அன்னிய பாஷை என்று மக்களை ஏமாற்றும் போலி போதகர்கள்

 


தழிழ்தெரிந்தவர்களிடம்,தமிழில் பேசாமல் புரியாத முறையில் கத்தி கூச்சல் போட்டு அன்னிய பாஷை என்று மக்களை ஏமாற்று போலி போதகர்கள் உஷார்...உஷார்....

நிறை உண்மையை நோக்கி வழநடத்திச்செல்பவர் பரிசுத்த ஆவியார்.அந்த உண்மையை புரியாத மொழியில் ,மொழியா அல்ல அல்ல வாய்க்கு வந்ததை உலருதல், கத்தி கூச்சல் போட்டு ஒரு நாளும் பரிசுத்த ஆவி புரியாத முறையில் வெளிப்படுத்தமாட்டார்.

அசுத்த ஆவி மட்டுமே கத்திக் கூச்சல் போட்டு மக்களை குழப்பும் .இதை அன்னிய பாஷை என்று நம்பும் நம் சகோதர சகோதரிகளை என்ன வென்று சொல்வது.


🙈குடும்பங்களில் குழப்பம் ஏற்படுத்தும்

 போலிப்போதகா்கள்🙈

      

ஆறுமாதங்களுக்குமுன் பக்கத்து

ஊரில் நண்பரின் திருமண விழாவிற்கு

சென்றிருந்தேன்...

      

கத்தோலிக்க முறைப்படி திருமணம்

இறைவன் திரு அருளால் நடைபெற்றுக்

கொண்டிருந்தது...

       

திருமண திருப்பலி நடைபெரும்

போது பெண்கள் அனைவரும் பொதுவாக ஆலயத்தினுள் இருந்து

மணமக்களுக்காக ஜெபிப்பது

வழக்கம்....

     

ஆனால் 4,சகோதரிகள் மட்டும்

வெளியில் இருந்து பேசிக்

கொண்டிருந்தனா்...இவா்கள்

அணிகலன்கள் ஏதும் போடா

திருந்தனா்...

       

இவா்கள்,கத்தோலிக்க சபையில்

இருந்து வெளியில்வந்து பல

சபைகளுக்குப்போய், இறுதியில்

இயேசு நம்மோடு சபையில்

இருப்பதாக அறியப்பெற்றேன்.

      

இந்த பிறசபை சகோதரியில்

ஒருவா் மணமகனின் தாயின்

உடன்பிறந்த சகோதரி என்பது

குறிப்பிடத்தக்கது...


"கடவுளிடம் அன்பு

செலுத்துவோா் தம் சகோதரா்

சகோதரிகளிடமும் அன்பு

செலுத்தவேண்டும்"(1பேதுரு4:21)


இவ்வாறு உயிருள்ள நம்

"ஆண்டவராகிய இயேசு" எல்லாமக்களிடமும்,பாகு பாடில்லாமல்

அதாவது ஏழை,பணக்காரன்,

உயா்ந்தவன்,தாழ்ந்தவன்,

ஆண்,பெண், மதம், சபை என்று 

பாகுபாடில்லாமல் நேசிப்பவா்.

   

ஆனால் இந்த சபைபோதகர்கள்

பிரிவினையை போதிக்கிறாாா்கள்.

கத்தோலிக்க தேவாலயத்தில்

வழிபாட்டில் கலந்துகொண்டால்

மோட்சம் போகமுடியாது....

    

காரணம் அங்கு சிலையை

வழிபடுகிறாாா்கள், உருவத்தை

வழிபடுகிறாா்கள் என்று தவரான

போதனைகளை, மக்களிடம்

திணித்து ,மக்களை பயப்படுத்தி

அடிமையாக வைத்து குடும்பங்களில்

பிரிவினையை ஏற்படுத்தி

சபையை வளர்கிறார்கள்.

    

இந்த சபைக்கு செல்லும்

சகோதரிகள், கட்டிய கணவரிடம்,

பெற்ற பிள்ளைகளிடம்,குடும்ப

உறவினாா்களிடம் அதிகமாக

அன்பை பகிர்ந்து கொள்வதில்லை

மாறாக....பாஸ்டர்களிடமும்

சபையிடமும் அதிக விசுவாசத்தோடு

அன்பை வெளிப்படுத்துவதை

அவா்களில் செயல்பாடுகளில்

உணரமுடிகிறது....

   

சமீபத்தில் பிறசபையைச் சார்ந்த

(இயேசு நம்மோடுசபை)திருமண

விழாவில் கலந்து கொள்ளும்

சந்தர்ப்பம் கிடைத்தது....

   

கலந்துகொண்டேன்.....

 மண்டபம் பிறமதத்தாருக்கு(இந்து) சொந்தமானது

உரிமை

   

இந்த மண்டபத்தில் திருமண

நிகழ்ச்சியை நடத்தினாா்கள்.

இங்கு பாஸ்டர்களின் பிரசங்கமும்

பிராாா்த்தனையும் அன்னியபாசையும்

மக்கள்மனதைக் கவரும் வகையில்

அமைந்திருந்தது...இறுதியில்

பைபிளை மாற்றிக் கொண்டனா்.

 

நல்லா "சிந்திக்கணும்! திடீரென

தலைமை போதகர் மணமக்களின்

தலையில் கைவைத்து பயங்கர

சத்தத்துடன் ஜெபம் செய்தார்..

சகபோதகர்களும் கைகோர்த்து

ஜெபிக்கத்தொடங்கினா்.

அரங்கமே அதிர்ந்தது போல்

இருந்தது....


திடீரென தலைமை போதகர்

ஏதோ ஒரு பாசையில் ஜெபித்தார்

(அன்னியபாசை )சக போதகர்களும்

அதைபோல் அன்னியபாசையில்

ஜெபித்தாா்கள்....

எனக்கு ஒன்றுமே புரியல்ல...

அரங்கத்தில் அமா்ந்து 

இருந்தவா்களெல்லாம் தமிழ் பேசத்

தெரிந்தவர்கள்..அப்புறம்

ஏன் இப்படி ஒரு பாசையில்

ஜெபிக்கணும்.....வேதத்தில்

நாம் காணமுடிகிறது....

    

பெந்தகோஸ்தே நாளில் வெவ்வேறு

இனம், மொழி பேசக்கூடியவா்கள்

கூடியிருந்தனா் .அப்போது தூய

ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு

அன்னியபாசையை அவரவா்

மொழிகளிலயே புரிந்து

கொண்டாதாக உயிருள்ள வாா்த்தை

நமக்கு வெளிப்படுத்துகிறது...

   

மற்றபடி சில இடங்களில் நாம்

வாசிக்கின்றோம் பேய்களை

ஓட்டும்போது இந்தபாசையில்

ஜெபம் செய்தார்கள் என்று...

  

ஆனால் எந்த சம்பந்தமும்

இல்லாமல் மக்களை ஏமாற்ற

இந்தபோலிப் போதகா்கள் கையாளும்

தந்திரவித்தை இது.

   

சிந்தனைக்கு..


இவர்கள் திருமணம் நடத்தும்

மண்டபத்தில்..பல மதச்சடங்குகள்

நடைபெரும் என்பது அனைவருக்கும்

தெரிந்த ஒன்றே. அதில் ஒமகுண்டம்

வளா்ப்பார்கள் ,

இந்துமதமுறைப்படி

மந்திரங்கள் ஒதப்பட்டு சிலைவழிபாடு

கள் செய்யப்பட்டு நிகழச்சிகளும்

நடக்கும் இங்குதான் இந்த பரிசுத்த

சபையை சேர்ந்தவர்கள்

திருமணம் மற்றும் நிகழ்ச்சிகள்

நடத்துகிறாா்கள்....அப்படியானால்

அது பரிசுத்த ஸ்தலம் கிடையாது!

    

ஆனால் கத்தோலிக்க தேவாலயத்தில் தினமும் இறைவனை

புகழ்ந்து ஆராதித்து மகிமைப்படுத்துவார்கள்...இங்கு

பிற மத சடங்குகளோ அன்னிய

தேவத்தை வழிபடுதலோ 

கிடையாது....

 

அப்படியானால் உண்மையாகவே

எது சிறந்த வழிபாடு என்பதை

தெரிந்து கொள்ளுங்கள்.

    

அப்படியானால் இந்த சபையை

சாரந்தவர்களின் மன நிலைப்படி

இவா்கள் மோட்சம் போகிறது

என்பது கேள்விக்குறி?

  "

தம் சகோதரா் சகோதரிகளை வெருப்போர் அனைவரும் கொலையாளிகள்.எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு

இராது.(1யோவான்1:10)


கடவுளை அறிந்த கத்தோலிக்க கிறிஸ்தவா்களையே

இவா்கள் அதிகமாக

தங்கள் சபைகளுக்கு

இழுக்கின்றனா்..

  

சிந்திக்கவும்..

ஒரே தலைமயிலான சபை

நம் கத்தோலிக்கத் திருச்சபைதான்.(இயேசுவேஇதன் தலைவா்)


இயேசுவுக்கே புகழ்!மரியேவாழ்க!


                             #ஜோதி#

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!