பக்தியோடு பூசைக்காண்பதால் பெற்றுக் கொள்ளப்படும் வரப்பிரசாதங்களும் பலன்களும் - 5.


 


61.திவ்வியபலிப்பூசை பரிசுத்த மரணத்திற்க்கான வரப்பிரசாதத்தை பெற்றுக்கொள்வதற்கான வழியாக இருக்கிறது.


62.திவ்விய பலிபூசைக்கு நாம் காட்டும் நேசம் நமது இறுதி நேரங்களில் தேவத்தூதர்கள் மற்றும் அரச்சிஷ்டவர்களின் விஷேஷ உதவியை பெற்றுத்தருகிறது.


63.நமது வாழ்நாளில் நாம் கண்ட பூசைகளின் ஞாபகம் நமது மரணவேளையில இனிய ஆறுதலாக இருந்து தேவ இரத்தத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளச் செய்யும்.


64.மரித்தப்பின் கண்டிப்பான நீதியரசருக்கு முனபாக நாம் நிற்கும் போது அவை மறக்கப்படாது.நமக்கு தயவுக்காட்டும்படி அவை அவரைத் தூண்டும்.


65.அடிக்கடிப்பூசை காண்பதன் மூலம் நாம் ஏற்கெனவே நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்திருந்தால் ,நீண்ட பயங்கரமான உத்தரிக்கும் ஸ்தலத்தை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.


66.மிகமிகக் கடுமையான எந்த ஒரு தவ முயற்சியையும் விட அதிகமான பக்தியோடு பங்குப் பெறும் ஒரே ஒரு பூசை உத்தரிக்கும் ஸ்தலத்தின் வேதனையைத் குறைக்கும்.


67.நமது வாழ்நாளில் பக்தியோடு நாம் காணும் ஒரே ஒரு பூசை,நமது மரணத்திற்குப்பிறகு நமக்காக ஒப்புக்கொடுக்கப்படும் பலப்பூசைகளைவிட அதிகமான நன்மைகளைப்பெற்று தருகிறது.


68.மோட்சத்தில் ஒர் உயர்ந்த இடத்தை பெற்றுக்கொள்ள உதவுகிறது.அது நித்தியம் முழுவதும் நம்முடையதாக இருக்கிறது.


69.பரலோகத்தில் நமது மகிழ்ச்சி, பூமியில் நாம் கண்ட ஒவ்வொரு பூசையாலும் அதிகரிக்கப்படும்.


70.நமது நண்பர்கள்/உறவினர்களுக்காக நாம் ஒப்புக்கொடுக்கும் எந்த செபங்களும் அவர்கள் நிமித்தமாக நாம் கண்டு ஒப்புக்கொடுத்த ஒரே ஒரு பூசையின் அளவுக்கு அவர்களுக்கு நன்மை பயக்காது.



71.உபகாரிகளின் கருத்துக்காக பூசைக்காணும்போது அவர்கள் அனைவருக்கும் தாராளமாக நமது கடனை திருப்பிச் செலுத்துகிறோம்.


72.கஸ்திப்படுவர்களுக்கும்,வியாதியஸ்தர்களுக்கும்,மரிக்கிறவர்களுக்கும் நாம் தரக்கூடிய அனைத்திலும் சிறந்த உதவி,அனைத்திலும் மேலான ஆறுதல் அவர்களுக்காக பூசைக்கண்டு ஒப்புக்கொடுப்பதே.


73.இதே வழியைக் கொண்டு பாவிகள் மனந்திரும்பும் வரத்தைக்கூட பெற்றுக்கொள்ளலாம்.


74.பிரம்மாணிக்கமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் இரட்சணிய வரப்பிரசாதங்களையும் நன்மை பயக்கும் வரப்பிரசாதங்களையும் நாம் சம்பாதிக்கலாம்.


75.உத்தரிக்கும் ஸ்தலத்தில் துன்புறும் ஆத்துமங்களுக்கு அபரிமிதமான இளைபாற்றியைப்பெற்றுத் தரலாம்.


76.உலகைவிட்டுப் பிறிந்த நமது நண்பர்கள்,உறவினர்களுக்காக பூசை செய்விப்பது நமது சக்திக்குட்பட்டதாக இல்லையென்றால்,பக்தியோடு பூசை காண்பதன் மூலம் உத்தரிக்கும் தீசுவாலையில்ருந்து அவர்களை நாம் விடுவிக்கலாம்.


77.பக்தியோடு பூசை பங்கெடுப்பதன் மூலம் உத்தரிக்கும் ஆன்மாக்களின் தண்டனை காலங்களை குறைக்கலாம், விடுவிக்கலாம்.நமது பூசை பலனால் விடுவிக்கப்பட்டு மோட்சம் சென்ற ஆன்மாக்கள் நமது விண்ணக நண்பர்களாக, நமக்காக ஆண்டவரிடம் பரிந்துபேசுகிறார்கள்.



*இவ்வளவு அதிகமான வரப்பிரசாதங்களும், பலன்களும் நம் கைகெட்டும் தூரத்தில் வைக்கப்படும் படி செய்யக்கூடிய வேறு ஏதாவது ஒரு நற்செயல் உலகம் முழுவதிலும் இருக்க முடியுமா ?*


*கிறிஸ்தவர்கள் மட்டும் திவ்விய பலிபூசையால் ஆதாயம் பெறுவது எப்படி என்று அறிந்திருந்தார்கள் என்றால் கடவுள் படைத்துள்ள சகல காரியங்களிலும் காணப்படுவதை விட அதிகமான செல்வ வளங்களை அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்.என்ற சுவாமி. சாஞ்ஜெஸின் வார்த்தைகளிலுள்ள உண்மையை சந்தேகிப்பது இனியும் சாத்தியமில்லை.*


பூசையில் நாம் உண்மையாகவே விலையேற்றம் பெற்ற ஒரு சேமிப்பு அறையை கொண்டிருக்கிறோம்.மிகக் கொஞ்சமான முயற்சியைக்கொண்டு இவ்வளவு பெரிதான செல்வ வளங்களை சம்பாதித்து கொள்ளக்கூடியவன் பாக்கியவான்.


*இவற்றை அறிந்த எவன்தான் மனமுவந்து பூசைக்காணத் தவறுவான்*.பூசைக் காணபதில் யார் தான் இன்பம் காணாதிருப்பார்கள்.நமது ஜீவிய அந்தஸ்தின் கடமைகளுக்கு இடையூறின்றி திவ்விய பலிபூசையில் பங்கெடுக்கும் ஒரு வாய்ப்பை கூட ஒரு போதும் இழந்துவிடமாட்டோம் என்ற உறுதியான பிரதிக்கினைச் செய்வோம்.


வெறும் அலட்சியம், சோம்பல், கொரோனா பயம், முன்னெச்சரிக்கை... காரணமாக அனுதினமும் வாய்ப்புகள் இருந்தும் பூசைக்காணும் வாய்ப்பை தவறவிடுவது அதில் அடங்கியுள்ள தெய்வீகப் பொக்கிஷங்களை அறியாதிருக்கிறோம் அல்லது அவற்றைப் பற்றி நாம் அலட்சியமாய் இருக்கிறோம் என்பது நிரூபணமாகிறது.


*பரிசுத்த குருத்துவத்தின் மகத்துவத்தை தெரிந்துக்கொள்வோம்.பூசையின் அளவற்ற மேன்மையை முழுமையாய் புரிந்துக் கொள்வோம்.

பூசை பலிப்போல் பாக்கிய செல்வம்

புவியில் இல்லையே

புவி நிரம்ப பொன் தந்தாலும் 

இப்பலிக்கு ஈடில்லையே..!


இயேசுவுக்கே புகழ் !

அன்னை மரியாயே வாழ்க !

அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Source Link


https://www.catholictamil.com/2020/12/77-21-40.html?m=1



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!