மரண ஆயத்தம் தனித்தீர்வை - 1
*தனித்தீர்வை*
*ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா*
ஆத்துமம் பிரிந்து ஆண்டவருடைய முன்னிலையில் தோன்றுவதையும்
குற்றங்களின் விவரங்கள் விசாரனை தீர்ப்பு இவற்றை தியானிப்போம்.
தனித்தீர்வையானது மனிதனின் உயிர் பிரிந்த அதே நொடியில் நடக்கும்.ஆத்துமம் உடலை விட்டு பிரிந்த அதே இடத்திலேயே நடக்கும். வேறு எவரையும் அனுப்பாமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே அந்த ஆத்துமத்தை தீர்வையிட வருவார்."நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.லூக்கா12-40.
ஆத்துமமானது இயேசுவின் கோப அடையாளத்தை தரிசிக்கும்போது நரக வேதனையை அனுபவிப்பதைக் காட்டிலும் அதிகமாய் வேதனைப்படும்.பூமியில் சில குற்றவாளிகள் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும் நீதிபதியின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டவுடனே உடல் முழுக்க வியர்த்து குளிர்ந்த சடலமாய் விழுவது கூட சிலவேளைகளில் நிகழ்கிறது.ஒரு பிள்ளையோ அல்லது ஒரு குடிமகனோ தன்னைப் பெற்ற தந்தை அல்லது தங்களை ஆளும் அரசனுக்கு எதிராக துரோகத்தைச் செய்தபின் அவர்களை போய் பார்ப்பது பெரும் அச்சத்தையும் நடுக்கத்தையும் வருவிக்கும்.அப்படியானால் வாழுங்காலத்தில் ஆத்துமமானது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாதரை எவ்வளவோ நிந்தித்து புறக்கணித்த பின் அவரைக் காண்பது எவ்வளவோ மன வேதனையை உண்டாக்கும்."தாங்கள் ஊடுருவ குத்தியவரை உற்று நோக்குவார்கள்"யோவான் 19-37.
மரண ஆயத்தம்.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
சேசுவுக்கே புகழ் !
தேவமாதாவே வாழ்க !

Comments
Post a Comment