Posts

Showing posts from July, 2021

கத்தோலிக்க பெற்றோர்களின் ஞான அலுவல்

Image
கத்தோலிக்க குடும்பத்தின் முக்கிய அலுவல் - தங்கள் பிள்ளைகளை மோட்ச இராச்சியத்திற்கு பிரஜகளை உண்டுபண்ணுவதற்காக வளர்த்தல்* கத்தோலிக்க பெற்றோராகிய உங்களது பணி ஒரு புனிதமான ஞான அலுவலாக இருக்கிறது.நீங்கள் உங்கள் பிள்ளைகளை மருத்துவர்களாகவோ வழக்கறிஞர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ உருவாக்கலாம்.ஆனால் அவர்கள் மோட்ச இராச்சியத்தை அடையாமலோ அல்லது அதற்கு தேவையான வாய்ப்பு வழிமுறைகள் அவர்களுக்கு வழங்கப்படாமலோ போயிருந்தால் நீங்கள் வெற்றிபெற வில்லை என அர்த்தம்.பிள்ளைகளை நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ளச் செய்வதுதான் கத்தோலிக்க பெற்றோர்களின் பிரதான நோக்கம். உங்கள் குழந்தைகள் உலகமெல்லாம் தங்களுடையதாக்கிக் கொண்டாலும் பாவ வாழ்க்கையால் மோட்ச பேரின்பத்தை இழப்பார்கள் என்றால் நீங்கள் அவர்களுடைய பெற்றோராயிருந்து என்ன பயன்? இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவசங்கீர்த்தனம் செய்ய வெட்க்கப்படாதே

Image
 பாவம் விஷமாயிருக்கிறது. பாவசங்கீர்த்தனம்,ஒருவன் தன் பாவங்களைப் பற்றி தன்னையே குற்றஞ்சாட்டிக் கொள்ளாதலாக இருக்கிறது. அக்கிரமம் விஷமாயிருக்கிறது. பாவசங்கீர்த்தனம் பாவத்தில் மீண்டும் விழாதிருக்க தேவையான மருந்தாக இருக்கிறது.ஆனால் பாவசங்கீர்த்தனம் செய்ய நீ வெட்கப்படுகிறாயா? இந்த வெட்கம் சர்வேசுரனுடைய நீதியாசனத்திற்கு முன்பாக உனக்கு  எந்த விதத்திலும் உதவாது.உடனே இந்த வெட்கத்தின்மீது  வெற்றிக்கொள். அர்ச்.அமிர்தநாதர். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே !  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Image
 இவ்வுலகில் தன் ஒன்றுமில்லாமையை அறிந்திருக்கிற மனிதனை விட மேலான ஞானி ஒருவருமில்லை. ஆயர் புல்டன் சீன். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச.சூசையப்பரே  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ ஞானத்திற்க்கு முன் அற்ப மனித அறிவு வெறும் பூச்சியமே

Image
  மனிதன் கடவுளை மறந்துவிட்டு தன்னுடைய கைம்மண்ணளவு அறிவைக் கொண்டே அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான்.அப்போது அர்ச்சிஷ்டவர்கள் முட்டாள்களாகவும்,வேதசாட்சிகள் மதவெறியர்களாகவும், துறவிகள்,ஊமைகளாகவும் தோன்றுகிறார்கள். பாவசங்கீர்தனம் குருக்களின் கண்டுப்பிடிப்பாகவும்,திவ்விய நற்கருணை அஞ்ஞானத்தின் அடையாளமாகவும்,மோட்சம் குழந்தைத்தனமான கற்பனையாகவும்,சத்தியம் கற்பனைத் தோற்றமாகவும் தோன்றுகின்றன.மிக அதிகமான காரியங்களை அறிந்திருப்பது நல்லதுதான் ஆனாலும் தேவ ஞானத்திற்க்கு முன் தன் அற்ப மனித அறிவு வெறும் பூச்சியமே என்பதைத் தன் மரண வேளையில்தான் ஒருவன் கண்டுகொள்வான் என்றால் அது எவ்வளவு பரிதாபமானது . ஆயர் புல்டன் சீன். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வல்லமையான மகா பெரும் பரிந்துரையாளர் அர்ச்.சூசையப்பர்

Image
  சகல புனிதர்களும் தங்கள் பேரில் பக்தியுள்ளவர்களுக்காக இயேசு நாதரையும், தேவமாதாவைமையும் இரந்து மன்றாடுகிறார்கள்.ஆனால் பரிசுத்த சூசையப்பரோ தமது திவ்விய குமாரனாகிய சேசுவையும்,தம்முடைய பரிசுத்த பத்தினியாகிய தேவமாதாவையும் நோக்கி ஒரு பரிந்துரை செய்தால் அதை அவர்கள் கட்டளையாக ஏற்பார்கள். நாம் எவ்வளவு வல்லமையான மகா பெரும் பரிந்துரையாளரைக் கொண்டிருக்கிறோம்.இப்பேர்ப்பட்ட  சர்வ வல்லமையுள்ள ஒரு தகப்பனாரை நமக்களித்த கிருபைக்காக ஆண்டவருக்கு சதாகாலமும் நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம். பேராயர் ஜெர்சோன். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒருவன் தனக்குள்ளதையெல்லாம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தாலும், உலகமெல்லாம் திருயாத்திரைகள் சென்று சம்பாதிப்பதை விட அதிகப் பேறு பலன்களை பக்தியோடு ஒரு பூசை காண்பதன் மூலம் சம்பாதித்துவிடுகிறான். அர்ச்.பெர்னார்ட். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சம்மனசுகள் மனிதர்களைக் கண்டு பொறாமை கொள்வார்கள் என்றால் அது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான்.  திவ்விய நற்கருணைக்காகவே. அர்ச்.மாக்ஸிமிலியன் கோல்பே. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எவ்வளவு அதிக காலம் திவ்விய நற்கருணை உட்கொள்ளாமல் இருக்கிறாயோ அவ்வளவுக்கு உன் ஆன்மா பலவீனமடைகிறது.முடிவில் நீ திவ்விய சற்பிரசாதத்தின் மட்டில் ஆபத்தான முறையில் அலட்சியமுள்ளவனாக மாறிப்போகிறாய். புனித தொன்போஸ்கோ. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒருவனை நடன அரங்கிற்கு அழைத்துச்சென்று அங்கே தலைகீழாகக் கட்டித்தொங்கவிட்டால் அங்குள்ள கேளிக்கைகளை அவனால் அனுபவிக்க முடியுமா?பாவியின் நிலையும் அதுதான். உலக உல்லாசங்களுக்கு நடுவில் கடவுளின்றி இருக்கிற ஒருவனது ஆத்துமம் தலைகீழாக திருப்பப்பட்டது போல் இருக்கிறது.அவன் உண்டு குடிக்கலாம்,நடனமாடலாம்,ஆடம்பரமான உடைகள் அணிந்து பிறரால் மதித்துப்போற்றப்படலாம் கெளரவிக்கப்படலாம்,பெரும் உலக செல்வங்கள் அவனுக்குச் சொந்தமாகலாம் ஆனால் அவன் சமாதானத்தை கொண்டிருக்கமாட்டான்.கெட்டவர்களுக்கு சமாதானமில்லை.சமாதானம் கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது.கடவுள் தம் எதிரிகளுக்கு அல்ல,தம் நண்பர்களுக்கே அதை கொடுக்கிறார். அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் இரக்கமுள்ளவராக இருக்கிறாரே என்று பாவி சொல்கிறான்.அதை யார் மறுக்கிறார்கள்?உண்மைதான்.கடவுளின் இரக்கம் அளவற்றதுதான் எனவே நல்ல மனமுள்ளவர்களை கடவுள் குணப்படுத்துகிறார்.அவர்களின் பாவத்தை மன்னிக்கிறார்.ஆனால் பாவத்தில்  பிடிவாதமாக நிலைத்திருப்பவனை அவர் மன்னிக்க இயலாது."நான் இன்னும் இளைஞன்தான் என்று பாவி பதில் கூறலாம்.உண்மை நீ இளைஞன்தான் ஆனால் * கடவுள் வருடங்களையல்ல,பாவங்களையே கணக்கிடுகிறார் * . அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

கடவுள்,மனிதர்கள் மீது வைத்துள்ள இரக்கத்தின்,அன்பின் முடிவு நற்கருணை

Image
  *கடவுள்,மனிதர்கள் மீது வைத்துள்ள இரக்கத்தின்,அன்பின் முடிவு நற்கருணை* சர்வேசுரன் சர்வ வல்லபராக இருந்தாலும்,அவர் * திவ்விய நற்கருணைக்கு மேலான எதையும் நமக்குத் தர இயலாதவராய் * இருக்கிறார்.அவர் உன்னத ஞானமுள்ள வராக இருந்தாலும் * திவ்விய நற்கருணைக்கு மேல் எப்படித் தருவது என்று அறியாதிருக்கிறார் * ,அவர் அளவற்ற செல்வமுள்ளவராயிருந்தாலும் திவ்விய * நற்கருணைக்கு மேல் நமக்கு தர எதுவுமில்லாதவராக இருக்கிறார் * . புனித அகுஸ்தீனார். செங்கடலை இரண்டாக பிரித்த கடவுளை, கல்வாரியில் மரித்து உயிர்த்த ஒரே கடவுளை மனிதர்கள் நோகடிக்க முடியுமா ?  காயப்படுத்த முடியுமா ? முடியும்.  எந்த மதத்தினராலும் முடியாது.ஆனால் நற்கருணை உட்கொள்ளும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் மட்டுமே அவரை மிக மோசமாக காயப்படுத்த முடியும்.அவமானப்படுத்தமுடியும். எப்படி ? பாவசங்கீர்தனம் செய்யாமல் பாவத்தோடு நற்கருணை வாங்கினால் இந்த உலகத்தில் எந்த மனிதரும், எந்த மதத்தினரும் தர முடியாத வேதனையை ,காயத்தை நாம் நம் நற்கருணை ஆண்டவருக்கு கொடுக்கின்றோம்.இதுவே சத்தியம். "முட்களும் கற்களும் நிறைந்த இருட்டு பள்ளத்தில் என்னை அழுத்துவதுப்போல வேத...

பரிகாரம் பரிதியாகத்தின் அவசியம்

Image
  பரிசுத்தமும்,பரித்தியாகமும் செய்யத் தயாராகவும் இருக்கிற ஒரு ஆன்மா எனக்குக் கிடைத்தால் அந்த ஆன்மாவின் வழியாக நான் ஓராயிரம் ஆன்மாக்களை மட்டுமல்ல,ஒரு நாட்டின் ஆன்மாக்களை எல்லாம் காப்பாற்றுவேன். நமது ஆண்டவர் சகோதரி நற்றாலியாவிடம் வெளிப்படுத்தியது. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

கிறிஸ்துநாதர் அநுசாரம் -24

Image
சர்வேசுரன் பொறுமையாயிருக்கிறார்;ஏனெனில் நித்தியராயிருக்கிறார்".என்று அர்ச்.அகுஸ்தீன் சொல்லுகிறார்.ஆனால் பொறுமையின் நாட்கள் கடந்து போன பிறகு நீதியின் நாள் வரும்.அது பயங்கரத்திள்குரிய நாள்.அந்நாளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவது முடியாது.தங்களுடைய *செயல்களுக்கும் நினைவுகளுக்கும் கணக்குக் கொடுக்க* நித்திய நீதி அதிபருக்கு முன்பாக சகல மனிதரும் வரவேண்டியது ஒருநாள்! அந்த பயங்கரமான நாளை நினைத்துப்பார்.இதோ கல்லறைகளினின்று தூசியெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து உருவமெடுக்கினறது.உலகத்தின் எத்திசையிலும் நின்று மரித்தோருடைய கூட்டம் நீதி அதிபருடைய சமூகத்தில் வந்து சேருகின்றது.அங்கே எல்லா இரகசியங்களும் வெளியாகின்றன.மறைவிடமான மனசாட்சியில்லை. ஒவ்வொருவனும் தன் தீர்வையை எதிர்பார்கிறான்.மனிதர் பிரிக்கப்படுகிறார்கள்.தீர்ப்புச்சொல்ப்படுகிறது. நீதிமான்களுக்கு மோட்சம் திறந்திருக்கிறது.பாவிகளையோ நரகம் தன் வாயை அகலமாய் திறந்து விழுங்குகின்றது.பயங்கரத்திற்குரிய நாள்!சம்மனசுகளும் புண்ணியவானகளும் சேசுகிறிஸ்துநாதரைப் புடைச்சூழ்ந்து வர ,அவர் மகமையுள்ளவராய் மோட்சத்திற்கு எழுந்தருளிப் போகிறார்.பசாசுகள் பாவிகளைத் தள்ளிக் க...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு இரங்கி,அந்த துன்பத்தை இயன்ற மட்டும் நீக்குமாறு நம்மைத் தூண்டுவதே இரக்கம் ஆகும். அர்ச்.அகுஸ்தீனார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

திருப்பலியின் மகத்துவம்

Image
  திவ்விய பலி பூசையில் பக்தியோடு பங்குபெறும் ஒருவனுடைய மரணத் தறுவாயில்,அவன் பக்தியோடு எத்தனை பூசைகள் கண்டானோ,அத்தனை அர்ச்சிஷ்டவர்களை அவனைத் தேற்றவும் பாதுக்காக்கவும் நான் அனுப்புவேன் என்பதில் நீ நிச்சயமாயிருக்கலாம். நமது ஆண்டவர் ஜெர்த்ரூத்தம்மாளிடம் கூறியது.(1256-1302)

பாவசங்கீர்தனம் செய்யாமல் திவ்விய நற்கருணை வாங்கும் கத்தோலிக்க உறவுகளுக்கு

Image
  பாவத்தோடு திவ்ய நற்கருணை வாங்குபவன் தனது அருவருப்பான,  ஆசாபாசங்களுக்கு மத்தியில் தன் உயிருள்ள  கடவுளைக் குடியமர்த்துகிறான்.இச்செயலால் தனது இரட்சகரை மீண்டும் சிலுவையில் அறைகிற  கொலைக்காரனாகின்றான்.இந்த ஈன மனிதன் அதிபரிசுத்தரைத் தன் விபச்சாரமுள்ள ஆன்மாவோடு இணைக்கிறான்.இதனால் அக்கிரமத்திற்குத் தன்னையே விற்றுவிடுகிறான். அர்ச். ஜான் மரிய வியான்னி. குருக்களின் பாதுக்காவலர். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடவுளை முழுவதும் நேசிக்காமல் மோட்சத்திற்குள் நுழையமுடியாது

Image
  ஒவ்வொரு ஆன்மாவும் தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் எப்போதும் என்னை நேசிக்க கடமைப்பட்டிருக்கிறது.அப்படி என்னை நேசியாமலிருந்தால் அதில் வெற்றிடம் ஏற்படும்.அப்படி நேசியாமல் எத்தனை நாள்,எத்தனை மணிநேரம்,எத்தனை நிமிடம் வெற்றிடம் ஏற்படுமோ அந்த வெற்றிடங்கள் அன்பால் நிரப்பப்படும் வரையிலும் அவ்வான்மா மோட்சத்திற்குள் நுழைய முடியாது.அதை நிரப்ப வேண்டுமானால் எஞ்சியுள்ள தன் வாழ்நாளில் என்னை இடைவெளியின்றி இரட்டிப்பாக நேசிக்க வேண்டும்.அப்படிச் செய்து என்னை நேசிக்கும் கடமையைப் பூர்த்தி செய்யாவிட்டால் உத்தரிக்கிற ஸ்தலத்தின் நெருப்பால் அது செய்யப்படும்.நான் உன்னை விட்டு பிரிந்து உனக்கு நான் இல்லாதிருக்கும்போது நீ என்மீது கொள்ளும் அன்புத் தேடுதல் உன் அன்பை இரட்டிப்பாக்குகிறது.இந்த மிகுதிப்பாடான அன்பைக் கொண்டு,நேசியாமல் நீ விட்ட வெற்றிடங்களை நிரப்புவாய். நமதாண்டவர் சகோதரி மரிய லூசியாவிடம் கூறியது. இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

புண்ணியங்கள் செய்ய தாமதிப்பது நல்லதல்ல

Image
 சிலபேர் பாவத்தைவிடுவதற்கு இன்னும் நாள் இருக்கின்றது.புண்ணியத்தை மெள்ளச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள்.இந்த நினைவால் எத்தனை பெரிய மோசம் வருமென்று ஒருவரும் அறிவதில்லை.ஒருவன் நூறு வருடம் வாழந்தாலும் கடந்து போன நாட்களில் ஒரு நாளாவது அவன் கையில் உண்டோ?இனி வரப்போகிற வயதில் ஒரு நாழிகையாவது அவன் கையில் உண்டோ? எதுவுமில்லையே.நிகழ்காலத்தில் செய்வது மட்டுமே தன்னுடையதாயிருக்கிறது.கடவுள் கொடுத்தால் மட்டுமே எதிர்காலம் உண்டு.தன் கையில் உறுதியாக இல்லாத நாட்களிலே பாவத்தை விட்டு புண்ணியத்தை செய்வேன் என்று இப்போது அசட்டை செய்வது எப்படிபட்ட மடமையாயிருக்கின்றது. Rev.Fr.ஜோசப் பெஸ்கி(வீரமாமுனிவர்) இயேசுவுக்கே புகழ்! அன்னை மரியாயே வாழ்க!

பரிசுத்த திருக்குடும்பமே உத்தம மாதிரிகை

Image
  அர்ச்சிஷ்டவர்கள் பயின்ற முதல் பள்ளிக்கூடம் : நல்ல கத்தோலிக்க குடும்பமே!அங்கு தான் அவர்கள் மோட்சம் செல்லும் வழியை கற்றுக் கொண்டார்கள்.எல்லாக் குடுமபங்களின் உத்தம மாதிரிகை பரிசுத்த திருக்குடும்பம். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

கண்ணடக்கம்

Image
  உத்தமதனத்தை அடையும் வழிகள். கண்ணடக்கம்- கண்ணானது ஆத்துமத்தின் ஜன்னல் . இதன் வழியாகத்தான் சாவான பாவமும்,பசாசும் நம் இருதயத்தில் நுழையும். தகாத பார்வை ...., புண்ணியத்துக்கு அபாயம். கற்புக்கு நஞ்சு, பாவத்துக்கு தூண்டுகோல்,  தேவபக்தியின்முடிவு,  அர்ச்சிஷ்டதனத்தின் கல்லறை  நரகத்தின் தீப்பொறி. உன் பார்வையை கண்டிப்போடு காத்துக்கொள். அதிசங்.ரோத்தான் சுவாமி  இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !

கத்தோலிக்க ஞான உபதேசத்தை அறியாமல் இருப்பதே பிரச்சனைகளுக்கு காரணம்.

Image
  தற்காலத்தின் அசட்டைத்தனத்திற்கும்,ஒரு வகையில் ஆத்துமங்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதற்க்கும்,அதன் விளைவாக எழும் மோசமான தீமைகளுக்கும் முதன்மையான காரணம் தெய்வீகக் காரியங்களைப் பற்றிய அறியாமை தான். அர்ச்.பத்தாம் பத்திநாதர். இயேசுவுக்கே புகழ் !  அன்னை மரியாயே வாழ்க !

கடவுளை விட வலிமையானவர் எவருமில்லை

Image
  உண்மை பொய்களை விட வலிமையானது; அன்பு வெறுப்பை விட வலிமையானது, எல்லா எதிர்மறை சக்திகளையும் விட கடவுள் வலிமையானவர். ” -போப் பெனடிக்ட் XVI “Truth is stronger than lies; love is stronger than hatred, God is stronger than all adverse forces.”  -Pope Benedict XVI

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பூசை காணச் செல்லும் ஒருவன் எடுத்து வைக்கிற காலடிகள் அனைத்தும் ஒரு தேவதூதரால் எண்ணப்படுகின்றன.இவற்றிற்குப் பிற்பாடு கடவுளால் இந்த ஜீவியத்திலும்,நித்தியத்திலும் மிக உயர்ந்த சன்மானம் வழங்கப்படும். அர்ச்.அகுஸ்தீனார்.