மரண ஆயத்தம் தனித்தீர்வை -3
தனித்தீர்வை -3
ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா.
ஆத்துமம் பிரிந்து ஆண்டவருடைய முன்னிலையில் குற்றம் சாட்டப்படுவதும் அதன் விசாரணையும்...!
ஆண்டவர்(நீதிபதி) இருக்கையின் முன் இரண்டு புத்தகங்கள் இருக்கும்.நற்செய்தி நூல்,மனசாட்சி ஆகியன.குற்றவாளி என்ன செய்திருக்க வேண்டுமோ அவை நற்செய்தி நூலில் இருக்கும்.உண்மையில் அவன் என்னென்ன செய்தானோ அவை மனசாட்சியில் பதிக்கப்பட்டிருக்கும்.இந்த நீதி என்னும் தராசில் செல்வமும்,பெருமையும்,உயர்ந்த குலமும் அல்ல,அவனவன் செய்த செயல்கள் மட்டுமே நிறுத்தப்படும்.புனித அகுஸ்தீன் கூறியுள்ளபடி கிறிஸ்துநாதரின் நீதிமன்றத்தில் சாத்தான் எழுந்து நின்று உன் வாய் மொழிகளை ஒவ்வொன்றாய் விவரிப்பான்.நம் முகத்திற்கு நேராகவே நாம் செய்த எல்லாவற்றையும்,பாவம் செய்த அந்த நாள்,மணி நேரத்தையும் சுட்டிக் காண்பித்து குற்றம் சாட்டுவான்.
மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment