இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா இருதயத்தின் செய்திகள்-3
என் அருமை மகன்களே இந்நாட்களில் திவ்விய நற்கருணை பேழையைக்கூட இருள் மறைத்துவிட்டதே,அதைச் சுற்றிலும் எத்தகைய வெறுமை,எவ்வளவு அலட்சியம்,எப்படிப்பட்ட கவலையீனம்!!சந்தேகங்களும் மறுதலிப்புகளும் தேவதுரோகங்களும் அன்றாடம் அதிகரிக்கின்றனவே.இயேசுவின் சற்பிராசத திருஇருதயம் அவருடையவர்களால் அவருடைய சொந்த வீட்டில்,உங்கள் நடுவில் அவர் கொண்டுள்ள தெய்வீக வாசஸ்தலத்தில் காயப்படுத்தப்படுகிறதே.
வெள்ளமாய் வரும் தேவ துரோகங்களுக்கு அணையிடுங்கள்.இவ்வளவு காலத்திலும் இதுபோல் இத்தனை திவ்விய நற்கருணைகள் வாங்கப்பட்டதுமில்லை இவ்வளவு தகுதியற்ற தனமாய் அவரை உட்கொள்ளப்பட்டதுமில்லை.தேவதுரோகமாய் உட்க்கொள்ளப்படும் திவ்விய நற்கருணைகள் அதிகரிப்பதால் திருச்சபையானது ஆழமாய் காயப்பட்டுள்ளது.இதை நிறுத்துங்கள்.
விசுவாசிகளிடத்தில் பாவத்தைச் பற்றிய உணர்வை வளர்ப்பதாலும் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் திவ்விய நற்கருணை உடகொள்ள வரவேண்டும் என்று அவர்களை அழைப்பதாலும்,சாவான பாவத்திலிருப்பவர்களுக்கு திவ்விய நற்கருணை உட்கொள்ளுமுன் அவசியமாயிருக்கிற பாவசங்கீர்தனத்தை அடிக்கடி பெற்றுக்கொள்ளும்படி படிப்பபிப்பதாலும் இவ்விசுவாசிகள் அனைவரும் தகுந்த ஆயத்தத்தோடு திவ்விய நற்கருணையில் இயேசுவை அணுகுவதற்கு உதவிச் செய்யுங்கள்.
-தேவமாதா
இயேசுவுக்கே புகழ் !
தேவமாதவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments
Post a Comment