இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா இருதயத்தின் செய்திகள் -2
திட்டமிட்டு உங்களுக்குத் தீங்கிழைக்க விரும்பும் எவனும் உங்களைத் தாக்க இயலாது.நல்லெண்ணத்துடன் அப்படி எவனும் செய்தால்,அத்தீங்கு உங்களைத்தாக்கும் முன் அவன் ஒளி பெறுவான்.
திருச்சபையில் அதிகமதிகமாய் வளர்ந்து வரும் நெருக்கடி,எல்லா இடத்திலும் விரிந்து பரவும் தப்பறை,உலகத்தில் பரப்பப்படும் நாஸ்திகம் பெரும் சூறாவளியின் அலைகளாகும்.இப்புயலில் நீங்கள் என்னுடைய சமாதானமாக இருக்க அழைக்கப்படுகிறீர்கள்.ஆகவே நீங்கள் தெளிவுடனும் அமைதியுடனும் நல்ல நம்பிக்கையுடனும் நடக்க வேண்டும்.
எவ்வளவுக்கு இருள் அதிகமாய் இறங்குகிறதோ அதற்கு அதிகமாய் நீங்கள் என்னுடைய வெளிச்சமாக இருப்பீர்கள்.ஒவ்வொரு நாளும் புயல் அதிகரிக்கும் போது நீங்கள் எப்போதும் என் சமாதானமாக இருப்பீர்கள்.எந்நேரத்திலும் எல்லாருக்கும் உங்கள் நடுவில் அன்னையாகிய என் பிரசன்ன அடையாளத்தை கொடுப்பீர்கள்.
-தேவமாதா
இயேசுவுக்கே புகழ் !
தேவமாதுவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment