இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள் -5
இயேசு மோட்சத்தில் எவ்வளவு உண்மையாக இருக்கிறாரோ அதே போல் உண்மையாக உலகத்தில் திவ்விய நற்கருணையில் தம் ஆத்துமத்தோடும்,சரீரத்தோடும்,இரத்தத்தோடும்,தேவ சுபாவத்தோடும் இருக்கிறார்.
அவருடைய மகிமையுள்ள வெற்றியானது,யாவற்றுக்கும் மேலாக அவர் திவ்விய நற்கருணை இயேசுவாக இருக்கிறதிலேயே விளங்கித் துலங்கும்.திருச்சபையின் முழு வாழ்க்கையின் இருதயமாகவும் நடுநாயகமாகவும் திவ்விய நற்கருணை மீண்டும் வரும்.
நற்கருணையில் என் குமாரன் இயேசுவைப் சுற்றிலும் ஏறப்பட்டுள்ள பெரிய வெறுமையை நானே நிரப்புவேன்.அவருடைய தெய்வீக பிரசன்னத்தைச் சுற்றிலும் நான் ஒரு அன்பினாலான அரண் அமைப்பேன்.என் அரும் மகன்களே,இது உங்கள் வழியாக நான் செய்வேன் உலகத்தில் சகல நற்கருணைப் பேழைகளை சுற்றிலும் ஒரு அன்புக்காப்பாக உங்களை ஏற்ப்படுத்த நான் விரும்புகிறேன்.
-தேவமாதா
இயேசுவுக்கே புகழ் !
தேவமாதவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment