மறுதலிக்கப்படும் கத்தோலிக்க வேத சத்தியங்கள் நரகம் -3


 

கத்தோலிக்கத் திருச்சபை தவறாவரத்தோடு போதித்ததும்,அர்ச்சிஷ்டவர்களும் திருச்சபை தந்தையரும்,வேதபாரகர்களும் பலவிதமாக கூறியுள்ளதுமாகிய இந்த நரக சத்தியத்தை பற்றி மரியா வால்டோர்ட்டாவுக்கு நம் ஆண்டவரே நேரடியாக தந்தருளின விளக்கத்தைப் பார்ப்போம்.

மனிதர்கள் நரகம் இருப்பதை இப்போதெல்லாம் விசுவசிப்பதேயில்லை.தங்கள் விருப்பத்திற்க்கேற்ற ஒரு மறுவுலக வாழ்வைக் கண்டுப்பிடிக்கிறார்கள்.அந்த வாழ்வு பெரும் தண்டனைக்கு தகுதியுள்ளதாயிருக்கிற, மனச்சான்றுக்கு பயங்கரமுள்ளதாக இருக்கிறது.

தீயவனுடைய ஆசைகளோடு எந்த அளவுக்கு தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் தாங்கள் யாருடைய ஊழியர்களாக அல்லது அடிமைகளாக இருக்கிறார்களோ,அந்த சாத்தானால் கற்ப்பிக்கப்படுகிற துர்புத்தி,தங்கள் துர்ச்செயல்களிலிருந்து விலகுவதையும் ,தங்கள் பரிசோதித்து அறிவதையும் விரும்புவதில்லை.இதனால் நரகம் நிஜமாகவே இருப்பதை விசுவசிக்க மறுத்து வேறொன்றை உருவாக்குகிறார்கள்.

நரகம் என்பது தீயவர்கள் தண்டிக்கப்படும் ஓர் இடமாகும் .அங்கு அவர்களுக்கு நித்தியத்திற்கும் கடவுளின் காட்சி மறுக்கப்படுகிறது.அங்கு அவர்கள் பயங்கரமான வாதைகளுக்கு உள்ளாகிறார்கள்.1908ல் திருதந்தை அர்ச்.10ஆம் பத்திநாதரால் வெளியிடப்பட்ட ஞான உபதேசம்.

நரகத்தைப்பற்றிப்பேசி மக்களை அச்சுறுத்தி வேண்டிய அவசியமில்லை என்ற தப்பறைகள் பரவுகிறது.இது உண்மை நிலைக்கு நேர் எதிரானதாக இருக்கிறது.மனிதனை பாவத்தின் அடிமைத்தனத்தினின்றும் அதன் பயங்கர விளைவாகிய நரகத்திலிருந்தும் இரட்சிப்பதற்காக மட்டுமே கிறிஸ்து மனிதரானார்.


இயேசுவுக்கே புகழ் !

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!