உண்மையான பக்தியின் விளக்கம் -3

 


நெருப்புக் கோழி பறப்பதில்லை. வீட்டுக் கோழி மிகவும் சிரமப்பட்டுத் தரையை ஒட்டித்தான் பறக்கும். ஆனால் கழுகுகளும், புறாக்களும் குருவிகளும் மிக்க விரைவாக அடிக்கடி வானுயரப் பறக்கும். இவ்வாறே பாவிகள் கடவுளை நோக்கிப் பறந்துசெல்ல முடியாது. அவர்கள் உலகத்தையும், உலகத்தைச் சார்ந்தவைகளையுமே எப்பொழுதும் நாடிச் செல்வார்கள். உண்மையான பக்தியை இன்னும் கண்டடையாத நல்லவர்கள் தங்கள் நற்செயல்களால் கடவுளை நோக்கிப் பறந்து செல்ல முயல்வார்கள்

 ஆனால் சிரமப்பட்டு, மெதுவாக, அரிதாகத்தான் அவர்களால் பறக்க முடியும். பக்திமான்களோவெனில், எளிதாக அடிக்கடி வானுயரப் பறக்க முடியும்.சுருங்கக் கூறினால், நம்மில் செயலாற்றும் தேவசிநேகத்தின் வேகமும் உக்கிரமுமே பக்தியாகும். அல்லது சுறுசுறுப்பாகவும், ஆவலாகவும் புண்ணியச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டும் தேவசிநேகமே பக்தி எனப்படும். கடவுளின் கட்டளைகள் அனைத்தையும் ஒன்றும் விடாமல் கடைப்பிடிக்க நம்மைத் தூண்டுவது தேவ சிநேகமே. கவனமாகவும், ஆர்வத்தோடும் அவற்றைக் கடைப் பிடிக்கத் தூண்டுவது பக்தி. பாகுபாடு எதுவுமின்றிக் கடவுளின் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பவனே நல்லவனும் பக்திமானும் ஆவான். நல்லவனாயிருக்க தேவசிநேகம் வேண்டும். பக்தியுள்ளவனாயிருக்க தேவசிநேகமும். நற்செயல்கள் மேலுள்ள சுவனமும், ஆவலும் வேண்டும்.

தேவசிநேகத்தின் உயர்வு மலர்ச்சியான பக்தி, கடவுளின் கட்டளைகளைச் செம்மையாகவும், ஆர்வத்தோடும் கடைப்பிடிக்க நம்மைத் தூண்டுவதோடு நில்லாது. கடமையில்லாத பிற நற்செயல்களையும் அன்பு கலந்த ஆர்வத்துடன் செய்ய வழிவகுத்துத் தருகிறது.

அர்ச்.பிரான்ஸிஸ் சலேசியார்.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!