இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள்-4
இன்று பெரும் நன்றிக்கெட்டத்தன்மையும்,கைவிடப்பட்ட நிலையும், வெற்றிடமே நற்கருணை நாதர் இயேசுவின் திருப்பீடத்தைச் சூழ்ந்திருக்கிறது.இவ்வித சூழ்நிலைக்காகவே நான் அன்று பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்கு வானத்தூதர் வாயிலாக இச்சிறு செபத்தினைக் கற்பித்தேன்."மகா பரிசுத்த தமத்திரித்துவமே பிதாவே சுதனே பரிசுத்த ஆவியே உம்மை மிகவும் ஆராதிக்கிறேன்.உலகெங்கும் உள்ள திவ்விய நற்கருணை பேழையில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்க முடியாத திருச்சரீரத்தையும் இரத்தத்தையும் ஆத்துமத்தையும் தெய்வீகத்தையும் அவருக்கு எதிராகச் செய்யப்படும் சகல நிந்தை,துரோகம், அலட்சியங்களுக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.சேசுவின் திரு இருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற திருஇருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களை பார்த்து நிர்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன் "
இச்செபம் இக்காலத்திற்க்காக அன்று கறப்பிக்கப்பட்டது.
-தேவமாதா
இயேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment