மரண ஆயத்தம் தனித்தீர்வை -5
தனித்தீர்வை -5
ஆண்டவர் திருமுன்பு நிற்கும் ஆன்மா.
ஆத்துமம் பிரிந்து ஆண்டவருடைய முன்னிலையில்
குற்றம் சாட்டப்படுவதும் அதன் விசாரணையும்...!
புனித பெர்நார்து எழுதியுள்ளபடி மரித்து ஆண்டவர் முன் நிற்க்கும் ஆத்துமம்,அவனால் கட்டிக் கொண்ட பாவங்கள் வாய் திறந்து,நீ எங்களை உண்டு பண்ணினாய், நாங்கள் உன்னுடைய செய்கைகள்,உன்னை நாங்கள் விட்டு பிரியமாட்டோம்.என்று கூறும்.கடைசியாய் இயேசு கிறிஸ்துநாதருடைய திருக்காயங்களுமே குற்றம் சாட்டும்.ஆண்டவரை அறைந்த ஆணிகள் முறையிடும்.அவர் காயங்கள் உனக்கு எதிராகப் பேசும்.கிறிஸ்துவின் சிலுவை உனக்கு விரோதமாய் மறையுரையாற்றும்.
ஆண்டவர் குற்றவாளி முன்பாக புனிதர்களின்
முன்மாதிரிகைகளையும், வாழ்நாளில் ஆண்டவர் அவனுக்களித்த நல்லுணர்வுகள்,ஞான வெளிச்சங்கள்,புண்ணியங்கள் செய்வதற்காக அவனுக்குக் கொடுத்த அத்தனை ஆண்டுகளையும் அவனிடம் கணக்கிட்டு காண்பிப்பார். அவன் தன் வாழ்நாளில் பார்த்த ஒவ்வொரு பார்வைக்கும் கணக்கு கேட்கப்படும்.
மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !

Comments
Post a Comment