மரண ஆயத்தம் தனித்தீர்வை -2

 


தனித்தீர்வை - 2
ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா

மரித்த பாவியானவனின் ஆன்மா  நீதிபதியாகிய கடவுளை மனித உருவில் பார்ப்பது எவ்வளவோ பயங்கரத்துக்குரியதாக இருக்கும்.ஏனெனில் மனிதத் தோற்றத்தில் ஆத்தும இரட்சணியத்திற்க்காக அளவற்ற பாடுகளை அனுபவித்து மரித்தவருக்கு,அவன் காட்டிய நன்றிக் கேடு எவ்வளவோ பெரிதென்று தெரிவித்துக் காண்பித்து அவனைக் கண்டிக்கும்.
இறைவனின் இரக்கத்தை புறக்கணித்ததற்காக, தீர்ப்பு பெற வேண்டிய இந்த தருணத்தில் எந்த முகத்தோடு இன்னும் இரக்கத்தை கேட்க முடியும்.
தனக்கு மேலே சினமுடைய நீதிபதி வீற்றிருப்பதையும்,தனக்கு கீழே நரகம் திறந்திருப்பதையும்,ஒருபுறம் தன் பாவங்கள் தன்னை குற்றவாளி ஆக்குவதையும், மறுபுறத்தில் பசாசுகள் அவனுக்கு அளிக்கப்படவிருக்கும் தீர்ப்பை நிறைவேற்ற தயாராக இருப்பதையும் தனக்குள்ளேயே, தன் மனசாட்சி தன்னை கடிந்து குத்துவதையும் காணும்போது எங்கே தப்பியோடப் பார்ப்பான்?அவன் என்ன தான் செய்வான்?

மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!