மரண ஆயத்தம் தனித்தீர்வை -4
தனித்தீர்வை -4
ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா.
ஆத்துமம் பிரிந்து ஆண்டவருடைய முன்னிலையில்
குற்றம் சாட்டப்படுவதும் அதன் விசாரணையும்...!
சாத்தான் நீதிபதியை நோக்கி "இவர்களுக்காக நான் சாட்டையால் அடிபடவில்லை,குத்தப்படவில்லை.இந்த சண்டாளனுக்காக நான் ஒரு பாடும் படவில்லை.அப்படியிருந்தும் இவனை இரட்சிப்பதற்க்காக பாடுபட்டு மரித்த உம்மை இவன் விட்டு நீங்கி எனக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டான்.ஆகையால் இவன் எனக்குச் சொந்தம் என்று கூறும்.
காவல் சம்மனசுகளும் குற்றம் சாட்டுவார்கள் .ஒவ்வொரு தூதரும் இவனுக்காக முயற்ச்சித்த ஆண்டுகள் எத்தனையென்றும்,எல்லா புத்திமதி களையும் எச்சரிக்கைகளையும் அவன் எப்படி தள்ளி விட்டான் என்றும் சாட்சி சொல்லும்.இந்த பாவி பாவத்தை கட்டிக் கொண்ட இடத்து சுவர்களும் சாட்சி சொல்லும்."சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராக கூக்குரலிடும்(அபக்கூக்கு 2:11)
மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment