Posts

Showing posts from January, 2021

மரண ஆயத்தம்

Image
  * சம்மனசுகளையே(Angels) அழவைக்கும் மனிதர்கள் * ஒர் ஆன்மா சாவான பாவத்தைக் கட்டிக்கொண்டு தேவ இஷ்டப்பிரசாதத்தை இழக்கும் அவல நிலையைக் கண்டு துக்கம் தாளாமல் சம்மனசுகள்(Angels) அழுவார்கள்.ஆனால் பாவியானவனோ அழுவதில்லை. வருந்துவதுமில்லை -புனித பிரான்ஸிஸ் சலேசியார். ஒருவன் தன்னுடையை (தொலைபேசி),ஆடு,மாடு காணாமல் போனாலுமே உண்ணவும் மாட்டான்,உறங்கவும் மாட்டான் ஆனால் தேவ இஷ்டப்பிரசாதத்தை அவன் இழந்து போனால் கவலையின்றி நன்றாய் உண்டு குடித்து உறங்குகிறான்.அவன் அழுவதேயில்லை மனம் வருந்துவதும் இல்லை. -புனித அகுஸ்தினார். மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம் தனித்தீர்வை-7

Image
    தனித்தீர்வை -7 விசாரணை முடிந்ததும் ஆண்டவரின் தீர்ப்புக்காக நடுங்கி நிற்கும் ஆத்துமம். புனித பாசில் கூறியுள்ளபடி நரகத்தின் கொடுமையைக் காட்டிலும்,பாவங்களின் நாணமும் வெட்கமும் அவனை அப்போது அதிகம் தொல்லைப்படுத்தும்.கடைசியாய் இதோ நேரம் நெருங்கி விட்டது.நீதிபதி சொல்லும் தீர்ப்பை கேள் ."சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு நீங்கி நித்திய நரக நெருப்புக்குள் போ".ஓ அந்த தீர்ப்பு எப்படிப்பட்ட கொடிய இடி விழுந்தாற் போலிருக்கும் அந்த இடியின் பெரும் கொடுமை எவ்வளவோ பயங்கரத்தை ஏற்படுத்தும் என்று கர்த்தூசியஸ் கூறுகிறார்.புனித ஆன்ஸ்லெம் என்பார் கூறுவது போல இந்த இடிக்கு நடுங்காகதவன் தூங்குவதில்லை,இறந்தே போவான்.இந்த தீரப்பைக் கேட்டவுடனே பாவிக்கு உண்டாகும் நடுக்கம் எப்படிப்பட்டதென்றால் கூடுமானால் அப்போதே இரண்டாம் முறையும் அவன் இறந்து விடுவான் என்கிறார் புனித எவுசேபியுஸ்.நீதிபதி தங்கள் மேல் தீர்ப்புச் சொல்லும் போது பாவிக்கு உண்டாகும் பயம் எத்தகையது என்றால் அவர்களுக்கு சாகா வரமில்லாமலிருந்தால் அப்போதே இன்னொரு முறையும் செத்துப்போவார்கள்.அப்போது செபத்திற்க்கும் நேரமில்லை‌.சிபாரிசு செய்யும் நபர்களையும் ...

மரண ஆயத்தம் தனித்தீர்வை -6

Image
  தனித்தீர்வை -6 ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா. ஆத்துமம் பிரிந்து  ஆண்டவருடைய முன்னிலையில் குற்றம் சாட்டப்படுவதும் அதன் விசாரணையும்...! நேர்மையாளரே மீட்கபடுவது அரிதென்றால் இறைபற்றில்லாதோரும்,பாவியும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ"(1பேதுரு 4-18) ஒவ்வொரு வீண் வார்த்தைக்குமே நாம் கணக்கு சொல்லித் தீரவேண்டுமானால் ,நாம் சம்மதித்த எத்தனையோ கெட்ட நினைவுகள் ,எத்தனையோ கெட்ட வார்த்தைகளுக்கெல்லாம் எப்படி கணக்கு சொல்ல முடியும் ?புனித கிரகோரி "வீண் வார்த்தைக்கே கணக்கு கேட்கப்படுமானால்,அசுத்த வார்த்தைகள் என்னவாகும்? ஆன்மாக்களை தம்மிடமிருந்து திருடியவர்களைப் பார்த்து ஆண்டவர் குறிப்பாய் பேசி திருவாய் மலர்ந்தருளியிருப்பதாவது :தன் குட்டிகளை திருடிச் சென்றவருக்கு ஒரு கரடி என்ன செய்யுமோ,அப்படியே நானும் செய்வேன் என்பார்" எனக் குறிப்பிடுகிறார்.அதாவது அவனவன் செய்த செயல்களுக்கு தக்க கூலி கிடைக்கும் என்கிறார். மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம் தனித்தீர்வை -5

Image
  தனித்தீர்வை -5 ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா. ஆத்துமம் பிரிந்து  ஆண்டவருடைய முன்னிலையில் குற்றம் சாட்டப்படுவதும் அதன் விசாரணையும்...! புனித பெர்நார்து எழுதியுள்ளபடி மரித்து ஆண்டவர் முன் நிற்க்கும் ஆத்துமம்,அவனால் கட்டிக் கொண்ட பாவங்கள் வாய் திறந்து,நீ எங்களை உண்டு பண்ணினாய், நாங்கள் உன்னுடைய செய்கைகள்,உன்னை நாங்கள் விட்டு பிரியமாட்டோம்.என்று கூறும்.கடைசியாய் இயேசு கிறிஸ்துநாதருடைய திருக்காயங்களுமே குற்றம் சாட்டும்.ஆண்டவரை அறைந்த ஆணிகள் முறையிடும்.அவர் காயங்கள் உனக்கு எதிராகப் பேசும்.கிறிஸ்துவின் சிலுவை உனக்கு விரோதமாய் மறையுரையாற்றும். ஆண்டவர் குற்றவாளி முன்பாக புனிதர்களின்  முன்மாதிரிகைகளையும், வாழ்நாளில் ஆண்டவர் அவனுக்களித்த நல்லுணர்வுகள்,ஞான வெளிச்சங்கள்,புண்ணியங்கள் செய்வதற்காக அவனுக்குக் கொடுத்த அத்தனை ஆண்டுகளையும் அவனிடம் கணக்கிட்டு காண்பிப்பார். அவன் தன் வாழ்நாளில் பார்த்த ஒவ்வொரு பார்வைக்கும் கணக்கு கேட்கப்படும். மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம் தனித்தீர்வை -4

Image
  தனித்தீர்வை -4 ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா. ஆத்துமம் பிரிந்து  ஆண்டவருடைய முன்னிலையில் குற்றம் சாட்டப்படுவதும் அதன் விசாரணையும்...! சாத்தான் நீதிபதியை நோக்கி "இவர்களுக்காக நான் சாட்டையால் அடிபடவில்லை,குத்தப்படவில்லை.இந்த சண்டாளனுக்காக நான் ஒரு பாடும் படவில்லை.அப்படியிருந்தும் இவனை இரட்சிப்பதற்க்காக பாடுபட்டு மரித்த உம்மை இவன் விட்டு நீங்கி எனக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டான்‌.ஆகையால் இவன் எனக்குச் சொந்தம் என்று கூறும். காவல் சம்மனசுகளும் குற்றம் சாட்டுவார்கள் .ஒவ்வொரு தூதரும் இவனுக்காக முயற்ச்சித்த ஆண்டுகள் எத்தனையென்றும்,எல்லா புத்திமதி களையும் எச்சரிக்கைகளையும் அவன் எப்படி தள்ளி விட்டான் என்றும் சாட்சி சொல்லும்.இந்த பாவி பாவத்தை கட்டிக் கொண்ட இடத்து சுவர்களும் சாட்சி சொல்லும்."சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராக கூக்குரலிடும்(அபக்கூக்கு 2:11) மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம் தனித்தீர்வை -3

Image
  தனித்தீர்வை -3 ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா. ஆத்துமம் பிரிந்து  ஆண்டவருடைய முன்னிலையில் குற்றம்  சாட்டப்படுவதும் அதன் விசாரணையும்...! ஆண்டவர்(நீதிபதி) இருக்கையின் முன் இரண்டு புத்தகங்கள் இருக்கும்.நற்செய்தி நூல்,மனசாட்சி ஆகியன.குற்றவாளி என்ன செய்திருக்க வேண்டுமோ அவை நற்செய்தி நூலில் இருக்கும்.உண்மையில் அவன் என்னென்ன செய்தானோ அவை மனசாட்சியில் பதிக்கப்பட்டிருக்கும்.இந்த நீதி என்னும் தராசில் செல்வமும்,பெருமையும்,உயர்ந்த குலமும் அல்ல,அவனவன் செய்த செயல்கள் மட்டுமே நிறுத்தப்படும்.புனித அகுஸ்தீன் கூறியுள்ளபடி கிறிஸ்துநாதரின் நீதிமன்றத்தில் சாத்தான் எழுந்து நின்று உன் வாய் மொழிகளை ஒவ்வொன்றாய் விவரிப்பான்.நம் முகத்திற்கு நேராகவே நாம் செய்த எல்லாவற்றையும்,பாவம் செய்த அந்த நாள்,மணி நேரத்தையும் சுட்டிக் காண்பித்து குற்றம் சாட்டுவான். மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

உலகின் இறுதிகாலங்கள் -4

Image
  சாத்தானின் இருளும்,அகோரமான வெப்பமும்,புயல்களும்,இடி முழக்கங்களும் உலகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும்போது,எல்லா பலமும் பொங்கி வருகிற திவ்ய நற்கருணைப் பேழையினால் பாதுகாக்கப்படுவது எப்படி என்று அறிந்திருக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்.  உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து .... சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம். இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க!

மரண ஆயத்தம் தனித்தீர்வை -2

Image
  தனித்தீர்வை - 2 ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா மரித்த பாவியானவனின் ஆன்மா  நீதிபதியாகிய கடவுளை மனித உருவில் பார்ப்பது எவ்வளவோ பயங்கரத்துக்குரியதாக இருக்கும்.ஏனெனில் மனிதத் தோற்றத்தில் ஆத்தும இரட்சணியத்திற்க்காக அளவற்ற பாடுகளை அனுபவித்து மரித்தவருக்கு,அவன் காட்டிய நன்றிக் கேடு எவ்வளவோ பெரிதென்று தெரிவித்துக் காண்பித்து அவனைக் கண்டிக்கும். இறைவனின் இரக்கத்தை புறக்கணித்ததற்காக, தீர்ப்பு பெற வேண்டிய இந்த தருணத்தில் எந்த முகத்தோடு இன்னும் இரக்கத்தை கேட்க முடியும். தனக்கு மேலே சினமுடைய நீதிபதி வீற்றிருப்பதையும்,தனக்கு கீழே நரகம் திறந்திருப்பதையும்,ஒருபுறம் தன் பாவங்கள் தன்னை குற்றவாளி ஆக்குவதையும், மறுபுறத்தில் பசாசுகள் அவனுக்கு அளிக்கப்படவிருக்கும் தீர்ப்பை நிறைவேற்ற தயாராக இருப்பதையும் தனக்குள்ளேயே, தன் மனசாட்சி தன்னை கடிந்து குத்துவதையும் காணும்போது எங்கே தப்பியோடப் பார்ப்பான்?அவன் என்ன தான் செய்வான்? மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

மரண ஆயத்தம் தனித்தீர்வை - 1

Image
*தனித்தீர்வை* *ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா* ஆத்துமம் பிரிந்து  ஆண்டவருடைய முன்னிலையில் தோன்றுவதையும்  குற்றங்களின் விவரங்கள் விசாரனை தீர்ப்பு இவற்றை தியானிப்போம். தனித்தீர்வையானது மனிதனின் உயிர் பிரிந்த அதே நொடியில் நடக்கும்.ஆத்துமம் உடலை விட்டு பிரிந்த அதே இடத்திலேயே நடக்கும். வேறு எவரையும் அனுப்பாமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே அந்த ஆத்துமத்தை தீர்வையிட வருவார்."நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.லூக்கா12-40. ஆத்துமமானது இயேசுவின் கோப அடையாளத்தை தரிசிக்கும்போது நரக வேதனையை அனுபவிப்பதைக் காட்டிலும் அதிகமாய் வேதனைப்படும்.பூமியில் சில குற்றவாளிகள் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும் நீதிபதியின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டவுடனே உடல் முழுக்க வியர்த்து குளிர்ந்த சடலமாய் விழுவது கூட சிலவேளைகளில் நிகழ்கிறது.ஒரு பிள்ளையோ அல்லது ஒரு குடிமகனோ தன்னைப் பெற்ற தந்தை அல்லது தங்களை ஆளும் அரசனுக்கு எதிராக துரோகத்தைச் செய்தபின் அவர்களை போய் பார்ப்பது பெரும் அச்சத்தையும் நடுக்கத்தையும் வருவிக்கும்.அப்படியானால் வாழுங்காலத்தில் ஆத்துமமானது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாதரை எவ்வ...

உலகின் இறுதிகாலங்கள் - 3

Image
  என்னைக் கடுமையாக ஆக்குவது எதுவென்றால்,பல சமயங்களில் நீங்கள் பலவீனத்தினாலோ,அல்லது பசாசின் கண்ணிகளாலோ விழுவதில்லை.நீங்கள் அறிந்தே விழுகிறீர்கள்."கடவுளைப் பற்றி எனக்கென்ன கவலை ?என்று உங்களுக்கு நீங்களே சொல்லியபடி,பாதாளத்திற்குள் உங்களை நீங்களே வேண்டுமென்று விழதாட்டுகிறீர்கள்.அப்போதுதான் நான் உங்களை யூதாஸ்கள் என்கிறேன்.என் விலையேறப்பெற்ற இரத்தத்தோடு நீங்கள் என்னை விற்றுவிடுகிறீர்கள்.என் மரணத்தைக் கொண்டு நான் உங்கள் ஆத்துமங்களை திரும்பவும் விலைக்கு வாங்கிக் கொண்டதால் எனக்கு சொந்தமாயிருக்கிற அவற்றை சாத்தானிடம் நீங்கள் கொடுக்கிற போது நீங்கள் என்னையே சாத்தானின் கரங்களில் வைக்கிறீர்கள்.உங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு ,கிறிஸ்தவ எதிர்ப்பு நிலையினருக்குத் தகுதியுள்ள காரியங்களைச் செய்வதன் மூலமாக நீங்கள் என்னை மறுதலிக்கிறீர்கள். -உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து .... சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம்.

கிறிஸ்து நாதர் அனுசாரம்

Image
  தந்திர சோதனைகள் மனிதனுக்கு சங்கடமும் கஷ்டமுமாயிருந்த போதிலும் பலமுறை அவைகள் அவனுக்கு வெகு பிரயோசனமாயிருக்கின்றன.எப்படியெனில் அவைகளால் அவன் தாழ்த்தப்படுகிறான்.சுத்திகரிக்கப்படுகிறான்.நல்லுணர்ச்சியடைகிறான்.அர்ச்சிஷ்டவர்களெல்லாரும் பல உபத்திரவ இடுக்கண்களையும் தந்திர சோதனைகளையும் அனுபவித்து புண்ணியத்தில் விருத்தியடைந்தார்கள்.தந்திர சோதனைகளை எதிர்த்துப் போராடக் கூடாமற் போனவர்களோ பாவிகளாகி கெட்டு போனார்கள்.தந்திரங்களாவது துன்பங்களாவது இல்லாத அவ்வளவு பரிசுத்த சந்தியாசச் சபையும் கிடையாது.அவ்வளவு பத்திரமான ஒளிப்பிடமுங்கிடையாது. கிறிஸ்து நாதர் அனுசாரம் 13-2 இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

கிறிஸ்துநாதர் அனுசாரம்

Image
  தந்திர சோதனைகளை எதிர்த்து போராட வேண்டும். நாம் பூலோகத்தில் சீவிக்கும் வரையில் துன்ப துரிதமும் தந்திர சோதனையுமின்றி இருக்க முடியாது.அதைப் பற்றியே,"பூலோகத்தில் மனிதனுடைய சீவியம் தந்திர சோதனை தான்".என்று யோபு ஆகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் சிறிதேனும் அயராமால் "யாரை விழுங்குவோமென்று தேடி எந்நேரமும் சுற்றித் திரியும்",பசாசுக்கு நம்மை மோசம் செய்ய இடம் கிடைக்காத படி ஒவ்வொருவனும் தனக்கு உண்டாகும் தந்திர சோதனை மட்டில் எச்சரிக்கையாயும் , செபங்களில் விழிப்பாயும் இருக்க வேண்டும்.தந்திரங்களால் சோதிக்கப்படாத அவ்வளவு உத்தம பரிசுத்தன் எவனுமில்லை.எந்த சோதனையிலும் உட்படாமலிருப்பது கூடாத காரியம். கிறிஸ்துநாதர் அனுசாரம் 13-1 இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

உலகின் இறுதிகாலங்கள் -2

Image
  பஞ்சமும்,கொள்ளை நோய்களின் காரணமாக நிகழும் சாவுகளும் என் இரண்டாம் வருகையின் முன்னோடியான அடையாளங்களாக இருக்கும்.உங்களைத் தண்டிக்கும் படி ஏற்பாடு செய்யபட்டவையும்,கடவுளிடம் உங்களைத் திருப்பி அழைப்பவையுமான இந்த தண்டனைகள்,தங்கள் துன்புறுத்தும் வல்லமையைக் கொண்டு,கடவுளின் பிள்ளைகளுக்கும்,சாத்தானின் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பிரித்தெடுத்தலைச் செய்து முடிக்கும். -உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து .... சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம்.

பரலோக எச்சரிப்பு...!

Image
சுத்திகரிப்பா ?தண்டனையா ? பரலோக எச்சரிப்பு...! ஆம்! சின்ன சின்ன தண்டனைகளைக் கொண்டு ஆண்டவர் பாவ உலகத்தை எச்சரிக்கிறார்.பெரிய உலகளாவிய சுத்தகரிப்புத் தண்டனையை அவர் அனுப்புமுன் நம் பாவ வாழ்க்கையை நாம் திருத்திக் கொள்ளும்படி நமக்கு அவகாசம் கொடுக்கிறார்.உலகம்,அதாவது நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்ப வேண்டும்.நல்லவர்கள் அதிக நல்லவர்களாகும்படி தங்களை மனந்திருப்ப வேண்டும்.பாவத்திலிருப்பவர்கள் பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி ஆண்டவரிடம் வர வேண்டும்.நம்மை நாம் மேலும் மேலும் சுத்திகரிக்க வேண்டும். அல்லாவிடில் நம்முடைய நன்மைக்காகவே நாம் சுத்திகரிக்கப்படுவோம். அந்த சுத்திகரிப்புத் தண்டனை மிகப் பெரியதாயிருக்கும்.இது பாத்திமா செய்தி.உண்மையான கடவுளை அவர் விரும்புகிற முறையில் தான் நேசிக்க வேண்டும்,வழிபட வேண்டும்.நாம் தொழுவது மெய்யங்கடவுளைத்தானா? நாம் அஞ்ஞானத்திலோ பதிதத்திலோ பிரிவினையிலோ இருக்கிறோமா?என்றே நேர்மையான மனதோடு  சிந்தித்துப் பார்க்க வேண்டும்.ஏனெனில் சத்தியமே சர்வேசுரனை அடையும் வழி.சத்தியம் கெட்டால் தப்பறை வரும்.அது நம் அறிவை இருளச்செய்துவிடும். மாதா பரிகார மலரிலிருந்து... இயேசுவுக்கே புகழ் ...

உலகின் இறுதிகாலங்கள் -1

Image
  ஒரே ஞானம், ஒரே ஒரு மெய் ஞானம் தான் அவசியமானது. அதுவே கடவுளை அறிவது, அவருக்கு ஊழியம் செய்வது,சகல காரியங்களிலும் அவரை அறிவது,நிகழ்கிற காரியம் ஒவ்வொன்றிலும் அவரை காண்பது,அழிவுக்குள் விழுந்துவிடாதபடி சர்வேசுரனை அவருடைய எதிரியிடமிருந்து வேறுபடுத்தி அறியக் கூடியவர்களாயிருப்பது.இதற்கு பதிலாக சுபாவத்திற்கு மேற்பட்ட அறிவுக்கு கேடான விதத்தில்,மனித அறிவை வளர்த்து கொள்வது பற்றி மட்டுமே நாம் கவலைபடுகிறோம். உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து .... சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம்.

அரசனை ,ஏழைகள் எளிதில் சந்திக்க முடியாமல் போகலாம் ,உலக மீட்பரை சுலபமாக திவ்விய நற்கருணையில் சந்தித்துவிடலாம்.

Image
அரசர்கள் எப்போதும் மக்களைச் சந்திப்பதில்லை, அரசனோடு பேச விரும்பிச் செல்லும் ஒருவன், அது அனுமதிக்கான நேரம் அல்ல என்றும், சரியான நேரத்தில் வருமாறும் சொல்லி காவலர்களால் திருப்பி அனுப்பப்படுவது அடிக்கடி நிகழ்கிறது. ஆனால் நமதாண்டவர் எல்லாரையும், எந்த நேரத்திலும் தாம் வரவேற்கும் படியாக, கதவும், காவலர்களும் இல்லாத ஒரு திறப்பான மாட்டு தொழுவத்தில் பிறக்கத் திருவுளங்கொண்டார். ""இது சந்திப்பிற்கான நேரம் அல்ல'' என்று சொல்லித் தடுக்க, அங்கே ஊழியன் யாருமில்லை. பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்திலும் சேசுநாதர் இவ்வாறே இருக்கிறார். தேவாலயங்கள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஒவ்வொருவனும் தான் விரும்பும் நேரத்தில் பரலோக அரசரிடம் சென்று அவரோடு பேச முடியும்; முழுமையான நம்பிக்கையோடு நாம் அங்கே அவரிடம் பேச வேண்டுமென்று சேசு விரும்புகிறார். இதற்காகவே அப்பத்தின் சாயலுள் அவர் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார். அர்ச். பீற்றர் கிறிஸோலோகுஸ்.