மரண ஆயத்தம் தனித்தீர்வை -6
தனித்தீர்வை -6
ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா.
ஆத்துமம் பிரிந்து ஆண்டவருடைய முன்னிலையில்
குற்றம் சாட்டப்படுவதும் அதன் விசாரணையும்...!
நேர்மையாளரே மீட்கபடுவது அரிதென்றால் இறைபற்றில்லாதோரும்,பாவியும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ"(1பேதுரு 4-18)
ஒவ்வொரு வீண் வார்த்தைக்குமே நாம் கணக்கு சொல்லித் தீரவேண்டுமானால் ,நாம் சம்மதித்த எத்தனையோ கெட்ட நினைவுகள் ,எத்தனையோ கெட்ட வார்த்தைகளுக்கெல்லாம் எப்படி கணக்கு சொல்ல முடியும் ?புனித கிரகோரி "வீண் வார்த்தைக்கே கணக்கு கேட்கப்படுமானால்,அசுத்த வார்த்தைகள் என்னவாகும்? ஆன்மாக்களை தம்மிடமிருந்து திருடியவர்களைப் பார்த்து ஆண்டவர் குறிப்பாய் பேசி திருவாய் மலர்ந்தருளியிருப்பதாவது :தன் குட்டிகளை திருடிச் சென்றவருக்கு ஒரு கரடி என்ன செய்யுமோ,அப்படியே நானும் செய்வேன் என்பார்" எனக் குறிப்பிடுகிறார்.அதாவது அவனவன் செய்த செயல்களுக்கு தக்க கூலி கிடைக்கும் என்கிறார்.
மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment