உண்மையான பக்தியின் விளக்கம் -2
வியாதி நீங்கி உடல் நலம் அடைந்து வரும் நோயுற்றவன், தனக்குத் தேவையான அளவு மட்டும் மெதுவாகவும், பொறுமையாகவும் நடப்பான். அவ்வாறே. பாவ வழியை விட்டு விலகி வந்தவன் பக்தி நெறியைக் கண்டடையும் வரையில், மெதுவாகத் திணறி நடத்து தான் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றுவான். பக்தி நெறியைக் கண்டடைந்த பிறகு, அவன் துள்ளிக் குதித்துப் பாய்ந்து வந்து, கட்டளைகளை ஆவலுடன் கடைப்பிடிப்பான். கட்டளைகளை மட்டுமின்றி நற்செய்தி அறிவுரைகளையும், கடவுள் தரும் ஏவுதல்களையும் கடைப்பிடித்து ஞான வாழ்வில் முன்னேற்றம் அடைவான்.
அர்ச்.பிரான்ஸிஸ் சலேசியார்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment