“நற்கருணையில் மெய்யாகவே இயேசு ஜீவிக்கிறார், என்ற நம்பிக்கை கிறிஸ்த்துவத்தின் உன்னதமான உண்மை. குருவானவர் வசிகரம் செய்யும் அப்பமும் இரசமும், மகத்தான விதமாக இயேசுவின் திருஉடலும் இரத்தமுமாக மாறுகிறது. இயேசுவே இம்மாற்றத்தைக் கொண்டு வருகிறார். இதில் குருவானவர் ஒரு கருவிதான்." என்கிறார் தந்தை ரெஜிஸ் ஸ்கேலன். இவர் அன்னை தெரேசா சபையினரின் ஆன்ம குரு- இயேசுவின் திரு உடலும் திரு இரத்தமும்தான் நற்கருணை என்பதால், அவர்கு தக்க வணக்கமும் மரியாதையும் செலுத்தப்பட வேண்டும். தொடக்க காலத்தில், நற்கருணை கையில்தான் வழங்கப்பட்டது. வேத கலாபனையின் காலத்தில், சிறைப்பட்டோருக்கும், நோயுற்றோருக்கும், மறைந்து வாழ்ந்த திருச்சபைக்கும் நற்கருணை வழங்கப்பட வேண்டுமென்பதால், தகுதி வாய்ந்த திருத்தொண்டர்கள் இந்த சேவையில் பங்கு கொண்டனர். நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்த்து இறைமகனல்ல என்ற “தவறான பிரச்சாரத்தை திருச்சபையின் எதிரிகள் மேற் கொண்டனர், ஆதலால் நற்கருணையைக் கையில் வாங்குவது தவறல்ல என்று போதிக்கலாயினர். இதனால் பல தவறுகள் நிகழ்ந்தன. சிலர் நற்கருணையைக் கையில் பெற்றுக் கொண்டு, அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். சாத்தானின...