கிறிஸ்துநாதர் அனுசாரம்
தந்திர சோதனைகளை எதிர்த்து போராட வேண்டும்.
நாம் பூலோகத்தில் சீவிக்கும் வரையில் துன்ப துரிதமும் தந்திர சோதனையுமின்றி இருக்க முடியாது.அதைப் பற்றியே,"பூலோகத்தில் மனிதனுடைய சீவியம் தந்திர சோதனை தான்".என்று யோபு ஆகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் சிறிதேனும் அயராமால் "யாரை விழுங்குவோமென்று தேடி எந்நேரமும் சுற்றித் திரியும்",பசாசுக்கு நம்மை மோசம் செய்ய இடம் கிடைக்காத படி ஒவ்வொருவனும் தனக்கு உண்டாகும் தந்திர சோதனை மட்டில் எச்சரிக்கையாயும் , செபங்களில் விழிப்பாயும் இருக்க வேண்டும்.தந்திரங்களால் சோதிக்கப்படாத அவ்வளவு உத்தம பரிசுத்தன் எவனுமில்லை.எந்த சோதனையிலும் உட்படாமலிருப்பது கூடாத காரியம்.
கிறிஸ்துநாதர் அனுசாரம் 13-1
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment