக்கொண்டு ,வெளிப்பார்வைக்கு ஒரு அப்பத்துண்டை போலத்  தோன்றுகிறார். இன்னும் மேலாக நாம் காணக்கூடிய மிகச்சிறிய ஒரு அப்பத்துணுக்கிலும் கூட தம்மை மறைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் தம்மை முழுமையாக தாழ்த்தி,அழித்துக் கொள்கிறார்.இது உண்மையாகவே ஈடு இணையற்ற தாழ்ச்சியாகவும்,நாம் இதற்கு முன் கேள்விப்பட்டிராத சுய மறுதளிப்பாக இருக்கிறது. நமது ஆண்டவர் சர்வ வல்லமைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நமக்காக அனைத்திலும் அதிக தாழ்ச்சியின் ஆடையால்  தம்மை உடுத்திக்கொண்டாரே.பரமண்டலங்களையும் பூமண்டலங்களையும் படைத்த தேவன் தம் கரத்தையோ,காலையோ அசைக்கமுடியாதவராய் இருக்கிறார்.வானாதி வானங்களும் கூட தங்களுள் அடக்கிக் கொள்ள இயலாதவராக இருக்கிறவர்.ஒரு சிறு அப்பத்துண்டில் அடைத்துக்கொள்கிறார். ஆனால் ஒர் திவ்விய நற்கருணைக்கு செவிசாய்ப்பவன் யார்...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
#mothermary   அமலோற்பவ மாதா எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றால், நம்மிடம் ஏராளமான பலவீனங்கள் இருந்தாலும், அவர்கள் அதனால் அதைரியப்படுவதில்லை. அவர்கள் தன்னிலேயே மாசற்றவர்களாக இருந்தாலும், தன் வேலையைச் செய்து முடிக்கக் கறைபட்ட கருவிகளைப் பயன் படுத்துவதை அவர்கள் இழிவான காரியமாக எண்ணுவதில்லை. அவர்களுடைய வேலை என்னவெனில், உலகத்தை மனந்திருப்புவதும், அதை அர்ச்சிப்பதும், ஆத்துமங்களில் சுபாவத்திற்கு மேலான தேவ பக்தியைத் தூண்டி வளர்ப்பதுவுமே.  அர்ச்.மாக்ஸ்மிலியன் கோல்பே  இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தலையான பாவங்கள் போசனப்பிரியம் - குடிவெறி

Image
  உணவுபிரியத்திற்க்குரிய கெட்ட குணங்களில் மிகவும் மோசமானது குடிவெறி. * புத்தி மயங்கும் மட்டும் குடிக்கிறதே குடிவெறி என்றுச்சொல்லப்படும் * * குடிவெறியனால் ஆன்மாவுக்கும் உடலுக்கும் ஏற்படுகிற தீமைகள் அதிகம். * உதாரணமாக. * குடிவெறியன் மானமரியாதை இழந்துப்போகிறான். * * அவனுக்கு பண நஷ்டம் கொஞ்சம்ல்ல. * * அவனுடைய வீட்டில் ஓயாது சண்டை சச்சரவு இருக்குமேயன்றி சமாதானம் அறவே கிடையாது. * * குடிவெறியன் சாதாரணமாய் காமதுரனாயிருப்பான். * * ஆரோக்கியத்தைக் கெடுத்து அகால மரணத்துக்குள்ளாகிறான். * * அவனுடைய ஆன்ம இரட்சணியம் ஆபத்திலிருக்கிறது. * * பிறரை மதிமயங்க குடிக்கச் செய்கிறவர்கள் கனமான பாவத்தைக் கட்டிக்கள்ளுகிறார்கள். * தவிர்க்க வழிமுறைகள். சர்வேசுரனுடைய உதவியை கேட்டு செபித்தல்.சாப்பாட்டுக்கு முன்னும்,பின்னும் செபிப்பது. தினந்தோறும் உண்ணும் வேளையில் ஏதாவது தபசு செய்வது. மதுபானம் விற்கும் இடங்களையும் , குடியர்களுடைய சகவாசத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும். * -சத்தியவேத சித்திர விளக்கம் 1950. * இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தனது நல்ல செயல்களைப் பற்றி பெருமை பேசும் ஒரு மனிதனை விட தனது பாவங்களுக்காக வருந்துகிற பாவி கடவுளுக்கு நெருக்கமானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அர்ச்.பியோ Remember the sinner who is sorry for his sins is closer to god than the just man who boasts of his good works. St.Pio சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய பலிபூசையின் அதிசியங்கள்

Image
  கல்வாரி சிலுவைப்பலி பொதுவில் பாவமன்னிப்பை பெற்றுத்தந்தது .திவ்விய பலி பூசையில் கிறீஸ்துவின் திரு இரத்தப்பலன் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அது வழங்கப்படுகிறது.தமது மரணத்தாலும் பாடுகளாலும் தாம் சம்பாதித்த செல்வ வளங்களை கிறிஸ்து நாதர் திவ்விய பலிபூசையில் நமக்கு பகிர்ந்தளிக்கிறார்.அவரது மரணம் ஒரு கருவூலமாக இருக்கிறது.பூசை அதை திறக்கும் திறவுக்கோலாக இருக்கிறது. சுவாமி செஞ்ஞேரியன். *பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.* பூசை பலிப்போல் பாக்கிய செல்வம் புவியில் இல்லையே புவி நிரம்ப பொன் தந்தாலும் இப்பலிக்கு ஈடில்லையே..! இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். Source Link https://www.catholictamil.com/2020/12/blog-post_3.html?m=1

திவ்விய பலிபூசையின் அதிசியங்கள்

Image
நமது ஆண்டவர் அர்ச்.மெட்டில்டாம்மாளிடம்  வெளிப்படுத்தியது. பூசையில் எப்பேற்பட்ட தாழ்ச்சியுடன் நான் வருகிறேன் என்றால்,நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதப் பாவி என்று யாரும் உலகில் இல்லை.அவன் எவ்வளவு கெட்டுப்போனவனாகவும், கொடியவனாகவும், அசுத்தனாகவும் இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவன் விரும்பினால் போதும்.எப்படிபட்ட இனிமையோடும் ,இரக்கத்தோடும் நான் வருகிறேன் என்றால் ,என் மிகப்பெரும் எதிரிகள் கூட என்னிடம் மன்னிப்பை மன்றாடுவார்கள் என்றால் ,நான் அவர்களை மன்னிப்பேன். எத்தகைய தாராளத்தோடு நான் வருகிறேன் என்றால் ,என் அன்பின் செல்வங்களைக்கொண்டு என்னால் நிரப்பப்பட முடியாத அளவுக்கு மிகவும் ஏழ்மையான மனிதன் எவனுமில்லை.அனைவரிலும் அதிக பலவீனமானவர்களை பலப்படுத்தும் பரலோக உணவோடும்,அனைவரிலும் அதிகக்குருடானவர்களை ஒளிர்விக்ககூடிய ஒளியோடும்,சகல நிரபாக்கியங்களையும் அகற்றுபவையையும், சகலப்பிடிவாதங்களின் மீதும் வெற்றிக்கொள்பவையும், சகல பயங்களையும் அகற்றுபவையுமான வரப்பிரசாதங்களின் முழுமையோடு நான் வருகிறேன். *பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உண்மைக்கு எதிரானது நியாயமாக இருக்க முடியாது. அர்ச்.அகஸ்டின் What is against truth cannot be just. St.Augestin. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும் - 5.

Image
  61.திவ்வியபலிப்பூசை பரிசுத்த மரணத்திற்க்கான வரப்பிரசாதத்தை பெற்றுக்கொள்வதற்கான வழியாக இருக்கிறது. 62.திவ்விய பலிபூசைக்கு நாம் காட்டும் நேசம் நமது இறுதி நேரங்களில் தேவத்தூதர்கள் மற்றும் அரச்சிஷ்டவர்களின் விஷேஷ உதவியை பெற்றுத்தருகிறது. 63.நமது வாழ்நாளில் நாம் கண்ட பூசைகளின் ஞாபகம் நமது மரணவேளையில இனிய ஆறுதலாக இருந்து தேவ இரத்தத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளச் செய்யும். 64.மரித்தப்பின் கண்டிப்பான நீதியரசருக்கு முனபாக நாம் நிற்கும் போது அவை மறக்கப்படாது.நமக்கு தயவுக்காட்டும்படி அவை அவரைத் தூண்டும். 65.அடிக்கடிப்பூசை காண்பதன் மூலம் நாம் ஏற்கெனவே நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்திருந்தால் ,நீண்ட பயங்கரமான உத்தரிக்கும் ஸ்தலத்தை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. 66.மிகமிகக் கடுமையான எந்த ஒரு தவ முயற்சியையும் விட அதிகமான பக்தியோடு பங்குப் பெறும் ஒரே ஒரு பூசை உத்தரிக்கும் ஸ்தலத்தின் வேதனையைத் குறைக்கும். 67.நமது வாழ்நாளில் பக்தியோடு நாம் காணும் ஒரே ஒரு பூசை,நமது மரணத்திற்குப்பிறகு நமக்காக ஒப்புக்கொடுக்கப்படும் பலப்பூசைகளைவிட அதிகமான நன்மைகளைப்பெற்று தருகிறது. 68.மோட்சத்தில் ஒர் உயர்ந்த இ...