அரசனை ,ஏழைகள் எளிதில் சந்திக்க முடியாமல் போகலாம் ,உலக மீட்பரை சுலபமாக திவ்விய நற்கருணையில் சந்தித்துவிடலாம்.
அரசர்கள் எப்போதும் மக்களைச் சந்திப்பதில்லை, அரசனோடு பேச விரும்பிச் செல்லும் ஒருவன், அது அனுமதிக்கான நேரம் அல்ல என்றும், சரியான நேரத்தில் வருமாறும் சொல்லி காவலர்களால் திருப்பி அனுப்பப்படுவது அடிக்கடி நிகழ்கிறது. ஆனால் நமதாண்டவர் எல்லாரையும், எந்த நேரத்திலும் தாம் வரவேற்கும் படியாக, கதவும், காவலர்களும் இல்லாத ஒரு திறப்பான மாட்டு தொழுவத்தில் பிறக்கத் திருவுளங்கொண்டார். ""இது சந்திப்பிற்கான நேரம் அல்ல'' என்று சொல்லித் தடுக்க, அங்கே ஊழியன் யாருமில்லை. பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்திலும் சேசுநாதர் இவ்வாறே இருக்கிறார். தேவாலயங்கள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஒவ்வொருவனும் தான் விரும்பும் நேரத்தில் பரலோக அரசரிடம் சென்று அவரோடு பேச முடியும்; முழுமையான நம்பிக்கையோடு நாம் அங்கே அவரிடம் பேச வேண்டுமென்று சேசு விரும்புகிறார். இதற்காகவே அப்பத்தின் சாயலுள் அவர் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார்.
அர்ச். பீற்றர் கிறிஸோலோகுஸ்.
Comments
Post a Comment