பரலோக எச்சரிப்பு...!
சுத்திகரிப்பா ?தண்டனையா ?
பரலோக எச்சரிப்பு...!
ஆம்! சின்ன சின்ன தண்டனைகளைக் கொண்டு ஆண்டவர் பாவ உலகத்தை எச்சரிக்கிறார்.பெரிய உலகளாவிய சுத்தகரிப்புத் தண்டனையை அவர் அனுப்புமுன் நம் பாவ வாழ்க்கையை நாம் திருத்திக் கொள்ளும்படி நமக்கு அவகாசம் கொடுக்கிறார்.உலகம்,அதாவது நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்ப வேண்டும்.நல்லவர்கள் அதிக நல்லவர்களாகும்படி தங்களை மனந்திருப்ப வேண்டும்.பாவத்திலிருப்பவர்கள் பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி ஆண்டவரிடம் வர வேண்டும்.நம்மை நாம் மேலும் மேலும் சுத்திகரிக்க வேண்டும்.
அல்லாவிடில் நம்முடைய நன்மைக்காகவே நாம் சுத்திகரிக்கப்படுவோம். அந்த சுத்திகரிப்புத் தண்டனை மிகப் பெரியதாயிருக்கும்.இது பாத்திமா செய்தி.உண்மையான கடவுளை அவர் விரும்புகிற முறையில் தான் நேசிக்க வேண்டும்,வழிபட வேண்டும்.நாம் தொழுவது மெய்யங்கடவுளைத்தானா? நாம் அஞ்ஞானத்திலோ பதிதத்திலோ பிரிவினையிலோ இருக்கிறோமா?என்றே நேர்மையான மனதோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.ஏனெனில் சத்தியமே சர்வேசுரனை அடையும் வழி.சத்தியம் கெட்டால் தப்பறை வரும்.அது நம் அறிவை இருளச்செய்துவிடும்.
மாதா பரிகார மலரிலிருந்து...
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment