மரண ஆயத்தம் தனித்தீர்வை-7
விசாரணை முடிந்ததும் ஆண்டவரின் தீர்ப்புக்காக நடுங்கி நிற்கும் ஆத்துமம்.
புனித பாசில் கூறியுள்ளபடி நரகத்தின் கொடுமையைக் காட்டிலும்,பாவங்களின் நாணமும் வெட்கமும் அவனை அப்போது அதிகம் தொல்லைப்படுத்தும்.கடைசியாய் இதோ நேரம் நெருங்கி விட்டது.நீதிபதி சொல்லும் தீர்ப்பை கேள் ."சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு நீங்கி நித்திய நரக நெருப்புக்குள் போ".ஓ அந்த தீர்ப்பு எப்படிப்பட்ட கொடிய இடி விழுந்தாற் போலிருக்கும் அந்த இடியின் பெரும் கொடுமை எவ்வளவோ பயங்கரத்தை ஏற்படுத்தும் என்று கர்த்தூசியஸ் கூறுகிறார்.புனித ஆன்ஸ்லெம் என்பார் கூறுவது போல இந்த இடிக்கு நடுங்காகதவன் தூங்குவதில்லை,இறந்தே போவான்.இந்த தீரப்பைக் கேட்டவுடனே பாவிக்கு உண்டாகும் நடுக்கம் எப்படிப்பட்டதென்றால் கூடுமானால் அப்போதே இரண்டாம் முறையும் அவன் இறந்து விடுவான் என்கிறார் புனித எவுசேபியுஸ்.நீதிபதி தங்கள் மேல் தீர்ப்புச் சொல்லும் போது பாவிக்கு உண்டாகும் பயம் எத்தகையது என்றால் அவர்களுக்கு சாகா வரமில்லாமலிருந்தால் அப்போதே இன்னொரு முறையும் செத்துப்போவார்கள்.அப்போது செபத்திற்க்கும் நேரமில்லை.சிபாரிசு செய்யும் நபர்களையும் தேடிப் பிடிக்க முடியாது என்று புனித வில்வநோவா தாமஸ் கூறுகிறார்.
மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment