மறுதளிக்கப்படும் கத்தோலிக்க வேத சத்தியங்கள் நரகம் -1
சுபாவத்திற்கு மேலான கத்தோலிக்க அடிப்படை சத்தியங்கள் மறுதலிக்கப்படுகிற ஒரு பயங்கரத்துக்குரிய வேத மறுதலிப்பின் காலத்தில் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம்.முக்கியமாக நரகம் என்னும் மறுக்கமுடியாத வேதசத்தியத்தைப் பற்றிய போதனைகள் ஏறக்குறைய மறைக்கப்பட்டுவிட்டன.
ஞான மேயப்பர்களும் கூட நரகத்தைப் பற்றி குற்றமுள்ள முறையில் மௌனம் சாதிக்கிறார்கள்.அல்லது அதைப்பற்றி தங்களிடம் விவாதிப்பவர்களிடம் நரகமென்றும் சாத்தான் என்றும் எதுவும் இல்லை என்றும் ,மோட்சம்,நரகம் இந்த உலகில்தான் இருக்கின்றன என்றும் வாதிடுகிறார்கள்.இதனால் எளிய ஆத்துமங்களின் விசுவாசத்தை காப்பாற்ற வேண்டியவர்களே அதை அழித்து நித்தியத்திற்க்கும் இழக்கப்பட காரணமாயிருக்கிறார்கள்.இது யூதாஸின் மனநிலை அவன் நரகம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாதவனாகவே இருந்தான்.
நாட்டில் திருடர்களே இல்லை என மூடத்தனமாக நம்பி வீட்டை, பண நகை, அலமாரிகளை பூட்டாமல் விட்டுவிட்டால் திருடர்கள் திருட மிக எளிதாகிவிடும்.
அதுபோல பசாசும் இல்லை நரகமும் இல்லை என மூடத்தனமாக நம்பி,அடிப்படை கத்தோலிக்த விசுவாசத்தை ஏற்க்காமல் ஆன்மாவை அதன் போக்கில் பாவச்சுதந்திரமாக திரிபவர்களின் ஆன்மாக்களை திருடுவதும்/கவர்வதும் பசாசுக்கு மிக சுலபமாகிவிடும்.
இயேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment