மறுதளிக்கப்படும் கத்தோலிக்க வேத சத்தியங்கள் நரகம் -2
பசாசு என்ற ஒருவன் இல்லை என்று உலகம் ஒப்புக்கொள்ளச் செய்துள்ளதுதான் பசாசினுடைய மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது.நரக சத்தியத்தையும் பசாசு இருப்பதையும் மறுதளிக்கிறவர்கள் சேசுநாதருடைய மனிதாவதாரத்தையே மறுதலிக்கிறார்கள் என்பதே உண்மை.நரகம் இல்லையெனில் கல்வாரி சிலுவை பலிக்கு அவசியம் இல்லையே !.எத்தனையோ முறை சாத்தானைப் பற்றி பேசுகிற பரிசுத்த வேதாகமத்தையும் அவர்கள் மறுதலிக்கிறார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக தேவ வார்த்தையானவரின் ஜீவியமளிக்கும் வாரத்தைகளையும் மறுதளிக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் இந்த மனிதர்களுடன் சாத்தான் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்டிருக்கிறான் என்பது தான் உண்மை.யூதாஸிடம் நம் திவ்விய இரட்சகர் கூறும் வார்த்தைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன;(கடவுள் மனித காவியம்)
"நீ எனக்கு அருவருப்பாக இருக்கிறாய்! சாத்தான் உன்னுடன் முழுவதும் ஒன்றாக இணைந்திருப்பதால்தான் அவனைக் காணவோ,பகுத்தறியவோ உன்னால் முடியவில்லை.அப்பாலே போ பசாசே!.
நரகம் இல்லை என்ற தப்பறையை போதிப்பவர்களும் ,நரகத்தின் பயங்கரத்தை குறித்து விசிவாசிகளை எச்சரிக்காதவர்களும் அலகையுடன் தன்னை முழுவதும் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இயேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment