திவ்விய பலிபூசையின் அதிசியங்கள்
நமது ஆண்டவர் அர்ச்.மெட்டில்டாம்மாளிடம் வெளிப்படுத்தியது.
பூசையில் எப்பேற்பட்ட தாழ்ச்சியுடன் நான் வருகிறேன் என்றால்,நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதப் பாவி என்று யாரும் உலகில் இல்லை.அவன் எவ்வளவு கெட்டுப்போனவனாகவும், கொடியவனாகவும், அசுத்தனாகவும் இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவன் விரும்பினால் போதும்.எப்படிபட்ட இனிமையோடும் ,இரக்கத்தோடும் நான் வருகிறேன் என்றால் ,என் மிகப்பெரும் எதிரிகள் கூட என்னிடம் மன்னிப்பை மன்றாடுவார்கள் என்றால் ,நான் அவர்களை மன்னிப்பேன்.
எத்தகைய தாராளத்தோடு நான் வருகிறேன் என்றால் ,என் அன்பின் செல்வங்களைக்கொண்டு என்னால் நிரப்பப்பட முடியாத அளவுக்கு மிகவும் ஏழ்மையான மனிதன் எவனுமில்லை.அனைவரிலும் அதிக பலவீனமானவர்களை பலப்படுத்தும் பரலோக உணவோடும்,அனைவரிலும் அதிகக்குருடானவர்களை ஒளிர்விக்ககூடிய ஒளியோடும்,சகல நிரபாக்கியங்களையும் அகற்றுபவையையும், சகலப்பிடிவாதங்களின் மீதும் வெற்றிக்கொள்பவையும், சகல பயங்களையும் அகற்றுபவையுமான வரப்பிரசாதங்களின் முழுமையோடு நான் வருகிறேன்.
*பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.*
பூசை பலிப்போல் பாக்கிய செல்வம்
புவியில் இல்லையே
புவி நிரம்ப பொன் தந்தாலும்
இப்பலிக்கு ஈடில்லையே..!
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Source Link
https://www.catholictamil.com/2020/12/blog-post_3.html?m=1

Comments
Post a Comment