இக்காலத் திருச்சபைக்கு அன்னை மரியாயின் மாசில்லா திருஇருதயத்தின் செய்திகள் -6
*அதிதூதர்களான அர்ச்.மிக்கேல்,கபரியேல்,ரஃபேல் விழா.*
இறுதி காலத்தில் இருக்கும் என் அன்பார்ந்த அப்போஸ்தல பிள்ளைகளே போராடுங்கள்.இக்காலகட்டமே எனது போரின் காலமாகவும் எனது மகிப்பெரிய வெற்றியுமாயிருக்கிறது.இப்போரில் உங்களோடு தேவனின் வானத்தூதர்களும் நான் அவர்களுக்கு அளித்த கட்டளையின் படி போரிடத் தயாராயிருக்கிறார்கள்.என்றுமே இறைவனுக்கு எதிராகவும் இறை இராஜ்யத்திற்கு எதிராகவும் போரிட்டு வரும் தீயவனான அலகை வீசியுள்ள பயங்கரத்திற்குரிய வலையை மேன்மை தங்கியத் தமத்திரித்துவத்தின் ஒளியில் அவர்கள் துல்லியமாக காண்கிறார்கள்.நீதிக்கும்,அநீதிக்கும்,வானவர்களுக்கும் அலகைகளுக்கும் நடக்கும் போர்.நீங்கள் இந்த போரிலே உள்ளிடப்பட்டிருக்கிறீர்கள்.அதன் பொருட்டு வானவர்களின் பாதுகாப்பில் உங்களை கையளித்து உங்களின் செபத்தினால் அவர்களின் சக்தி வாய்ந்த உதவியை பெறுவதற்கு அடிக்கடி செபியுங்கள்.
விண்ணுலகில் இருக்கும் யாவரும் என் திட்டத்தை அறிவார்கள்.என் வெற்றியின் காலத்தையும் அறிவர்.நீங்கள் வாழும் இக்காலத்தில் அலகையின் எதிர்ப்பு பலம் வாயந்ததாகவும் தொடர்ச்சியாய் உலகம் முழுவதும் இருப்பதையும் அவர்கள் காண்கிறார்கள்.
உங்களை என் பகைவன் வலையிலிருந்து தப்புவித்தும்,உங்களின் காயங்களை குணப்படுத்தியும்,உங்களை பலப்படுத்தியும் தீய வழிகளிலிருந்து உங்களைக் காப்பாற்றி ஒளிமயமான எனது திட்டத்தில் உங்களை வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பையும் அவர்கள் பெற்றுள்ளனர்.
*அர்ச்.கபரியேல் அதிதூதர்*
உங்கள் விண்ணுலக தாயின் ஒப்புதலைப் பெற்று வர அன்று நித்திய பிதா கபரியேல் வானத்தூதரை அனுப்பிவைத்தார்.இன்று அதே வானத்தூதர் தந்தை சித்தத்திற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒப்புதலை பெற வேண்டிய பணியை கொண்டுள்ளார்.உங்கள் அனைவரையும் பலப்படுத்தி நிலைநிறுத்தி இயேசுவுக்கும் அவரது நற்செய்திக்கும் வீரச்சாட்சிகளாக உங்களை வலிமைமிக்கப்பாதையில் வழிநடத்திச் செல்கிறார்.
*அர்ச்.ரஃபேல் அதிதூதர்*
உங்களின் திடமற்ற மனதை புதுப்பித்து உங்களின் ஒவ்வொரு காயத்திற்கும் சுகமளித்து,மிகப்பாரமாக இருக்கும் திடமற்ற உள்ளம்,ஊக்கமற்ற தளர்ச்சி இந்நிலையிலிருந்து உங்களை கைதூக்கி வழிநடத்தி செல்கிறார்.
*அர்ச்.மிக்கேல் அதிதூதர்*
உங்கள் எல்லோரையும் அலகையின் பயங்கரத்திற்குரிய எல்லா தாக்குதல்களிலிருந்தும் காப்பாற்றி விண்ணுலகத் தலைவரின் வழியில் நடந்து செல்ல வழி வகுக்கிறார்.அலகைக்கு எதிரான சக்திமிக்க உங்கள் செபத்தின் வழியே வானத்தூதர் மிக்கேலை கூப்பிடுங்கள்.அவரே இவ்வித போராட்டங்களில் உங்களை வழிநடத்திச்செல்கிறார்.
எனவே *நீங்கள் யாவரும் பாசத்துடனும் சகோதரவாஞ்சையுடனும் செபத்துடனும் விண்ணுலகச் செயல்பாட்டில் ஒருமித்து இருக்கும் வானத்தூதர்களுடன் உங்களை உட்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடன் இணைந்துப்போராட அவர்கள் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதனால் இறைவனின் பெரும் வெற்றிக்கு வழிச்செய்யவும்,இயேசுவின் மகிமைப் பொருந்திய ஆட்சி மலர்ந்து என் மாசற்ற இதயத்தின் வெற்றி இவ்வுலகில் உங்களுக்கு வந்தடையும்.*
-தேவமாதா
இயேசுவுக்கே புகழ் !
தேவமாதவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment