திவ்விய பலிப்பூசையில் ஆண்டவரின் பிறப்பு
திவ்விய பலிப்பூசையில் நமது ஆண்டவரின் ஞான பிறப்பை பற்றி சிந்திப்பவர்கள்,அதிக ஆழ்ந்த தாழ்ச்சியின் பாதாளத்தை கண்டுக்கொள்வார்கள்.ஏனெனில் தமது இவ்வுலக பிறப்பில் ஆண்டவர் தம்மையே மனிதன் போல் ஆக்கிக் கொண்டார்.ஆனால் தமது பரம இரகசிய திவ்விய பலிப்பூசை பிறப்பில் அவர் அப்பத்தின் வடிவத்தை எடுத்துக்கொண்டு ,வெளிப்பார்வைக்கு ஒரு அப்பத்துண்டை போலத் தோன்றுகிறார். இன்னும் மேலாக நாம் காணக்கூடிய மிகச்சிறிய ஒரு அப்பத்துணுக்கிலும் கூட தம்மை மறைத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் தம்மை முழுமையாக தாழ்த்தி,அழித்துக் கொள்கிறார்.இது உண்மையாகவே ஈடு இணையற்ற தாழ்ச்சியாகவும்,நாம் இதற்கு முன் கேள்விப்பட்டிராத சுய மறுதளிப்பாக இருக்கிறது.
நமது ஆண்டவர் சர்வ வல்லமைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நமக்காக அனைத்திலும் அதிக தாழ்ச்சியின் ஆடையால் தம்மை உடுத்திக்கொண்டாரே.பரமண்டலங்களையும் பூமண்டலங்களையும் படைத்த தேவன் தம் கரத்தையோ,காலையோ அசைக்கமுடியாதவராய் இருக்கிறார்.வானாதி வானங்களும் கூட தங்களுள் அடக்கிக் கொள்ள இயலாதவராக இருக்கிறவர்.ஒரு சிறு அப்பத்துண்டில் அடைத்துக்கொள்கிறார்.
ஆனால் ஒர் திவ்விய நற்கருணைக்கு செவிசாய்ப்பவன் யார்? தன் கடவுளாக திவ்விய நற்கருணையை அங்கீகரிப்பவன் எவன்? சங்கை மரியாதையும் ,மகிமையும் செலுத்துபவர் யார்?
*பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.*
பூசை பலிப்போல் பாக்கிய செல்வம்
புவியில் இல்லையே
புவி நிரம்ப பொன் தந்தாலும்
இப்பலிக்கு ஈடில்லையே..!
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !
அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Source Link
https://www.catholictamil.com/2020/12/blog-post_16.html?m=1

Comments
Post a Comment